பிரேக்கிங் நியூஸ் : கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ் பி பியின் உடல் நிலை கவலைக்கிடம் - மருத்துவரின் அறிக்கை இதோ.

By Rajkumar · 14/8/2020

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ் பி பியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள்.

சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது. சமீபத்தில் கூட பிரபல தெலுங்கு இயக்குனரான ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது .சினிமா பிரபலங்களை தாண்டி பிரமுகர்களையும் விட்டுவைக்கவில்லை இந்த கொரோனா. தமிழக ஆளுநர் புரோஹித், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அமைச்சர் செல்லூர் ராஜு, தர்மேந்திர பிரதான ஆகியோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனைஎடுத்துள்ளார். அதில் அவருக்கு பாசிட்டீவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதை தொடர்ந்து அவர் சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் எஸ் பி பியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்பிபி இன் உடல் நிலை மோசம் அடைந்ததால் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாசம் வழங்கப்படும் நிலையில் எஸ்பிபி உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர் எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full