நான் உள்நோக்கத்தோடு செய்தேனா? ரசிகையை முத்தமிட்ட சர்ச்சைக்கு பாடகர் உதித் நாராயணன் கொடுத்த விளக்கம்
இந்திய சினிமா உலகில் பின்னணி பாடகராக இருப்பவர் உதித் நாராயணன். இவர் நேபாளத்தை சேர்ந்தவர். இவர் பாலிவுட்டில் நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். மேலும், இவருடைய பாடல்களை திறமைக்காக தேசிய விருது, பத்மபூஷன், பத்மஸ்ரீ உட்பட பல விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஐந்து முறை பிலிம் பேர் விருதுகளையும் வாங்கி இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஓடியா, நேபாளி, போஜ்புரி, பெங்காலி உட்பட பல மொழிகளில் 2000 மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.
பின் இவருடைய இசை திறமையை பாராட்டி மத்திய அரசு பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை எல்லாம் கொடுத்து இருக்கிறார்கள். இவர் 1980ல் பாலிவுட்டில் வெளிவந்த யுனிக் பீஸ் என்ற படத்தில் மூலம் தான் பாடகராக அறிமுகமானார். இவருடைய தனித்துவமான குரலால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்று சொல்லலாம். அதோடு தமிழிலும் இவர் பாடிய பாடல்கள் எல்லாம் மிகப் பிரபலமாகி இருந்தது. இவரை தமிழில் அறிமுகப்படுத்தி வைத்தது ஏ.ஆர் ரகுமான் தான்.
உதித் நாராயண் குறித்த தகவல்:
கிட்டத்தட்ட தமிழில் மட்டும் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவிற்கு சர்ச்சையும் இவரை சுற்றிக் கொண்டிருக்கிறது. சொந்த வாழ்க்கையில் இவர் நிறைய பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். இவர் 1985 ஆம் ஆண்டு தீபா என்பவரை திருமணம் செய்திருந்தார். பின் 2006 ராஞ்சனா என்பவர் தான் இவரின் முதல் மனைவி என்று கூறி மிகப்பெரிய அளவில் வைரலாகி இருந்தது. ஆரம்பத்தில் உதித், இதை மறுத்தாலுமே கடைசியில் ஒத்துக் கொண்டார்.
உதித் நாராயணன் செய்த வேலை:
1984ல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற உதித், தீபா என்பவரை திருமணம் செய்து விட்டார். மேலும், சமீப காலகமாக இவர் சினிமாவில் மட்டுமில்லாமல் லைவ் ஷோ நிகழ்ச்சிகளிலும் பாடிக் கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் உதித் நாராயணன் லைவ் ஷோவில் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் பெண் ரசிகை செல்ஃபி எடுத்தார். பின் அந்த பெண், உதித் கன்னத்தில் முத்தம் கொடுக்க சென்றார். உடனே அவர் தலையை திருப்பி உதட்டில் முத்தமிட்டு இருந்தார் உதித். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
உதித் நாராயணன் பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பான சர்ச்சைகளுக்கு அளித்த பேட்டியில் உதித் நாராயணன், சிலர் இந்த வீடியோவை ஊக்குவித்து தங்களுடைய அன்பை காட்டுகிறார்கள். அந்த நிகழ்ச்சி நடந்த இடத்தில் நிறைய பேர் இருந்தார்கள். அங்கு என்னுடைய பாதுகாவலர்களுமே இருந்தார்கள். இருந்தாலுமே ரசிகர்கள் என்னை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருக்கிறார்கள். அதில் சிலர் அவருடைய கைகளை கொடுப்பதற்காக நீட்டுகிறார்கள், சிலர் கைகளை முத்தமிடுகிறார்கள். இப்போது பரவி வரும் சர்ச்சையும் உள்நோக்கத்தோடு நான் செய்ததாக சொல்கிறார்கள்.
உதித் நாராயணன் கொடுத்த விளக்கம்:
இதனால் என்னை மோசமானதாகவும் இணையத்தில் திட்டுகிறார்கள். எங்கள் குடும்பத்தில் பிரச்சனை வர வேண்டும் என்று தான் இதையெல்லாம் செய்து இருக்கிறார்கள். நான் மேடையில் பாடும்போது ஒரு விதமான வித்தியாசமான சூழ்நிலை இருக்கும். ரசிகர்கள் என்னை விரும்புகிறார்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். அதோடு ரசிகைக்கு முத்தமிட்டது ஒரு தன்னிச்சையான தருணம். நான் கிட்டத்தட்ட 46 வருடங்களாக பாலிவுட் துறையில் இருந்து வருகிறேன். எனக்கு ரசிகர்களை வலுக்கட்டாயமாக முத்தமிடும் பழக்கம் கிடையாது. உண்மையில் ரசிகர்கள் என் மீது அன்பைப் பொழியும் போது நான் என்னுடைய கைகளை மடக்கி வைத்துக் கொள்கிறேன். மேடையில் இருக்கும் போது நான் அவர்களை கைகூப்பி வணங்குவேன் என்று கூறி இருக்கிறார்.