RIP-னு எழுத கஷ்டமாக இருக்க - பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்.

By Rajkumar · 25/9/2020

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் பாடகி சுசித்ரா குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சுச்சி லீக்ஸ் போய் ஸ்ரீ லீக்ஸ் வந்தது என்றும் பல விமர்சனம் செய்து வந்தார்கள் நெட்டிசன்கள். சுசித்ரா ஆர்ஜே சுச்சி என்று பரவலாக அறியப்பட்டவர் சுசித்ரா. இவர் தமிழகத்தை சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளர் ஆவார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். அதுவும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார்.

https://twitter.com/suchi_mirchi/status/1309310488216514564

கடந்த 2014 ஆம் ஆண்டு சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து "சுசி லீக்ஸ்" என்ற பெயரில் தனுஷ், விஜய் டிவி டிடி, ஹன்சிகா, திரிஷா, ஆண்ட்ரியா, சின்மயி, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலரின் அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியானதால் சினிமா திரையுலகமே அதிர்ந்து போனது. இதையடுத்து பாடகி சுசித்ரா கூறியது, தனது டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து உள்ளார்கள்.

அதிலிருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள் என்று கூறி இருந்தார். மேலும்,அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் தன்னுடைய விவாகரத்துக்குப் பிறகு பாடகி சுசித்ரா அவர்கள் தனது குடும்பத்திலிருந்து விட்டு விலகி அடையாரில் உள்ள வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார்.

கடந்த சில காலமாக மீண்டும் பல்வேறு சமூக பிரச்சனை குறித்து பேசி வருகிறார். சமீபத்தில் சாத்தான் குளம் விவகாரம் பற்றி பேசி இவர் வெளியிட்ட வீடியோ பெரும் வைரலானது. இப்படி ஒரு நிலையில் நடிகை சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் #Rip மீது இருப்பதை என்னால் டைப் செய்ய முடியவில்லை. ஆனால், சுசித்ரா யாரை குறிப்பிட்டு இப்படி ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் என்பது தெரியவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full