என்னோட சோல்மேட்ட பாத்துட்டேன், அவர் இப்படிப்பட்டவர் தான் - பாடகி கெனிஷா எஸ்க்குளுசிவ்
தன்னை பற்றிய சர்ச்சைகளுக்கு பாடகி கெனிஷா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஆர்த்தி-ரவி சர்ச்சை தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இது தொடர்பாக ஆர்த்தி, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி இருந்தார். அதோடு ரவி-ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது.
இப்படி இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது.
அதன் பின் ரவி -ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவிற்கு சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தான் நடிகர் ரவி அவர்கள் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார். இருவருமே மேட்சிங் உடை அணிந்திருந்தார்கள். இது தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர்,
என் மௌனத்தை கலைக்கிறேன், என் குழந்தைகளுக்காக, கடந்த ஒரு வருடமாக மௌனத்தை ஒரு விரதமாகவே மேற்கொண்டு வருகிறேன்.
ரவி-ஆர்த்தி விவகாரம்:
இதற்கு காரணம் நான் பலகீனமானவள் என்பது அல்ல. என் பேச்சை விட என்குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை மிகவும் முக்கியம் எனக்கருதியதால் தான் அந்த விரதம். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பழிச்சொற்கள், வசைகள் அனைத்தையும் மௌனமாகவே தாங்கிக்கொண்டேன். என் பக்கம் உண்மையும் நியாயமும்இருந்தும் நான் பேசாமல் இருந்ததற்கு காரணம் என் குழந்தைகளுக்கு தந்தை மற்றும் தாய் இருவரிடையே யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்துவிடக்கூடாது என்பதுதான். இன்றைக்கு உலகம் கூர்ந்து பார்க்கும் காட்சிகளும், நாடகங்களும் வேறு, நடந்த உண்மை என்பது முற்றிலும் வேறு. எங்கள் விவாகரத்து வழக்கு இன்னும் சட்டபூர்வமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால், 18 வருடங்களாக நான் காதலுடனும், நம்பிக்கையுடனும் கைகோர்த்து நடந்த ஒரு மனிதன் என் கைகளை மட்டுமல்ல தன் பொறுப்புகளில் இருந்தும் கைகழுவி சென்று இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.
கேனிஷா பதிவு:
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கெனிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராமில், பவாழ்வில் வெல்ல வேண்டும் என்ற கனவுகள் கொண்டவர்களுக்கு இரண்டு தேர்வுகள் இருக்கிறது. ஒன்று ஆதரவான துணை இருக்க வேண்டும் அல்லது துணையே இல்லாத வாழ்க்கை தான் கிடைக்கும் என்று கூறியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது அளித்த பேட்டியில் கெனிஷா, உலகத்தில் மொத்தம் ஏழு சோல்மேட் இருப்பதாக சொல்கிறார்கள். அதை பலருமே கட்டுக்கதை என்கிறார்கள். ஏழை இல்லை என்றாலும் குறைந்தபட்சம் ஒரு சோல்மேட்யாவது எல்லோரும் இருப்பார்கள். அவர்களை காண முயற்சி செய்ய வேண்டும். அதற்காக நான் உறுதிமொழி எல்லாம் எடுத்துக் கொண்டேன்.
https://www.youtube.com/watch?v=YuA_mcqCEzY
சோல்மேட் பற்றி சொன்னது:
உண்மையிலேயே ஏழு சோல் மேட்டை பார்ப்பதற்குள் நம் முடியெல்லாம் நிரைத்து போய் வயதாகிடுவோம். நானும் இத்தனை வருஷமாக என்னுடைய சோல் மேட்டை பார்க்க வேண்டும் என்று தான் காத்திருந்தேன்.
இப்போதைக்கு இரண்டு சோல் மேட் பார்த்திருக்கிறேன். ரெண்டு பேரில் ஒருவர் பெண். அவருக்கும் எனக்கும் சண்டையே வராது. நாங்கள் ரொம்ப வருஷமாக கிளோஸ் ஆக இருக்கிறோம். எங்களுக்குள் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது. இந்த இரண்டாவது சோல் மேட் ரொம்பவே வித்தியாசமானவர். என்னை மாத்தினவர். நம் கண்ணை எப்படி திறந்தார்கள் என்று தெரியாது. எனக்கு பாதுகாப்பாக, உறுதுணையாக, மரியாதை கொடுப்பவராக, விருப்புத்தன்மை இல்லாதவராக, எதிர்பார்ப்பு இல்லாதவராக, கோபம் இல்லாதவராக இருப்பவர் தான் என்னோட சோல்மேட்.
விமர்சனங்கள் பற்றி சொன்னது:
எனது குழந்தை தனம் இல்லை. இருந்தாலும் குழந்தையாக இருக்கிறது ரொம்ப பிடிக்கும். நான் எப்போது இறந்து போவேன் என்று எனக்கு தெரியாது. அதனால் நான் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை. எனக்கும் யாரும் கெடுதல் செய்ய வேண்டாம். இருக்கிற வரைக்கும் சந்தோஷமாக இருப்பேன். என்னை சுற்றி நிறைய நெகட்டிவ் கமெண்ட் எல்லாமே வருகிறது. அது எதுவும் என்னோட பிரச்சனை கிடையாது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷமாக இல்லை என்று அடுத்தவர்கள் மீது திணிக்கிறீர்கள். அதுக்காகத்தான் என் மீது பழி போடுகிறீர்கள். அது உங்களோட ஃபீலிங். உங்களோட மெண்டல் ஹெல்த். அதனால் நீங்க சொல்றதுக்கு எல்லாம் நான் பீல் பண்ணனுமா என்ன? என்று கூறியிருக்கிறார்.