ஜிவி சார் இசை நிகழ்ச்சியில் பாடப்போகிறேன்- சைந்தவி வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ

By subhashini · 21/11/2024

பிரிவிற்கு பின் ஜிவி பிரகாஷ்-சைந்தவி இருவரும் இணைந்து பணியாற்ற இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக ஜிவி பிரகாஷ்-சைந்தவி பிரிய இருப்பதாக அறிவித்த செய்தி தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அதன் பின் ஹீரோவாக இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ஜிவி பிரகாஷ்-சைந்தவி திருமணம்:

கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. தற்போது இவர் படங்களில் நடித்தும், இசை அமைத்தும், பாடியும் வருகிறார். இதற்கிடையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்கள். திருமணம் ஆகி 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

ஜிவி பிரகாஷ் பிரிவு:

சைந்தவியும் பிரபலமான பாடகி ஆவார். இப்படி ஒரு நிலையில் திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து தாங்கள் இருவரும் பிரிவதாக இருவரும் அறிவித்து இருந்தார்கள். இது பலருக்கும் பேர் அதிர்ச்சி தான். இவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இது குறித்து பல வதந்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் இது குறித்து கேள்வியும் எழுப்பி வருகிறார்கள். மேலும், பிரிவுக்கு பின் இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஜி.வி பிரகாஷ் இசை நிகழ்ச்சி:

இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். டிசம்பர் 7ஆம் தேதி தான் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆவலாக இருக்கிறார்கள். அதில் ஜிவி பிரகாஷின் முன்னாள் மனைவியும், பாடகியமான சைந்தவி பாட இருக்கிறார். இந்த நிலையில் இது தொடர்பாக பாடகி சைந்தவி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ஹலோ மலேசியா, நான் உங்கள் சைந்தவி. நான் உங்க எல்லாரையும் கூடிய சீக்கிரம் சந்திக்க போறேன்.

சைந்தவி வீடியோ:

எங்கன்னு கேட்டீங்கன்னா, டிசம்பர் 7 ஆம் தேதி ஜிவி சார் லைவ் கான்செர்ட், ' Celebration Of Life' நடக்கப்போகுது. எங்கே என்றால், ' Hoki Nasional Stadium ' , Bukit Jalil இல் நடக்கப்போகுது. கூடிய விரைவில் நான் உங்களை சந்திக்கிறேன். டிக்கெட்கள் எல்லாம் சீக்கிரம் விற்பனை ஆகி கொண்டிருக்கிறது, அதனால், நீங்களும் விரைந்த டிக்கெட்களை வாங்குங்கள். இது கண்டிப்பாக பாட்டு, டான்ஸ், மியூசிக் என ஒரு ஃபன் நிறைந்த ஈவ்னிங் ஆக இருக்கும். அதனால், உங்க பிரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலியோட கண்டிப்பா வந்துருங்க என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ பார்த்து, விவாகரத்து பெற்றாலும் தொழிலில் இருவரும் நேர்மையாக இருப்பதை பார்த்து பாராட்டி வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full