அன்று நான் ரகுமான் ஸ்டுடியோவில் பார்த்த திறமை இது தான் - நெகிழ்ச்சியில் பாடகி அனுராதா பாவுத்வா
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் பற்றி பிரபல இந்தி பாடகி அனுராதா பவுத்வால் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கொண்டிருந்தார்.
பின் இவர் இசை மீது இருந்த ஈடுபட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக்கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம். அதற்கு பின் பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் சினிமாவில் கால்தடம் பதித்தார். தமிழில் இவர் ‘ரோஜா’ படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டானது.
ஏ ஆர் ரகுமான் குறித்த தகவல்:
இதை தொடர்ந்து, கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். இப்படி 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான். தற்போது இவர் படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ஏ.ஆர் ரகுமான் பற்றி பிரபல இந்தி பாடகி அனுராதா பவுத்வால் அளித்திருக்கும் பேட்டி தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
அனுராதா பவுத்வால் பேட்டி:
அதில் அவர், இசை ஒரு விளக்கு போன்றது. ஒருவர் அதனுடைய சுவிட்சை போட்டதும் எல்லா மூலை முடுக்கும் வெளிச்சமாகிவிடும். நான் இதை ரகுமான்ஜியிடம் தான் பார்த்தேன். அவருடைய சொந்த வேலைகள் மட்டும் இல்லாமல் தன்னை சுற்றி இருப்பவர்களும் இசையில் செழிக்க வேண்டும் என்று நினைப்பவர். நான் ஒரு நாள் ரகுமான் ஜியின் ஸ்டுடியோவில் இருந்தேன். அங்கே ஒரு சின்ன பெண் ரெக்கார்டிங்கில் பாடிக்கொண்டிருந்தார்.
ரகுமான் ஸ்டுடியோவில் நடந்தது:
அந்தப் பெண் நல்ல முகபாவத்துடன் அழகாக பாடிக் கொண்டிருந்தார். அவரிடம் ரகுமான், எதை எப்படி எப்படி பாட வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அது ஒரு பெரிய கலை. அவர்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் எதை தவற விடுகிறீர்கள்? என்பது சரியாக உணர்ந்தால் மட்டுமே அப்படி சொல்ல முடியும். அது அவரிடம் நான் பார்த்த ரொம்ப அரிதான ஒரு திறமை. ரகுமான் பள்ளியிலிருந்து வரும் மாணவர்கள் வேற லெவல்.
ரகுமான் பற்றி சொன்னது:
சாதாரண ஆட்களுக்கு இது எல்லாம் தெரியாது. ரகுமான் ரொம்பவே அடக்கமான, நல்ல மனிதர். எவ்வளவோ உயரங்களை அடைந்த பிறகும் ஒரு அப்பாவி பள்ளி போல தான் இருக்கிறார். எந்தவித ஆடம்பரமும் மேனுபுலேட் செய்வது கிடையாது. அவரைப் போன்ற எளிய மனிதரை பார்ப்பதே ரொம்ப அரிது. இந்த தரம் தான் அவர் இசையிலும் வெளிப்படுத்துகிறது. அதனால் தான் பொதுமக்கள் அவருடைய இசையை நெருங்க உணர முடியும் என்று கூறியிருக்கிறார்.