என் கணவர் பாடகர்னு யாருக்குமே தெரியாது, குடும்ப நிலை ரொம்ப மோசமா இருக்கு - கண் கலங்கும் ரிச்சர்ட் மனைவி

By subhashini · 22/4/2026

ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் இசையில் பிரபல பாடல்களை பாடி இருந்தவர் பாடகர் ரிச்சர்ட் ஆலிசன் நாதன். எங்கேயும் எப்போதும் படத்தில் இடம்பெற்ற நங்கை, நண்பேண்டா படத்தில் இடம்பெற்ற நீ மூனோ, அனிருத் இசையில் ரெமோ படத்தில் இடம்பெற்ற மீசை பியூட்டி போன்ற பாடல்களை பாடியவர் ரிச்சர்ட். இவர் தன்னுடைய திறமையின் மூலம் நிறைய நல்ல பாடல்களை பாடியிருக்கிறார். தற்போது இவர் ஒரு கை மற்றும் வாயில் பாதிப்பு ஏற்பட்டு பக்கவாதம் வந்து முடங்கி கிடக்கிறார். பலருக்கும் இவர் யார் என்றே தெரியாது.

தற்போது இவரின் நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது. இதை அறிந்த கே பி ஒய் பாலா, பாடகர் ரிச்சர்டை நேரில் சந்தித்து அவருக்கு உதவி செய்திருக்கிறார். நேரில் சென்ற பாலா ஐம்பதாயிரம் ரூபாய் பண உதவி கொடுத்து நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு மீண்டு வரவேண்டும். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறேன் என்று ஆறுதல் சொல்லியும் வந்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ரிச்சர்டின் நிலைமை குறித்து அவருடைய மனைவி அளித்த பேட்டியில்,
என்னுடைய கணவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டுதான் பக்கவாதம் ஏற்பட்டது.

ரிச்சர்ட் நிலை:

அப்போதிலிருந்து எங்களுக்கு ரொம்பவே கஷ்டமான காலம் தொடங்கிவிட்டது. அதிலிருந்து நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறோம். என்னுடைய கணவர் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். ஆனால், இவர் பாடின பாடல்கள் பற்றி யாருக்குமே தெரியவில்லை. சொல்லப்போனால் இவர் ஒரு பாடகர் என்பதே நிறைய பேருக்கு தெரியாது. காரணம், இதைப்பற்றி வெளியில் தெரியப்படுத்த வேண்டாம் என்று இருந்து விட்டார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சில பாடல்களை பாடி இருக்கிறார். எங்களுக்கு பொருளாதார ரீதியாக கஷ்டங்கள் இருந்தும் இந்த விஷயத்தை அவர் வெளியே சொல்லவில்லை. என் கணவரை நேரில் வந்து பார்த்து கேபிஒய் பாலா உதவி செய்திருந்தார்.

View this post on Instagram

A post shared by Balan Akassh Balaiyan jaganathan (@bjbala_kpy)

ரிச்சர்ட் மனைவி பேட்டி:

அவரைப் போல இன்னும் சில பேர் போன் பண்ணி பேசினார்கள். ஆனால், நேரடியாக யாரும் வந்து இதுவரைக்கும் பார்க்கவில்லை. நாங்கள் உதவிகள் கிடைக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். சொல்லப்போனால், என்னுடைய கணவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அவர் எப்பவுமே குடும்பம் தான் முக்கியம் என்று யோசிப்பார். பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும் குடும்பத்தை காப்பாத்தணும் ரொம்ப என்று உழைத்துக் கொண்டே இருந்தார். அதற்காகவே தொடர்ந்து வேலை வேலை என்று இருந்தார். அப்படி இருந்ததனாலே அவருக்கு பயங்கரமான மன அழுத்தம் ஏற்பட்டது. என்னுடைய கணவர் இந்த நிலைமைக்கு அழுத்தம் தான் முக்கியமான காரணம் என்று டாக்டர் சொன்னார்கள். அதுக்கு கொரோனா காலம்தான் காரணம். என் கணவர் முழுமையாக மியூசிக் பக்கம் தான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

குடும்ப நிலை:

கோவிட் சமயத்தில் தான் இரண்டு வருடங்கள் வேலையில்லாமல் போனது. அவருக்கு பெரிய மன அழுத்தத்தையும் கொடுத்தது. என் கணவர் குடும்பத்தை சமாளிக்கிறதை பற்றி நிறைய அழுத்தம் எடுத்துக் கொண்டார். 2022ல் தான் மீண்டும் வேலைகள் வர ஆரம்பித்தது. 2023ல் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. என்னுடைய கணவருடைய உடல் நிலத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். கடவுள் அருளால் உதவி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். இப்ப எங்களுக்கு எல்லோரோட பிரார்த்தனையும் தேவை. என்னுடைய குடும்பம் நல்ல நிலைமைக்கு வரணும். என்னுடைய கணவருக்கு உடல்நிலை சரியாகி மீண்டும் வரணும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full