எங்க அம்மா எனக்காக வாய்ப்பு கேட்டு இளையராஜா வீட்டு வாசல்ல கெஞ்சினாங்க - பாடகர் சத்யன் எமோஷனல்
பாடகர் சத்யன் மகாலிங்கம் லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்கே இசைக் கச்சேரியில் ரோஜா ரோஜா என்ற பாடலை அசால்டாக பாடி இருக்கும் வீடியோ தான். அவர் வேற யாரும் இல்லை பின்னணி பாடகர் சத்யன் மகாலிங்கம்.
இவர் நம்முடைய behind talkies தளத்திற்கு ஒரு பிரத்யோக பேட்டி அளித்து இருக்கிறார். அதை பற்றி இங்கு பார்க்க போகிறோம். இவருக்கு சின்ன வயதில் இருந்து இசையில் ஆர்வம் கொண்டவர். 15 வயதிலேயே இவர் இசைக் குழுவில் சேர்ந்து கொண்டு பாடி வருகிறார். கிட்டத்தட்ட 2,500 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சியில் பாடி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=qOTIwPBorA8
பின் இவர் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் இடம்பெற்ற கலக்கப்போவது யாரு என்ற பாடலின் மூலம் பின்னணி பாடகராக சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சரோஜா படத்தில் தோஸ்த், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பாஸு பாஸு, கழுகு படத்தில் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும், மாற்றான் படத்தில் தீய தீயே உட்பட 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்பு அடையவில்லை. இவர் தொடர்ந்து தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டுதான் வருகிறார்.
சத்யன் மகாலிங்கம் குறித்த தகவல்:
இப்படி இருக்கும் நிலையில் சத்யன் மகாலிங்கம் 26 வருடங்களுக்கு முன்பு ஒரு இசை குழுவில் பாடி இருந்த ரோஜா ரோஜா என்ற பாடல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்த பலருமே இவரை பற்றி சோசியல் மீடியாவில் தேட ஆரம்பித்தார்கள். பின் இது தொடர்பாக பாடகர் சத்யன் மகாலிங்கம், 26 வருடங்களுக்கு பிறகு எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. பாதம் தொட்ட நன்றிகள் என்றெல்லாம் எமோஷனாக பேசி இருந்தார்.
https://www.youtube.com/watch?v=65UfRmVtb2Q
சத்யன் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் நம்முடைய behind talkies தளத்திற்கு பிரத்யோகமாக பாடகர் சத்யன் மகாலிங்கம் அளித்த பேட்டியில், மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் முறையாக மியூசிக் கற்றுக் கொண்டு வரவில்லை. இதிலே முறையாக கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் சில பேருடைய வாழ்க்கையில் மண்ணள்ளி போடுமாறு சில விஷயங்கள் நடக்கிறது. இது நல்லதுக்கே கிடையாது. நிறைய பிரபலங்களுக்கு பெயர், புகழ், பணம் எல்லாமே கிடைத்திருக்கிறது.
சத்யன் எமோஷனல்:
இருந்தும் படங்களில் அந்த ஒரு பாட்டை பாடுவதனால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? நீங்களும் ஒரு பாட்டு பாடுங்கள். ஆனால், ஒரு படத்தில் மொத்த பாட்டையும் நீங்களே பாடுவதால் மற்றவர்களுடைய நிலை என்ன? ராஜா சரக்கு என்ன தெரியும். என்னுடைய பாட்டை கேட்டு எல்லாம் ரொம்பவே புகழ்ந்து பாராட்டினார். ஒரு முறை எங்க அம்மா ராஜா சார், வீட்டுக்கு வெளியே எனக்காக வாய்ப்பு கேட்டு கெஞ்சி எல்லாம் இருந்திருக்கிறார். நான் பாட வேண்டிய பல வாய்ப்புகள் பிரபலமாக இருப்பதால் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள் என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.