நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன், அபிஷேக் பச்சனின் மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆகிய நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நானாவாதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமாகி வீடு திரும்பினர்.

Advertisement

அதே போல சமீபத்தில் கூட பிரபல தெலுங்கு இயக்குனரான ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது .சினிமா பிரபலங்களை தாண்டி பிரமுகர்களையும் விட்டுவைக்கவில்லை இந்த கொரோனா. தமிழக ஆளுநர் புரோஹித், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அமைச்சர் செல்லூர் ராஜு, தர்மேந்திர பிரதான ஆகியோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனைஎடுத்துள்ளார். அதில் அவருக்கு பாசிட்டீவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதை தொடர்ந்து அவர் சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement
Advertisement