பிரபல திரைப்பட பாடகி உமா ரமணன் காலமாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான பாடகியாக இருந்தவர் உமா ரமணன். இவர் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் என்ற படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ்த்திறவாய் என்ற பாடலின் மூலம் தான் திரை உலகில் அறிமுகமாகி இருந்தார்.

அதை அடுத்து இவர் பன்னிர் புஷ்பங்கள் படத்தில் இடம் பெற்று ஆனந்த ராகம், ஆகாய வெண்ணிலாவே, நீ பாதி நான் பாதி, பூபாலம் இசைக்கும், பூமகள் ஊர்வலம் போன்ற ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். மேலும், இவர் எம் எஸ் வி, இளையராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி இருக்கிறார்.

Advertisement

உமா ரமணன் குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் விஜய் – திரிஷா நடிப்பில் வெளியாகியிருந்த திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு என்ற பாடலையும் இவர் தான் பாடி இருந்தார். ஒரு காலத்தில் இவருடைய பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அதற்கு பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த உடன் இவர் மேடை கச்சேரிகளில் பாட ஆரம்பித்தார்.

உமா ரமணன் குடும்பம்:

இதனிடையே இவர் பாடகர் ரமணன் என்பவரை திருமணம் செய்தார். ரமணனும் பிரபல பின்னணி பாடகர் ஆவார். இவர் ஆயிரக்கணக்கான மேடை கச்சேரிகளில் பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் சில படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார். குறிப்பாக, சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ரமணன் இருந்தார்.

Advertisement

உமா ரமணன் இறப்பு:

இதன் மூலம்தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம். அதற்குப் பிறகு இவர் பல இசைக்கச்சேரிகளில் தான் பாடி வந்தார். மேலும், சென்னை அடையாரில் தான் உமா ரமணன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே உமா உடல்நிலை சரி இல்லாமல் அவஸ்தை பட்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் நேற்று காலை உமா இறந்து விட்டார். தற்போது இவருக்கு 69 வயது. இவருடைய மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

பிரபலங்கள் இரங்கல்:

இவருடைய இறுதி சடங்குகள் சென்னை அடையாறில் உள்ள அவருடைய வீட்டில் இன்று மாலை நடைபெற இருக்கிறது. அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் உமா மறைவு குறித்து அவருடைய கணவர் ரமணன் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய மனைவி உமா ரமணன் அவர்கள் மே ஒன்றாம் தேதி இறைவனை சேர்ந்து விட்டார். பிரைவசி காரணமாக சொல்லவில்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement