'போச்சி, இனி எல்லா பாட்டும் இவ தான் பாடுவா' - ரசிகர் கமெண்டால் நொந்து போய் சூப்பர் சிங்கர் ரக்ஷிதா போட்ட உருக்கமான பதிவு.

By Siva · 21/1/2023

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா சுரேஷ். இவர் தன்னுடைய இளமையான குரலின் மூலம் ரசிகர்களை கவர்ந்து முன்னணி பாடகியாக இசை துறையில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தன்னுடை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயனாளர் ஒருவர் போட்டிருக்கும் பதிவிற்க்கு பதிலளிக்கும் வகையில் போட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் :

2009ஆம் ஆண்டு ஏசியாநெட்டில் ஒளிபரப்பான "லிட்டில் சூப்பர் சிங்கர்" நிகழ்ச்சியில் பங்கேற்ற ரக்ஷிதா அதன் மூலம் பிரபலமானர். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான "சூப்பர் சங்கர்" நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் பிரபலமாக ஆனார் . அந்த போட்டியில் ரன்னர் அப் ஆன பிறகு பரவலான பாராட்டுகளை பெற்றிருந்தார். சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் கோல்டன் வாய்ஸ் என அறியப்பட்டார் அவருக்கு பின்னர் பல விதமான வாய்ப்புகள் கிடைத்தன.

பெரிய படங்களில் வாய்ப்பு :

தற்போது பாடகி ரக்ஷிதா பல்வேறு திரைப்படங்களில் முன்னணி பாடகியாக பாடல்களை பாடி வருகிறார். உதாரணமாக பொன்னியின் செல்வன், கோப்ர மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமானுடன் இணைந்து பாடிய பாடினால் இவருக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே வந்து விட்டது. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆகிட்டிவாக இருக்கும் அவர் 7 லட்சம் பின்தொடர்பவர்களுக்கு மேலே வைத்திருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Rakshita Suresh (@rakshitasuresh)

எதிர்மறை இன்ஸ்டா பதிவு :

இந்த நிலையில் தான் இவரை இன்ஸ்டாவில் பின்தொடரும் ஒரு நபர் "போச்சு எல்லாம் பாட்டும் இவதான் படுவா. பழம்பெரும் பாடகர்களுக்காக நாங்கள் காத்திருந்தோம் ஆனால் எங்களுக்கு சூப்பர் சிங்கர் கிடைத்துள்ளார்” என்று இவர் பாடுவதினால் பழம் பெரும் பாடகர்கள் பாடுவதை நம்மால் பார்க்க முடியாது என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்து மனமுடைந்த ரக்ஷிதா சுரேஷ் இந்த பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

பதிலளித்த ரக்ஷிதா சுரேஷ் :

அவர் போட்டிருக்கும் பதிவில் " நான் பொதுவாக எதிரிமாரை கருத்துக்களை புறக்கணித்து விடுவேன், ஆனால் இது போன்ற எதிர்மறை கருத்துக்கள் வளர்ந்து வரும் கலைஞர்களை பாதிக்கலாம். அதனால் இதை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். பழம் பெரும் நடிகர்கள் தங்களுடைய வாழ்க்கையை எங்கேயோ தொடங்கி வாய்ப்புகளில் மூலம் தான் அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக உருவாக்கி இருக்கின்றனர். நான் எனக்கு வாய்ப்புகளை கொடுக்கும் அனைவருக்கும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

ஏஆர் ரகுமான் கிடைத்திருக்க மாட்டார் :

மேலும் பதிவிட்ட அவர் "இன்றைய நிலையை அடைய நாம் அனைவரும் பல வருடங்களாக மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். இது நிச்சயமாக எனக்கு எளிதான பயணமாக இருந்தது இல்லை, ஆனால் ஒவ்வொரு நாளும் உங்களுடைய அணைத்து ஆசீர்வாதங்களுக்கும் நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எப்பொழுதும் எதிர்மறையை புறக்கணித்து அதை தடுப்பது என்றாலும், சில நேரங்களில் அது என்னை மிகவும் மோசமாக பாதிக்கிறது.

உருக்கமான பதிவு :

உங்களுக்கு உங்களுடைய கருத்துக்களை கூற எல்லா உரிமைகளும் இருக்கின்றன.நீங்கள் விரும்பும் அளவுக்கு உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள், ஆனால் அதைச் செய்வதற்கு ஒரு வழி இருக்கிறது. நீங்கள் அதைப் பற்றி மிகவும் முரட்டுத்தனமாகவும், எதிர்மறையாகவும், இரக்கமற்றவராகவும் இருக்க வேண்டியதில்லை. முயல்வோம், முயற்ச்சிப்போம் என்று உருக்கமான பதிவிட்டிருந்தார் பாடகி ரக்ஷிதா சுரேஷ்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full