நான் உயிரோட இருக்க இவர் தான் காரணம், நடந்த உண்மை - விளக்கம் கொடுத்த பாடகி கல்பனா
தன்னை குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாடகி கல்பனா வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் கல்பனா ராகவேந்தர். இவர் தமிழில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தான் இவர் பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடியிருக்கிறார். கல்பனாவின் தந்தை ராகவேந்தர். இவர் பிரபலமான நடிகர் ஆவார். இவர் ஸ்ரீ ராகவேந்திரா, சிந்து பைரவா, வைதேகி காத்திருந்தாள் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.
மேலும், கல்பனா தன்னுடைய தந்தையின் மூலமாக தான் இவருக்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு இவர் டப்பிங், பாடல், நடிப்பு என்று இவர் தன்னுடைய கேரியரை தொடங்கினார். இவர் தமிழ் மொழியை விட அதிகம் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தான் பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் பாடிய பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறது. அதற்குப்பின் இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.
பாடகி கல்பனா குறித்த தகவல்:
அது மட்டும் இல்லாமல் இவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் பாடகி கல்பனா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கல்பனா அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள நிசாம் பேட்டை பகுதியில் தான் வசித்து வந்திருக்கிறார். கடந்த சில தினங்களாகவே இவருடைய வீட்டின் கதவு திறக்கவே இல்லை. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் பட்டு கல்பனா வீட்டு வாசலின் கதவை தட்டி இருக்கிறார்கள். யாரும் யாரும் திறக்கவில்லை என்றவுடன் கல்பனாவின் உறவினர்களுக்கு தகவலை சொல்லி இருக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=7imTAqNQEyk
கல்பனா தற்கொலை முயற்சி:
அது மட்டும் இல்லாமல் போலீசுக்கும் தகவல் அளித்திருக்கிறார்கள். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் கல்பனா வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள். அப்போது கட்டிலில் கல்பனா மயங்கி நிலையில் கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருந்தார்கள். தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டும் வந்திருக்கிறார். கல்பனா சிகிச்சையில் தான் இருக்கிறார். தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு கல்பனா தற்கொலைக்கு முயற்சித்திருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், இதை கல்பனாவின் மகள் மறுத்திருக்கிறார்.
பாடகி கல்பனா வீடியோ:
இந்நிலையில் இது தொடர்பாக பாடகி கல்பனா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் எல்பி மற்றும் பிஎச்டி படிப்புகளை படித்து வருகிறேன். அதே நேரம் இசையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். இதனால் எனக்கு நிறைய மன அழுத்தம் ஏற்பட்டது. ரொம்ப நாட்களாகவே எனக்கு சரியாக தூக்கமும் வரவில்லை. இந்த பிரச்சனைக்காக நான் மருத்துவரை சந்தித்தேன். அவர், இன்சோம்னியா என்ற நோயால் நான் பாதிக்கப்பட்டு இருப்பதாக சொன்னார். அதற்காக எனக்கு மருந்துகளும் கொடுத்திருக்கிறார்கள். அந்த நாளில் மருத்துவர் கொடுத்த மாத்திரைகள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது.
நடந்த உண்மை:
அதனால் தான் எனக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு நான் மயங்கி நிலையில் சென்றேன். இப்போது நான் உயிரோடு திரும்பி வந்ததற்கு காரணம் என்னுடைய கணவர் தான். அவர் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார். வெளியூரில் இருந்தாலுமே சரியான நேரத்தில் போலீஸ் உதவியோடு என்னை காப்பாற்றினார். அதனால்தான் நான் உயிர் பிழைத்தேன். எனக்கு தனிப்பட்ட பிரச்சனை எதுவும் கிடையாது. கடவுள் அருளால் எனக்கு நல்ல குடும்பம் கிடைத்திருக்கிறது. என்னைப் பற்றி தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.