சிங்கப்பெண்ணே சீரியல் நடிகருக்கு பிறந்த குழந்தை - அழகிய புகைப்படத்துடன் அவரே பகிர்ந்த பதிவு

By Dhilip Kumar · 23/5/2024

சிங்கப் பெண்ணே சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சின்னத்திரை சீரியல் ரசிகர்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைகளத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமீப காலமாக சன் டிவியில் புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் சிங்கப் பெண்ணே. தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு செல்கிறார் ஆனந்தி.

சிங்கப்பெண்ணே சீரியல்:

இவருடன் சில பெண்களும் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள் பலருமே புதுமுகம் தான்.

View this post on Instagram

A post shared by 𝘿𝙖𝙧𝙨𝙝𝙖𝙆 (@iamdarshak)

சீரியல் கதை:

இருந்தாலும் இந்த தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை டிஆர்பியில் முதலிடம் பிடித்திருக்கிறது. தற்போது சீரியலில் காதல் டிராக் தான் சென்று கொண்டிருக்கின்றது. மகேஷ், அன்பு, ஆனந்தி இவர்களுடைய லவ் தான்.

சீரியல் ட்ராக்:

இவர்களில் யார் ஜோடி சேரப் போகிறார்கள் என்பது தான் சீரியல் உடைய கதையே. இதை பார்க்க ரசிகர்களும் ஆவலுடன் இருக்கின்றார்கள். இந்த நிலையில் சிங்கப் பெண்ணே சீரியல் நடிகருக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தர்ஷத் பதிவு:

அதாவது, இந்த தொடரில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தர்ஷத். இவர் ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தன்னுடைய மகனின் புகைப்படத்தை நடிகர் தர்ஷத் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full