ஐயப்ப பக்தர்களை இழிவுபடுத்திவிட்டதாக சர்ச்சையில் சிக்கி இருக்கும் நீலம் அமைப்பின் இசை வாணி

By subhashini · 23/11/2024

பா.ரஞ்சித் மற்றும் இசைவாணி மீது அனைத்து ஐயப்பன் பக்த சங்கத்தினர் புகார் கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் கானா பாடகர் இசைவாணி. இவர் வடசென்னை பூர்வீகமாகக் கொண்டவர். இவரை அனைவரும் கானா இசைவாணி என்றுதான் அழைப்பார்கள். தனக்கு உரிய கானா பாடலின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் இசை.

குறிப்பாக ‘பெரிய கறி’ என்ற பாடலை பாடியதன் மூலம் இசைவாணி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பெண்கள் கால்பதிக்க தயங்கும் கானா இசை துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான் இவருடைய கனவு, லட்சியம். அதுமட்டும் இல்லாமல் 2020 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய கானா திறமையை வெளிப்படுத்தி உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசி தேர்வு செய்து பெருமைப்படுத்தியது ஒருவராக என்பது குறிப்பிடத்தக்கது.

இசைவாணி குறித்த தகவல்:

அதன் பின் தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். அதோடு இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று இருந்தார். இதை பற்றி இவர் பிக் பாஸ் வீட்டில் பேசி இருந்தார். மனக்கசப்பால் இருவரும் பிரிந்து விட்டார்கள். இருந்தாலும், இவர் தன்னுடைய கானா பாடலில் சாதிக்க வேண்டும் என்று போராடி கொண்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் நிறைய இசை கச்சேரிகளில் பாடி இருக்கிறார்.

இசைவாணி பாடல்:

இப்படி இருக்கும் நிலையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இசைவாணி பாடி இருக்கிறார் என்று எழுந்து இருக்கும் புகார் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இசைவாணி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். இதனால் இவர் நிறைய கிறிஸ்துவ மத பாடல்களை பாடி இருக்கிறார். அதோடு இவர் தன்னுடைய கானா மூலம் இவர் தன் மதத்தை மற்றவர்களுக்கும் பரப்புகிறார்.

ஐயப்பன் பகதர்கள் ஆவேசம்:

அந்த வகையில் இவர் பா.ரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாண்டு மையத்தின் இசை கச்சேரி விழாவில் நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். குறிப்பாக, இவர் 'ஐ அம் சாரி ஐயப்பா' என்ற பாடலை நிறைய கச்சேரிகளில் பாடி இருக்கிறார். இது மிகப்பெரிய அளவில் வைரலாக, பலருமே கண்டனமும் தெரிவித்து இருந்தார்கள். அதோடு இவர் 'ஐ அம் சாரி ஐயப்பா' பாடலில் இந்து மதத்தை தாழ்த்தியும், கிறிஸ்தவ மதத்தை புகழ்ந்தும் பாடி இருக்கிறார்கள். கடந்த மாதம் நடந்த மார்கழி மக்கள் இசையில் கூட இவர் இந்த பாடலை பாடியிருந்தார்.

இசைவாணி மீது புகார்:

இவர் ஐயப்பன் பக்தர்களை தாக்கி தான் இப்படி எல்லாம் பாடியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. கார்த்திகை மாதம் ஐயப்பன் கோயிலுக்கு பலருமே மாலை போடுவார்கள். இந்த சமயத்தில் இவர் இப்படி பாடி பாடல்களை வெளியிடுவது ரொம்ப தவறு என்றும் ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்துவது வகையில் பாடல்கள் இருக்கிறது என்றும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் பா. ரஞ்சித் மற்றும் இசைவாணியின் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அனைத்து பக்தர் சங்கத்தினர் புகார் கொடுத்து இருக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full