15 வருஷத்தில் என்னையே பாடகி தீ விழுங்கி விடுவார் - ‘முத்த மழை’ பாடல் பற்றிய கேள்விகளுக்கு சின்மயி சொன்னது
முத்த மழை பாடல் தொடர்பாக எழும் சர்ச்சைகளுக்கு பாடகி சின்மயி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. தற்போது கமல் நடித்து இருக்கும் படம் தக் லைப்.
இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.
தக் லைப் படம்:
இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து இருந்தது. இந்த விழாவிற்கு தக் லைப் பட குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் வருகை தந்திருந்தார். தற்போது படக்குழுவினர் மும்முராக ப்ரோமோஷன் செய்து கொண்டு இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் முத்த மழை என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது.
https://www.youtube.com/watch?v=YbCF6OqTWug
முத்த மழை பாடல்:
இந்த பாடலை பாடகி தீ தான் பாடியிருக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த பாடலை பாடகி சின்மயி பாடி இருந்தார். அதோடு சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவிலும் பாடகி சின்மயி தான் முத்த மழை பாடலை பாடி இருந்தார். இதனால் இந்த பாடலை தீ பாடியது விட சின்மயி பாடி வெர்சன் தான் அழகாய் இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது என்று இருவரையும் ஒப்பிட்டு கமெண்ட்ஸ்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.
சின்மயி பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சின்மயி, என்னையும் தீயையும் ஒப்பிட்டு பேசுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் பாடிய பாடலுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. அன்று இசை வெளியீட்டு விழாவிற்கு தீ-யால் வர முடியவில்லை. அதனால் தான் அந்த பாடலை நான் பாடினேன். என்னுடைய வேலையை தான் நான் செய்தேன். பாடகி தீக்கு தனிப்பட்ட குரல் வளம் இருக்கிறது. அவருடைய முக பாவனை யாராலும் கொடுக்க முடியாது. என்னுடைய வெர்ஷனையும் தீ உடைய வெர்ஷனையும் ஒப்பிட்டு ஒரு மல்யுத்த போட்டி போல சோசியல் மீடியாவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=9m7XBPdezIE
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி:
ஒரு கலைஞனாக அவர் பாடிய பாடலை நான் மதிக்கிறேன். என்னுடைய 20 வயதில் இப்படி ஒரு பாடலை என்னால் பாடி இருக்க முடியாது. குரல் நுணுக்கங்களை அடைய எனக்கு நீண்ட கால அனுபவம் தேவைப்பட்டது. இது எனக்கும் தீயிக்குமான போட்டி கிடையாது. அவர் வளர்ந்து வரும் பாடகி. இன்னும் 15 வருடங்கள் கழித்து அவர் நூறு சீன்மயி, 100 ஸ்ரேயா கோசலை கொண்ட திறன் பெற்றிருப்பார். அவருக்கு என்று ஒரு தனி இடமும் இருக்கிறது. எங்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது அவசியம் அற்றது என நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்