பாட்டிலை தூக்கிட்டு வந்த கை தான் இப்ப நடுங்குது, ரொம்ப சந்தோசம் - விஷால் பற்றி பாடகி சுசித்ரா போஸ்ட்

By subhashini · 7/1/2025

விஷாலின் நிலை குறித்து பாடகி சுசித்ரா போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் மதகஜராஜா.
இதுதான் இவர்களுடைய முதல் படம். ஆனால், இவர்களுடைய கூட்டணியில் 2015 ஆம் ஆண்டு ஆம்பள படம் 2019 ஆம் ஆண்டு ஆக்சன் ஆகிய படங்களெல்லாம் வெளியாகியிருந்தது. இந்த இரண்டு படங்களுமே காமெடி ஜானரில் இயக்குனர் சுந்தர்.சி கொடுத்திருந்தார். இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.

ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இவருடைய இசையில் விஷால், மை டியர் லவ்வர் என்ற பாடலை பாடி இருந்தார்.
அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்கு முன்பு தயாரித்த படங்களை விநியோகம் செய்வதில் சிக்கல் இருந்ததில் சில பிரச்சனை ஏற்பட்டதால் மதகஜராஜா படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

மதகஜராஜா படம்:

கடந்த சில ஆண்டுகள் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால் மதகஜராஜா ரிலீசுக்கு தயாராக இருப்பதாக பேச்சுகள் வந்தது. சமீபத்தில் தான் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 12 வருடம் கழித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு, சீனுமோகன் ஆகிய ஐந்து நடிகர்களுமே இந்த இடைப்பட்ட காலத்தில் இறந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் வீடியோ:

தற்போது இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் இயக்குனர் சுந்தர்.சி, விஷால், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, குஷ்பூ உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விஷால் மேடை ஏறி பேசிய போது அவருடைய கை, கால்கள் நடுங்கி இருந்தது. குரலிலும் நடுக்கம் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆயிட்டாரு? என்று கேட்டு இருக்கிறார்கள். உண்மையில் விஷாலுக்கு வைரல் காய்ச்சல் வந்திருக்கிறது என்று கூறி இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=HPB1VhslR10

பாடகி சுசித்ரா பதிவு:

இந்த நிலையில் இது தொடர்பாக பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள வீடியோவில், ரசிகர்கள் எல்லோருமே ரொம்ப மோசமாக நடந்து கொள்கிறீர்கள். நீங்கள் விஷாலுக்காக பரிதாபப்படும் இந்த நேரத்தில் அவரைப் பற்றி சில விஷயங்கள் சொல்லப்போறேன். இது கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. கார்த்திக் என்ற கழுதை புருஷன் அப்பப்போ எங்க போகும் என்று தெரியாது. எங்கையாவது ஓடிப் போய்விடும். ஒரு நாள் அந்த கழுதை வீட்டில் இல்லாத போது வீட்டோட காலிங் பெல் அடித்தது. நான் போய் கதவை திறந்து பார்த்தால் விஷால் நின்றிருந்தான். அவன் கண்ணெல்லாம் மஞ்சள் கலர், பல் எல்லாம் மஞ்சள் கலரில் இருந்தது. அவன் கையில் வேற ஒரு ஒயின் பாட்டில் இருந்தது.

விஷால் பற்றி சொன்னது:

அப்போது அவன், கார்த்திக் இல்லையா? என்று கேட்டான். நான் இல்லை என்று சொல்லிவிட்டேன். அதற்கு பிறகும் என்னிடம் அவன், நான் வீட்டுக்குள் வரலாமா? என்று கேட்டான். நான் முடியாது என்று சொன்னேன். அப்போ அவன், நான் அந்த ஒயின் பாட்டில் கார்த்திக் குமாருக்கு கொடுக்க வந்தேன் என்று சொன்னான்.
நான், அவன் கௌதம் மேனன் ஆபீஸில் இருக்கான், போய் பாருங்கன்னு சொன்னேன். அதற்குப் பிறகு நான் அவனை திட்டிட்டேன். இது விஷால் காதில் விழுந்து விட்டது. அவன் என்னிடம் அதை பற்றி கேட்டான். உடனே நான், எங்க வீட்டுக்கு வர பூனைய சொன்னேன். உங்கள இல்லன்னு சொல்லிட்டேன். இது தான் உங்க விஷால். அவருக்காக தான் நீங்க எல்லாம் வேண்டிக்கிட்டு இருக்கீங்க. ஆனா, அன்னைக்கு ஒயின் பாட்டில் புடிச்சிட்டு இருந்த கை தான் இன்னைக்கு நடுங்குது. எனக்கு ரொம்ப சந்தோஷம் இப்படி பாக்குறதுக்கு என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full