வைரமுத்து பெயரை நான் மட்டும் சொல்லவில்லை - மீண்டும் பஞ்சாயத்தை கிளப்பிய பாடகி சின்மயி

By subhashini · 11/6/2025

கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் விவகாரம் தான் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது கமல் நடித்து வெளியாகி இருக்கும் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து இருந்தது.

இந்த படத்தில் முத்த மழை என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலை பாடகி தீ தான் பாடியிருக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த பாடலை பாடகி சின்மயி பாடி இருந்தார். ஆனால், இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி தான் முத்த மழை பாடலை பாடி இருந்தார். இந்த பாடலை கேட்டு எல்லோரும், தீ பாடியது விட சின்மயி பாடிய வெர்சன் தான் அழகாய் இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது என்று இருவரையும் ஒப்பிட்டு கமெண்ட்ஸ்களை போட்டு இருந்தார்கள். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சின்மயி, என்னையும் தீயையும் ஒப்பிட்டு பேசுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

தக் லைப் படம்:

என்னுடைய வேலையை தான் நான் செய்தேன். பாடகி தீக்கு தனிப்பட்ட குரல் வளம் இருக்கிறது. அவருடைய முக பாவனை யாராலும் கொடுக்க முடியாது. எங்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது அவசியம் அற்றது என நினைக்கிறேன் என்று கூறி இருந்தார். இருந்தாலும் சின்மயின் குரலைக் கேட்டு பலருமே பாராட்டி இருக்கிறார்கள். இந்தக் குரலையாட இத்தனை வருடமாக பேன் செய்து வைத்திருந்தீர்கள்? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு இருக்கிறார்கள். இதை அடுத்து சின்மயி, தமிழ் சினிமாவில் பாட தடை விதிக்கப்பட்டதும் அவர் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து நிறைய செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

சின்மயிக்கு ஆதரவு:

அதனால் நாளுக்கு நாள் சின்மயிக்கு ஆதரவுகள் பெருகிக்கொண்டே வருகிறது. அது மட்டும் இல்லாமல்
பாடலாசிரியர் வைரமுத்து மீது தன்னுடைய குற்றச்சாட்டுகளை மீண்டும் சின்மயி கூறிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் இது தொடர்பாக சின்மயி, அனைவரின் ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். திரு. வைரமுத்துவின் பெயரை குறிப்பிட்டவர் நான் மட்டும் கிடையாது. அந்த விவகாரத்தில் சுமார் 16 முதல் 17க்கும் மேற்பட்ட பெண்களும் புகார் அளித்திருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவர் என்பதை மட்டும் தான் மக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

சின்மயி பதிவு:

சில வருடங்களாகவே வைரமுத்துவின் பெயரை குறிப்பிட்டு குற்றம் சாட்டியதால் பல பிரச்சனைகளை நான் சந்தித்தேன். அவரால் பிழைத்துக் கொண்டிருக்கும் சிலரால் நான் அழிக்கவும் பட்டேன். நான் சொன்ன குற்றசாட்டுகள் அப்போது கேட்கப்படவில்லை. இருந்தாலும் இப்போது என்னுடைய பெயர் கேட்கப்படுகிறது. திறமை, தொழில் வெற்றிகரமாக இருந்திருக்கக்கூடிய அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். நான் தனிப்பட்ட முறையில் இழந்த காலத்திற்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நம் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

சின்மயி-வைரமுத்து விவகாரம்:

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவர் பாடகி மட்டும் இல்லாமல் டப்பிங் கலைஞரும் ஆவார். இது ஒரு பக்கம் இருக்க, சின்மயி எப்போதுமே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுமைகள், அத்துமீறல், சமூக ப்ரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும், வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full