சைந்தவி இவ்வளவு சூப்பரா டான்ஸ் ஆடுவாங்களா? ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்த வீடியோ

By subhashini · 17/3/2025

சைந்தவியின் நடனம் ஆடிய லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான பாடகி சைந்தவி. இவர் பாடிய பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சியில் கூட கலக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.

இதனிடையே ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்கள். திருமணம் ஆகி 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. பின் திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்கள் விவாகரத்து குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

சைந்தவி-ஜி வி பிரகாஷ் பிரிவு:

அதோடு இவர்களின் பிரிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஆனாலும், இவர்களுடைய பிரிவிற்கான காரணம் குறித்து இருவருமே எதுவும் வெளிப்படையாக சொல்லவில்லை. பிரிவிற்கு பிறகு சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் இருவரும் சேர்ந்து இசை கச்சேரிகளில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சைந்தவியின் நடன வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

View this post on Instagram

A post shared by P R A S A N T H (@prasanth_rr_prasanth)

சைந்தவி டான்ஸ் வீடியோ:

அதாவது, சமீபத்தில் நடந்த இசைக் கச்சேரியில் பாடகி சைந்தவி அவர்கள் பாடிக்கொண்டே நடனமாடி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள், இவருக்கு பாட தெரியும், ஆடா தெரியுமா! என்று ஆச்சரியத்தில் வீடியோவிற்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள். கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி பிரகாஷ் குறித்த தகவல்:

மேலும், ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன்முதலாக ‘வெயில்’ என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அந்தப் படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு இவருக்கு நல்ல ஆண்டாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ஜி.வி பிரகாஷ் இசைப்பயணம்:

கடந்த ஆண்டு இவர் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ஹிட் தான். அதிலும் இவர் கேப்டன் மில்லர் தொடங்கி, தங்கலான், அமரன், லக்கி பாஸ்கர் என இசைக்காகவே தனி பாராட்டுகளைப் பெற்று மக்களை பிரமிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக அமரன் படமும், லக்கி பாஸ்கர் படமும் ஒன்றாக தீபாவளிக்கு ரிலீஸானது. சமீபத்தில் வெளிவந்த ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் இசை அமைத்து இருந்தார். இதை அடுத்து இவர் பல படங்களில் பணியாற்றி வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full