'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கியின் காதலர் இவர் தானா? வெளியான புகைப்படம்

By subhashini · 6/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் நிகழ்ச்சிக்கு உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சிவாங்கி. ஆனால், இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

இவர் மிகச்சிறந்த பாடகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். மூன்று சீசனாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக சிவாங்கி பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தனியாக ரசிகர் கூட்டமே உருவாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா பட வாய்ப்புகளும் வந்தது.

சிவாங்கி குறித்த தகவல்:

அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டான் படத்தில் சிவாங்கி நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. அதன் பின் வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் ஷிவாங்கி நடித்து இருந்தார்.
அதனை அடுத்து இவர் குக் வித் கோமாளி 4வது சீசனில் குக்காக வந்து இருந்தார். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இவர் நன்றாக சமைத்து தன்னுடைய திறமையை நிரூபித்து இருந்தார்.

சிவாங்கி திரைப்பயணம்:

தற்போது சிவாங்கி அவர்கள் பாடகர், தொகுப்பாளர், நடிகை என பல மேடைகளில் பெண்கேற்று வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் பாடகி சிவாங்கியின் காதலன் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சிவாங்கி சோசியல் மீடியாவில் பகிர்ந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இவர் முகேஷ் ரவி என்பவரை கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை தான் வெளியிட்டு இருக்கிறார்.

சிவாங்கி காதலர்:

இதனால் இவர் காதலில் விழுந்திருக்கிறார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். ஆனால், சில பேர் இவர்கள் இருவரும் புதிய ஆல்பம் ஒன்றில் நடிப்பதாகவும் கூறுகிறார்கள். உண்மை எது என்று தெரியவில்லை. முகேஷ் ரவி, கம்பி கட்டின கதை படத்தினுடைய ஹீரோ. அதுமட்டுமில்லாமல் இவர் 2023 ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டமும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full