இனிமேல் நான் வீடியோ போட மாட்டேன், சுசித்ராவின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன தெரியுமா?

By Rajkumar · 16/10/2024

பாடகி சுசித்ரா இனி நான் பேட்டியை கொடுக்க மாட்டேன் என்று கூறி இருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சுசித்ரா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வந்தவர். இதற்கு இடையே இவர் நடிகர் கார்த்திக் குமாரை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து 12 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். பின் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

மேலும், சில ஆண்டுகள் முன் நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், சஞ்சித் செட்டி, கார்த்திக் குமார் போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் வெளியாக்கி பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தார் சுசித்ரா. இருந்தாலும், அதை தான் செய்யவில்லை என்றும் தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது என்று சுசித்ரா விளக்கம் அளித்து இருந்தார். இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

சர்ச்சைகளில் சிக்கும் சுசித்ரா:

ஆனால், அவரின் கணவர் கார்த்திக் குமார் சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். சில வருடங்கள் அமைதியாக இருந்த சுசித்ரா சமீபத்தில் தொடர்ந்து பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். அப்படி அவர் கொடுக்கும் பேட்டிகள் திரைத்துறையில் புது விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி பல சர்ச்சைகளை கிளப்பிய பாடகி சுசித்ரா சமீபத்தில் மும்பையில் செட்டில் ஆகியுள்ளதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

சுசித்ராவின் பதிவு:

இந்நிலையில் தற்போது சுசித்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், நலம் விரும்பிகளே. உங்களில் உள்ளவர்கள் நான் எனது கனவு வாழ்க்கையைப் பெறுவேன் என்று உண்மையிலேயே நம்புகிறீர்கள். நான் மும்பையில் எனது கனவு வேலையை இன்று தொடங்குகிறேன். தொடர்ந்து எனக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவும். இப்போது நான் குழந்தைகள் பதிப்பகத்தில் இருக்கிறேன். அதனால் இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகளுடன் என்னை இணைக்கும் ஒரு வாய்ப்பு உருவாகி உள்ளது.

இனி பொது ஊடக நபர் இல்லை:

அதுவும் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு கௌரவமான வாய்ப்பு. அந்த பத்திரிக்கை கடந்த 86 ஆண்டுகளாக அனைவராலும் மதிக்கப்படும் மற்றும் விரும்பப்படும் ஒரு பத்திரிக்கை. தற்போது தமிழிலும் பதிப்புகள் இருக்கிறது. நான் இனி ஒரு பொது ஊடக நபர் இல்லை. மேலும் என்னிடமிருந்து youtube வீடியோக்கள் எதுவும் வராது. அந்தக் கட்டம் முடிவடைந்தது. எப்போதாவது சில பதிவுகள் மற்றும் பகிர்வுகள் செய்வேன். அவ்வளவு தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Suchitra Ramadurai (@suchislife_official)

வெறுப்பவர்களுக்கு பதிவு:

அதனைத் தொடர்ந்து வெறுப்பவர்கள் குறித்து பதிவிட்ட சுசித்ரா அதில், உங்களைத் தொடர்ந்து மகிழ்விப்பதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும் சிறந்த youtube பேச்சாளர்கள், பாடகர்கள் மற்றும் பாவம் பைத்தியங்கள் கண்டறிய உங்களை நான் வாழ்த்துகிறேன். என்னுடைய ஒவ்வொரு நேர்காணலிலும் உண்மையை மட்டுமே பேசியுள்ளேன். அவை அனைத்தும் எந்த காலத்திலும் அப்படியே தான் இருக்கும். உங்களால் அதை எதையும் செய்ய முடியாது. நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full