சுத்த வேஸ்ட், நிறைய பிராடு வேலைகள் செய்கிறார்- முன்னாள் மாமியார் பற்றி பாடகி சுசித்ரா சொன்ன அதிர்ச்சி தகவல்

By subhashini · 31/7/2024

நடிகர் கார்த்திக் குமாரின் அம்மா பற்றி பாடகி சுசித்ரா பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாடகி சுசித்ரா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், சஞ்சித் செட்டி, கார்த்திக் குமார் போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை “சுச்சி லீக்ஸ்” என்ற பெயரில் வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் சுசித்ரா .

இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும், தன் தரப்பு நியாயத்தை சுசித்ரா கூறியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பாடகி சுசித்ரா அளித்து இருக்கும் பேட்டி தான் இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது. குறிப்பாக இவர், என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பணத்தைக் கொடுத்து என்னை பற்றி தவறாக பேசி வருகிறார். அவரும் தனுஷும் சேர்ந்து குடித்து விட்டு ஒரு அறைக்குள் செல்வதை நான் பார்த்தேன். அந்த அறைக்குள் அவர்கள் சென்றால் என்ன செய்வார்கள்? என்று எனக்கு தெரியும்.

கார்த்தி குறித்து சொன்னது:

அதேபோல் எனக்கு திருமணமாகி இரண்டு வருடத்திலேயே என்னுடைய கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்தது. இருந்தாலும் என்னுடைய தாய் தந்தைக்காக தான் நான் பொறுமையாக சேர்ந்து வாழ்ந்தேன். அதற்கு பிறகும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் விவாகரத்து பெற்றோம். பயில்வான் ரங்கநாதன் என்னை பற்றி மோசமாக விமர்சிப்பதற்கும் என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் தான் காரணம். அவர்தான் பணம் கொடுத்து இந்த மாதிரி வேலைகளை செய்ய சொல்கிறார் என்றெல்லாம் பேசியிருந்தார்.

கார்த்திக்குமார் பதிவு:

இதற்கு நடிகர் கார்த்திக் குமார், நான் ஒரு ஓரின சேர்க்கையாளராக இருந்தேன் என்றால் நிச்சயம் அதை பொது வெளியில் வெளிப்படையாக சொல்லுவேன். அது சொல்வதற்கு எனக்கு எந்த கூச்சமும் கிடையாது என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து சுசித்ராவும் தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபலங்களை குறித்து அதிர்ச்சிக்குரிய விஷயங்களை எல்லாம் பேசியிருந்தார். அந்த வகையில் சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமாரின் அம்மா குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறி இருக்கிறார்.

கார்த்திக்குமார் அம்மா குறித்து சொன்னது:

அதில் அவர், என்னுடைய முதல் கணவர் கார்த்திக் குமாருடைய அம்மா சுத்த வேஸ்ட், அவர் உண்மையானவரே கிடையாது. நிறைய ஃபிராடு வேலைகளை செய்திருக்கிறார். குறிப்பாக, அனாதை குழந்தைகளை விற்பது உட்பட நிறைய ஃபிராடு வேலை செய்திருக்கிறார். இவர் இந்த வேலையை செய்வதற்கு அரசாங்கத்திற்கும் லஞ்சம் கொடுக்கிறார். அதனால் தான் அவரை யாரும் கைது செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல் ஓரினச்சேர்க்கையாளர் கார்த்தி குமாரை நான் திருமணம் செய்து கொண்டதால் ஏதோ நான் அமுக்கப்பட்ட கோழி என்று அவங்க நினைச்சுட்டு இருந்தாங்க.

புகார் அளித்த கார்த்திக் குமார்:

வீட்டுக்குள்ளேயே திருமணத்துக்கு எதிரா சண்டை போட்டுட்டு இருந்தது எனக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு ஒரு தங்கச்சி இருக்கார். அவளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. அவளுடைய எதிர்காலம் கெட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காகத் தான் நான் இவ்வளவு நாளாக நடுத்தெருவுக்கு வந்து சண்டை போடாமல் இருந்தேன். இத்தனைக்கும் அவளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு இனி வேற பிரச்சனையே இல்லை. அதனால் தான் இதை இப்போ தைரியமாக பேசினேன் என்று கூறியிருந்தார். இதை பார்த்த கார்த்திக் குமார், பாடகி சுசித்ரா மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில் அவர், அவதூறான வார்த்தை கருத்துக்களை பேசியதற்கு சுசித்ராவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full