கெனிஷா-ரவி உறவை நிரூபிக்க முடியுமா? ஆர்த்தி குழந்தைகளை கொடுமைப்படுகிறார் - பாடகி சுசித்ரா வீடியோ வைரல்
நடிகர் ரவி மோகன்-ஆர்த்தி விவகாரம் தொடர்பாக பாடகி சுசித்ரா போட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரமாகவே சோசியல் மீடியா முழுவதும் ஆர்த்தி-ரவி மோகன் சர்ச்சை தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. அதோடு ரவி-ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது. இப்படி இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது.
அதன் பின் ரவி -ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவிற்கு சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தான் நடிகர் ரவி அவர்கள் கெனிஷாவுடன் ஜோடியாக வந்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இப்படி சர்ச்சைகள் வந்து இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மீண்டும் ரவி-கெனிஷா இருவருமே ஐசரி கணேஷ் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்று இருந்தார்கள். இதை அடுத்து ஆர்த்தி ரவி தன்னுடைய மகன்களோடு இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்து எமோஷனலாக பதிவு ஒன்று போட்டு இருந்தார்.
ரவிமோகன்-ஆர்த்தி சர்ச்சை:
இதை எடுத்து நடிகர் ரவி மோகன், ஆர்த்தி எப்போதும் எனக்கு முன்னாள் மனைவி தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. என் குழந்தைகளை நான் கவனிக்கவில்லை என்று சொல்வது முற்றிலுமே தவறு. என் குழந்தைகளை நெருங்க கூட விடுவதில்லை. என் பொறுமைக்கும் எல்லை உண்டு. என் தரப்பு நியாயம் எல்லோருக்குமே புரியும். கெனிஷாவை பற்றி தேவையில்லாமல் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். அவர் என் உயிரை காக்க வந்த தோழி என்றெல்லாம் கூறியிருந்தார். இப்படி இவர் பேசியதை அடுத்து ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
பாடகி சுசித்ரா பதிவு:
அதில் அவர், ரவி மோகன் சொன்னது எல்லாமே பொய்யான குற்றச்சாட்டு. அவர் மீண்டும் என் மகளுடன் சேர்ந்து வாழ்ந்தால் எனக்கு சந்தோசம் தான் என்றெல்லாம் கூறியிருக்கிறார். இப்படி மாற்றி மாற்றி இருவர் தரப்பிலும் வாக்குவாதம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக பாடகி சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் ரவி- கெனிஷா விவகாரம் பற்றி பேசி இருந்தேன். அதில் சிலர், நீங்கள் சொல்வது போல் ஆர்த்தி கொடுமைக்காரி தான். கெனிஷா நல்லவர் என்று வைத்துக் கொண்டால் கூட முறையான விவாகரத்து பெறாமல் ரவி இன்னொரு ரிலேஷன்ஷிப்பில் நுழைவது எந்த விதத்தில் நியாயம் என்று என்னிடம் கேட்டு இருந்தீர்கள்.
ரவி-கெனிஷா விவகாரம்:
நீங்கள் ஏன் நீதிபதியாக மாறுகிறீர்கள்? உண்மையில் இது நீதிமன்றத்தில் நடக்க வேண்டிய விஷயம். இதற்கான முழு முடிவு நீதிமன்றத்தின் மூலம் தான் கிடைக்கும். ஆர்த்தி இந்த விஷயத்தை நீதிமன்றத்தில் நிச்சயம் இழுப்பார் என்று தெரிந்து தான் ரவி, கெனிஷாவை பொது வழியில் அழைத்து வந்தார். ஆர்த்தி இந்த விஷயத்தை கோர்ட்டில் சொன்னால் ரவி, நாங்கள் நண்பர்களாகத்தான் பழகிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வார். அவர்களுக்குள் தாம்பத்திய உறவு இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியாது. அவர் நண்பராகத்தான் கெனிஷாவை பொது வழியில் அழைத்து வந்தார். நண்பர்களாகத்தான் இருவரும் நடந்து கொண்டார்கள். இந்த விவகாரத்தில் ரவிக்கு ஆர்த்தி இடம் இருந்து விவாகரத்தும் வேண்டும், பிள்ளைகளும் வேண்டும், கூடவே அவருடைய பணத்தையும் அவர் திரும்ப பெற வேண்டும்.
ஆர்த்தி பற்றி சொன்னது:
ஆர்த்திக்கு ஜெயம் ரவி தான் வேண்டும். எப்படியும் இந்த விஷயத்தில் ரவிக்கு விவாகரத்து கிடைத்துவிடும். இங்கு எந்த பக்கத்தில் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்பதுதான் ரொம்ப முக்கியமானது. ஆர்த்தி குழந்தைகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து அவர்களை அங்கும் இங்கும் அலைய வைத்து கொண்டிருக்கிறார். எப்போதுமே இரண்டாவது ரிலேஷன்ஷிப் என்பது பிரச்சனைகளோடு தான் வரும். அதை கெனிஷாவும் ரவியும் பார்த்துக்கொள்வார்கள். ரவிக்கு நான் இந்த இடத்தில் மெடல் கொடுப்பேன். காரணம், தன்னை காப்பாற்றிய பெண் கெனிஷா தான் என்று அவர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். சாகும் வரை சொல்லிக் கொண்டே தான் இருப்பார். இத்தனை விமர்சனங்களும் திட்டுகளும் வந்து கொண்டிருக்கும் போதும் ரவி, கெனிஷாவின் கையைப் பிடித்து அழைத்து செல்கிறார் என்று கூறியிருக்கிறார்.