பிரபல பின்னணி பாடகி ஜானகி, சினிமா துறையில் தனது மார்க்கெட் பற்றி பேசி இருக்கும் வீடியோ தான் வைரலாகி உள்ளது. இந்திய அளவில் இசைத்துறையில் புகழ்பெற்ற பாடகியாக திகழ்ந்தவர் எஸ். ஜானகி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இசைத்துறையில் ஜொலித்துக் கொண்டிருந்தார். சொல்லப்போனால், இவருடைய இசைக்கும் மயங்காத உயிரே இல்லை என்று சொல்லலாம். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

மேலும், 1957 ஆம் ஆண்டு எஸ் எஸ் ராஜன் இயக்கத்தின் ‘மகதல நாட்டு மேரி’ என்ற படத்தில் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனவர் ஜானகி. தொடர்ந்து, கே வி மகாதேவன், எம் எஸ் வி, இளையராஜா, சங்கர் கணேஷ், தேவா, ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட முன்னணி இசை அமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார் ஜானகி. கடைசியாக நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘திருநாள்’ என்ற படத்தில் ‘தந்தை யாரோ’ என்ற பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஜானகியின் மார்க்கெட் குறித்து:

பாடகி எஸ்.ஜானகி, ஒரு நிகழ்ச்சியில் தனது மார்க்கெட் எந்த படத்திற்கு பிறகு சரிந்தது, பின்பு எப்போது வாய்ப்புகள் அதிகரித்தது என்பது குறித்து கூறியுள்ளார். அதில், ஒரு காலத்தில் தமிழில் பல பாடல்களை பாடிக் கொண்டிருந்தேன். இசையமைப்பாளர் இளையராஜாவின் ‘அன்னக்கிளி’ படம் தொடங்கியதில் இருந்து அவரின் இசையமைப்பில் நிறைய பாடல்களை பாடி வந்தேன். தினமும் பாடல் ரெக்கார்டிங்கில் பிஸியாக இருப்பேன். ஆனால், 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ் ஹாசனின் ‘சிங்காரவேலன்’ படத்தில் பாடிய உடன் எனக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

ஏ.ஆர்.ரகுமான் குறித்து:

மேலும், சில வருடங்களாக எந்த வாய்ப்புகளும் எனக்கு வரவில்லை. அந்த காலத்தில் மக்கள் என்னை மறந்து போனார்கள். முன்பு ஒரு முறை இது போல் மக்கள் என்னை மறந்து போது. அன்னக்கிளி படம் மூலம் மக்கள் மத்தியில் என்னை நினைவுக்கு கொண்டு வந்தவர் இளையராஜா. அதேபோல் , சிங்காரவேலன் படத்திற்கு பிறகு வாய்ப்புகள் குறைந்த போது, ஏ. ஆர். ரகுமான் வந்தார் . ரகுமான் இசையில் சில பாடல்களை பாடி இருந்தாலும், இந்த ‘நெஞ்சினிலே பாடல்’ என்னை பலதரப்பட்ட மக்களிடையே கொண்டு சென்றது. இந்தப் பாடலால் அனைவரின் நெஞ்சிலும் நான் நின்று விட்டேன் என்று எஸ் ஜானகி கூறியுள்ளார்.

Advertisement

ஜானகி குறித்து:

ஜானகி அவர்கள் ஆந்திர மாநிலம், பள்ளப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவருடைய சிறுவயதில் ஒவ்வொரு ஊரிலும் சில சில ஆண்டுகள் மாறி,மாறி வசித்து இருந்தார். காரணம், இவருடைய தந்தை ஆசிரியராக இருந்ததால்தான் இவரால் ஓரிடத்தில் வசிக்க முடியவில்லை. ஜானகிக்கு படிப்பில் பெரிய அளவில் விருப்பமில்லை. ஆனால், அவருக்கு இசையில் விருப்பம் அதிகம். இவருடைய இசை ஞானம் தான் இவரை புகழில் உச்சிக்கு கொண்டு சென்றது.

Advertisement

ஜானகியின் இசைஞானம்:

தனது மூன்று வயதிலேயே கேள்வி ஞானத்துடன் கடினமான பாடல்களை எல்லாம் ஜானகி பாடி அசத்தினார்.. இவருடைய ஆர்வத்தை பார்த்து எட்டாவது வயதில் நாதஸ்வர வித்துவான் இடம் இவருடைய தந்தை அனுப்பி வைத்தார். ‘நீ சங்கீதம் கற்றுக் கொண்டது போதும் நீயே சங்கீதம் தான். இனி உனக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்க தேவையில்லை’ என்று குருநாதர் இவரை வாழ்த்தி அனுப்பிவிட்டார். பின்பு சென்னைக்கு குடி பெயர்ந்த ஜானகி, ஏவிஎம் ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்தார். படிப்படியாக சினிமா பாடல் பாடும் வாய்ப்பு ஜானகிக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement