சின்மயி - தீ வெர்சன் ஓப்பிடாதிங்க, ஏன்னா - சூப்பர் சிங்கர் பிரபலம் சௌந்தர்யா எஸ்க்குளூசிவ் பேட்டி

By subhashini · 24/6/2025

முத்த மழை பாடல் தொடர்பாக சூப்பர் சிங்கர் பிரபலம் சௌந்தர்யா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டது.

இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். ஜூன் 5ஆம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த பாடலை பாடகி தீ தான் பாடியிருக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த பாடலை பாடகி சின்மயி பாடி இருந்தார். அதோடு பாடகி தீ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பதால் பாடகி சின்மயி தான் முத்த மழை பாடலை பாடி இருந்தார்.

முத்த மழை பாடல்:

இதனால் இந்த பாடலை தீ பாடியது விட சின்மயி பாடி வெர்சன் தான் அழகாய் இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது என்று இருவரையும் ஒப்பிட்டு கமெண்ட்ஸ்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள். இதனால் இணையத்தில் பனி போரே நடந்தது. இதற்கு சின்மயியுமே விளக்கம் கொடுத்து இருந்தார். அதோடு இந்த பாட்டு மிகப்பெரிய அளவில் பிரபலமாகி இருந்தது. ஆனால், தக் லைப் படத்தில் தான் இந்த பாட்டு இடம் பெறவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இசை வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை சின்மயியுடன் சேர்ந்து பாடகி சௌந்தர்யாவும் கோரஸ் பாடி இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலருமே சௌந்தர்யாவை பாராட்டி இருந்தார்கள்.

சௌந்தர்யா பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சௌந்தர்யா, ராஞ்சனா படத்தில் ரகுமான் சார் மியூசிக்கில் நான் பாடியிருக்கிறேன். அவரோட மியூசிக்கில் ஹிந்தியில் கலா ரசிகா என்ற பாடலுக்கு தான் முதல் கோரஸ் பாடினேன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு ரகுமான் சார் ஆபீஸில் இருந்து அழைப்பு வந்தது. அதிலிருந்து இப்போது வரைக்கும் ரகுமான் சார் மியூசிக்கில் பாடுவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அப்படித்தான் முத்த மழை கோரஸ் பாடுற வாய்ப்பு அமைந்தது. முதலில் பாடகி தீ வெர்ஷினில் தான் பாட்டு ரெக்கார்ட் பண்ணினார்கள். அந்த வெர்ஷனை தான் கேட்டிருந்தோம். அதே பாடலை சின்மயி அக்கா மேடையில் பாடுவதற்கு முன்னாடி ரிகசல் பண்ணினார்கள். முதன் முறையாக அவர்களுடைய வெர்ஷனை அப்போதுதான் கேட்டேன். ரொம்ப அழகாக இருந்தது.

https://www.youtube.com/watch?v=McShryEES7U

ரகுமான் பற்றி சொன்னது:

அடுத்ததாக மேடையில் பாடும்போது இந்த பாட்டு என்னவோ பண்ண போகுது என்று நினைத்தேன். நான் நினைத்ததை விட என்னென்னவோ பண்ணி விட்டது. இதற்கு முன்னாடி எத்தனையோ ஆடியோ லான்ச்சில் கோரஸ் பாடி இருக்கிறோம். ஆனால், இந்த பாட்டை பாடும்போது தான் எங்களையும் கண்டுபிடித்து வைரல் பண்ணினார்கள். குறிப்பாக என்னோட கருப்புக்கொட்டை நோட்டீஸ் பண்ணி பாராட்டியிருந்தார்கள். எல்லா புகழும் ரகுமான் சாருக்கு தான். அவரோட மியூசிக்கில் நான் பாடினதை ரொம்ப ஆசீர்வாதமாக நினைக்கிறேன். ரகுமான் சார் ரொம்ப சின்சியர், ரொம்ப என்கரேஜ் பண்ணுவார். அதுதான் அவரிடம் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம். மேலும் முத்தமழை பாடல் படத்தில் இடம்பெறாதது எங்களுக்கும் கொஞ்சம் ஏமாற்றம்தான். படத்தில் இந்த பாட்டு இடம்பெறாது என்று எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். வைரலான பிறகாவது வைப்பார்கள் என நினைத்தோம். ஆனால், வைக்கவே இல்லை.

சின்மயி பற்றை சொன்னது:

முத்த மழை பாட்டை கேட்டு ரசிகர்கள் சின்மயி வெர்ஷன்- தீ வெர்ஷன் என்று விவாதங்களை செய்திருந்தார்கள். எதுக்கு இப்படி கதறுறாங்க என்றெல்லாம் தோன்றியது. கடைசியாக நாம் எல்லோருக்கும் ஒரு அழகான பாட்டு கிடைத்தது என்ற மனநிறைவு இருக்கிறது. அதே மாதிரி சின்மயி, தீயை ஒப்பிட வேண்டாம். ரெண்டு பேருமே அவரவர்கள் ஸ்டைலில் பிரமாதமாக பாடுகிறார்கள். தீ ஒரு குழந்தை
சூஃபி ஸ்டைலில் ரொம்ப புரிந்து பாடினார்கள். சின்மயி உற்சாகமாக இனிமையாக பாடினார்கள். அதோடு ரகுமான் சார் மியூசிக்கில் சோலோ பாடணும். அதுதான் என்னோட ட்ரீம். அடுத்தடுத்து நானே தனி இசை பாடலை உருவாக்கணும் என்று பேசியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full