அரை குறை ஆடை விவகாரம், தாக்கப்பட்ட கோமாளி பட நடிகை - ஆதரவாக சுசித்ரா ஆரம்பித்த உள்ளாடை போராட்டம்.

By Rajkumar · 7/9/2020

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அதிலும் இந்த படத்தில் ஜெயம் ரவி பள்ளி மாணவராக வரும் பகுதியில் ஜெயம் ரவிக்கு காதலியாக முதல் பாதி முழுதும் தோன்றிய இவர் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தவர நடிகை சம்யுக்தா. கோமாளி படத்தில் காஜல் அகர்வாலை விட இவர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார். கோமாளி படத்தை தொடர்ந்து "பப்பி" என்ற படத்தில் நடித்தார்.

https://twitter.com/SamyukthaHegde/status/1301951856298475520

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிடுவது வழக்கம். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் தனது நண்பர்களுடம் பூங்கா ஒன்றிற்கு சென்ற போது அங்கே இருந்த சிலர் இவர் ஆபாசமாக உடை அணிந்து கூத்தடிப்பதாக கூறி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இவருடன் சென்ற இவரது நண்பர்களையும் தாக்கி உள்ளனர்.

அப்போது சம்யுக்தாவிற்கும் அங்கே இருந்த சிலருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதை வீடியோவாக வெளியிட்டு உள்ளார் சம்யுக்தா. அந்த வீடியோவில் சம்யுக்தா பேசி கொண்டு இருக்கும் போது பெண் ஒருவர் சம்யுக்தா அரை குறை ஆடையில் ஆட்டம் போடுவதாக கூறியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சம்யுக்தா தனது ஆடையை அவிழ்த்து, தான் ஸ்போர்ட்ஸ் உடையை போட்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

https://twitter.com/suchi_mirchi/status/1302236647015079939

இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாதில் நடிகை சம்யுக்தா ஆதரவாக பல்வேறு பிரபலங்களும் குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் பிரபல ஆர் ஜேவும் பாடகியுமான சம்யுக்தாவிற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். அதில், ப்ராவை கண்டால் நீங்கள் ஏன் கோபப்படுகறீ ர்கள் ? ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது என்னுடை அணைத்து பிராவையும் என்னுடைய பால்கனியில் சம்யுக்தாவிற்கு ஆதரவாக தொங்கவிட்டு போராட்டம் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full