சினிமா பிரபலம்னா சேற்றை வாரி அடிப்பீர்களா? உங்க அக்கா தங்கச்சிக்கு ப்ரச்சனை இல்லையா? ஆவேசத்தில் பாடகி கல்பனா
தன்னைக் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாடகி கல்பனா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் கல்பனா ராகவேந்தர். இவர் தமிழில் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தான் பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடியிருக்கிறார். அதோடு இவர் டப்பிங், பாடல், நடிப்பு என்று பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் தமிழ் மொழியை விட அதிகம் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தான் பணியாற்றி இருக்கிறார்.
மேலும், இவர் பாடிய பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறது. அதற்குப்பின் இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாக பாடகி கல்பனா குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, கல்பனா அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள நிசாம் பேட்டை பகுதியில் தான் வசித்து வந்திருக்கிறார். கடந்த சில தினங்களாகவே இவருடைய வீட்டின் கதவு திறக்கவே இல்லை. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் பட்டு போலீசுக்கு தகவல் அளித்திருந்தார்கள். பின் போலீஸ் கல்பனா வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இருந்தார்கள்.
கல்பனா உடல்நிலை:
அப்போது கட்டிலில் கல்பனா மயங்கி நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருந்தார்கள். அதோடு கல்பனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்திருந்தார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். இது குறித்து பல செய்திகள் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதை அடுத்து பாடகி கல்பனா விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், எனக்கு நிறைய மன அழுத்தம் ஏற்பட்டதால் . சரியாக தூக்கமும் வரவில்லை. அதற்காக நான் எடுத்த மாத்திரைகள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது. அதனால் தான் எனக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு மயங்கி விழுந்தேன்.
கல்பனா வீடியோ:
இப்போது நான் உயிரோடு திரும்பி வந்ததற்கு காரணம் என்னுடைய கணவர் தான். எனக்கு தனிப்பட்ட பிரச்சனை எதுவும் கிடையாது. கடவுள் அருளால் எனக்கு நல்ல குடும்பம் கிடைத்திருக்கிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாடகி கல்பனா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், இந்த சம்பவத்தின் மூலம் எனக்கு தவறான வகையில் பப்ளிசிட்டி கிடைத்திருக்கிறது. முதலில் நான் தற்கொலை முயற்சி செய்யவே இல்லை. ஒவ்வொருத்தருக்கும் உடல் ரீதியாக ஒவ்வொரு பிரச்சினை இருக்கு. அதே போல் தான் உடல் ரீதியாக எனக்கு பல பிரச்சனைகள் இருக்கிறது. நான் மெனோபாஸ் கட்டத்தை நெருங்கி இருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=TzFu6Jf45As
கல்பனா பேட்டி:
ஒரு பெண் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எவ்வளவு விஷயங்களை சுமந்து கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்வதே கிடையாது. ஒரு நல்ல செய்தி என்றால் பத்து பேரை தான் சென்றடைகிறது. ஆனால், ஒரு தவறான செய்தி என்றால் ஆயிரம் பேரையும் கடந்து விடுகிறது. நானும் ஒரு சாதாரண மனுஷி தான். எனக்கும் எல்லா பிரச்சனைகளும் இருக்கு. என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரே உண்மை நன்மை என்னுடைய எனக்கு நல்ல கணவர் அமைந்ததால் என்னுடைய கணவர் எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருக்கிறார். அன்றைக்கு நான் போனில் என் கணவருடன் பேசிக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தேன். அவர் உடனே காவல்துறைக்கும், ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்து வரவழைத்து என்னுடைய உயிரை காப்பாற்றினார். உண்மை என்று என்னவென்று தெரியாமல் நான் தற்கொலை செய்ய முயற்சித்தேன் என்று தேவையில்லாத செய்திகள் எல்லாம் போடுகிறீர்கள்.
https://www.youtube.com/watch?v=3yRDEhkRibo
கல்பனா ஆதங்கம்:
எதற்கு பிரபலங்கள் மீது சேற்றை வாரி அடிக்கிறீர்கள்? இந்த மாதிரி தவறான செய்திகளால் பல பேருக்கு மன உளைச்சலுமே ஏற்படுகிறது. எனக்கு நடந்தது இது தான் என்று சம்பந்தமே இல்லாத வீடியோக்களை எல்லாம் போட்டு இருக்கிறார்கள். உண்மையில் எனக்கு என்ன நடந்தது என்று அவர்களுக்கு எப்படி தெரியும்? நானும் ஊடகங்களை எப்போதும் மதிப்பவள். அவர்கள்தான் என் குரலை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். ஆனால், அவர்களில் சிலர் ஏன் இப்படி வதந்திகளை பரப்புகிறார்கள்? அதனால் என்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய எனக்கு அதிக நேரம் ஆகிறது. அதை நீங்கள் கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டும். சினிமாக்காரர்கள் என்றால் ஏன் உங்களுக்கு அவ்ளோ மட்டமா? உங்க வீட்டில் அக்கா தங்கச்சிக்கு பிரச்சனை இல்லையா? உயிர் போகிற தருணத்தில் இருக்கிற போது போட்டோ எடுக்குறதுக்கு பெட்ஷீட் எடுக்க சொல்லி போட்டோ எடுத்துட்டு, இப்போ போங்கன்னு சொல்றீங்க. இதே மாதிரி அண்ணா பல்கலை சம்பவம் போட்டோ வீடியோ கிடைத்தால் உடனே யோசிக்காமல் ஷேர் பண்ணுவீங்களா? எந்த மாதிரி சமூகத்தில் நாம வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.