புகைப்படம் எடுக்க வந்த ரசிகையிடம் அத்துமீறிய பாடகர் உதித் நாராயண் - குவியும் கண்டனங்கள்

By subhashini · 2/2/2025

செல்பி எடுக்க செல்ஃபி எடுக்க வந்த ரசிகைக்கு பாடகர் உதித் நாராயணன் முத்தம் கொடுத்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்திய சினிமா உலகில் பின்னணி பாடகராக இருப்பவர் உதித் நாராயணன். இவர் நேபாளத்தை சேர்ந்தவர். இவர் பாலிவுட்டில் நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். மேலும், இவருடைய பாடல் திறமைக்காக தேசிய விருதும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கிட்டதட்ட இவர் நான்கு முறை தேசிய விருது வாங்கிருக்கிறார். அதோடு ஐந்து முறை பிலிம் பேர் விருதுகளையும் வாங்கி இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடியா, நேபாளி, போஜ்புரி, பெங்காலி உட்பட பல மொழிகளில் 2000 மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். பின் இவருடைய இசை திறமையை பாராட்டி மத்திய அரசு பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை எல்லாம் கொடுத்து இருக்கிறார்கள்.

உதித் நாராயண் குறித்த தகவல்:

இவர் 1980ல் பாலிவுட்டில் வெளிவந்த யுனிக் பீஸ் என்ற படத்தில் மூலம் தான் பாடகராக அறிமுகமானார்.
இவருடைய தனித்துவமான குரலால் ரசிகர்கள் மத்தியில் குறுகிய காலத்திலேயே பிரபலமானார் என்று சொல்லலாம். அதோடு தமிழிலும் இவர் பாடிய பாடல்கள் எல்லாம் மிகப் பிரபலமாகி இருந்தது. இவரை தமிழில் அறிமுகப்படுத்தி வைத்தது ஏ.ஆர் ரகுமான் தான். கிட்டத்தட்ட தமிழில் மட்டும் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

உதித் நாராயண் குடும்பம்:

இது ஒரு பக்கம் இருக்க, இவர் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவிற்கு சர்ச்சையும் இவரை சுற்றிக் கொண்டிருக்கிறது. சொந்த வாழ்க்கையில் இவர் நிறைய பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். இவர் 1985 ஆம் ஆண்டு தீபா என்பவரை திருமணம் செய்திருந்தார். பின் 2006 ராஞ்சனா என்பவர் தான் இவரின் முதல் மனைவி என்று கூறி மிகப்பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

ரசிகை செய்தது:

ஆரம்பத்தில் இதை மறுத்தாலுமே கடைசியில் ஒத்துக் கொண்டார். 1984ல் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற உதித், தீபா என்பவரை திருமணம் செய்து விட்டார். இவர்களுக்கு ஆதித்ய நாராயணன் என்ற மகன் இருக்கிறார். இவருமே பின்னணி பாடகராக இருக்கிறார். மேலும், சமீப காலகமாக இவர் சினிமாவில் மட்டுமில்லாமல் லைவ் ஷோ நிகழ்ச்சிகளிலும் பாடிக் கொண்டு வருகிறார்.

View this post on Instagram

A post shared by SAKHT INDIA 🔥 (@sakhtindia)

உதித் செய்த வேலை:

இந்த நிலையில் சமீபத்தில் உதித் நாராயணன் லைவ் ஷோவில் பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் பெண் ரசிகை செல்ஃபி எடுத்தார். பின் அந்த பெண் ரசிகை உதித் கன்னத்தில் முத்தம் கொடுக்க சென்றார். உடனே அவர் தலையை திருப்பி உதட்டில் முத்தமிட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full