'கர்மாவும் கடவுளும்' பதிலடி கொடுக்கட்டும் - திடீரென பாடகி சின்மயி போட்ட பதிவு , காரணம் இது தான்
தன்னை பற்றி எழும் சர்ச்சைகளுக்கு பாடகி சின்மயி கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் விவகாரம் தான் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது கமல் நடித்து இருக்கும் படம் தக் லைப்.
இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது.
இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து இருந்தது. தற்போது படக்குழுவினர் மும்முராக ப்ரோமோஷன் செய்து கொண்டு இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் முத்த மழை என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலை பாடகி தீ தான் பாடியிருக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த பாடலை பாடகி சின்மயி பாடி இருந்தார்.
தக் லைப் படம்:
அதோடு சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவிலும் பாடகி சின்மயி தான் முத்த மழை பாடலை பாடி இருந்தார். இதனால் இந்த பாடலை தீ பாடியது விட சின்மயி பாடி வெர்சன் தான் அழகாய் இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது என்று இருவரையும் ஒப்பிட்டு கமெண்ட்ஸ்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், இது தொடர்பாக அளித்த பேட்டியில் சின்மயி, என்னையும் தீயையும் ஒப்பிட்டு பேசுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் பாடிய பாடலுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. அன்று இசை வெளியீட்டு விழாவிற்கு தீ-யால் வர முடியவில்லை. அதனால் தான் அந்த பாடலை நான் பாடினேன்.
சின்மயி பேட்டி:
என்னுடைய வேலையை தான் நான் செய்தேன். பாடகி தீக்கு தனிப்பட்ட குரல் வளம் இருக்கிறது. அவருடைய முக பாவனை யாராலும் கொடுக்க முடியாது. என்னுடைய வெர்ஷனையும் தீ உடைய வெர்ஷனையும் ஒப்பிட்டு ஒரு மல்யுத்த போட்டி போல சோசியல் மீடியாவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கலைஞனாக அவர் பாடிய பாடலை நான் மதிக்கிறேன். இது எனக்கும் தீயிக்குமான போட்டி கிடையாது. அவர் வளர்ந்து வரும் பாடகி. இன்னும் 15 வருடங்கள் கழித்து அவர் நூறு சீன்மயி, 100 ஸ்ரேயா கோசலை கொண்ட திறன் பெற்றிருப்பார். அவருக்கு என்று ஒரு தனி இடமும் இருக்கிறது. எங்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது அவசியம் அற்றது என நினைக்கிறேன் என்று கூறி இருந்தார்.
சின்மயி பதிவு:
தற்போது சோசியல் மீடியாவில் சின்மயின் மீடு விவகாரம் தான் பேசும் பொருள் ஆகி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக சின்மயி தன்னுடைய முகநூல் பக்கத்தில், கடந்த சில வருடங்களாகவே நான் அனுபவித்த மோசமான வார்த்தைகள், அவமானங்கள், துன்புறுத்தல்கள், பொய்யர், விபச்சாரி, அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்ட பெண் என பல விமர்சனங்களை எதிர்கொண்டு தான் இருக்கிறேன். அது எல்லாவற்றையும் ஒரே மூலமான கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன். இப்போது நான் பெற்று வரும் ஆதரவுகளையும் பாலியல் வென்கொடுமை செய்பவர்களுக்கான ஆதரவையும் ஒரே மூலமான கடவுளுக்கு அர்ப்பணிக்கிறேன். கர்மாவும், கடவுளும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும், அவர்களின் ஆதரவு காரர்களுக்கும் பதிலடி கொடுக்கும். இந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தப்பிப் பிழைத்த அனைவருக்கும் இப்போது எனக்கு கிடைக்கும் ஆதரவு பெறட்டும். உண்மை வெல்லட்டும் என்று கூறியிருக்கிறார்.
சின்மயி குறித்த தகவல்:
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவர் பாடகி மட்டும் இல்லாமல் டப்பிங் கலைஞரும் ஆவார். இது ஒரு பக்கம் இருக்க, சின்மயி எப்போதுமே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுமைகள், அத்துமீறல், சமூக ப்ரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். மீடு விவகாரத்தை கொண்டு வந்ததே சின்மயி தான்.