பாடகி வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி. மலையாளம், கன்னடம் என 19 மொழிகளில் வாணி ஜெயராம் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழில் முள்ளும் மலரும் அபூர்வ ராகங்கள் புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்கள் பல பாடல்களையும் பாடியுள்ளார். இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள கலைவாணி என்ற ஊரில் நவம்பர் 30தேதி 1945ஆம் ஆண்டு பிறந்தார். பாடகி வாணி ஜெயராம் குடும்பம் இசையில் பக்தி மிக்கவர்கள். இவர் கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், ஆர்.எஸ்.மணி போன்றவர்களிடம் தான் இசை பயின்றார். சிறு வயதில் வானொலியில் ஒளிபரப்பாகும் முகம்மது ரபி மற்றும் லதா மங்கேஷ்கர் போன்றவர்களின் பாடல்களை கேட்டு வளர்ந்த இவர் சினிமாவில் பாடவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.

பின்னர் படிப்பிற்க்காக சென்னை வந்த இவர் மேரிக் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்து வங்கியில் வேலை செய்து வந்தார். இவருக்கு இசையின் மீது உள்ள ஆர்வத்தை அறிந்த இவரது கணவர் இவர் ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொள்வதற்கு ஊக்குவித்தார். அதற்கு பிறகு 1971ஆம் ஆண்டு குட்டி என்ற ஹிந்திப்படத்தில் படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமாக்கினார். பின்னர் பல திரைப்படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களையும் பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.

Advertisement

10000க்கும் மேல் பாடல்கள் :

மேலும் இவருக்கு தமிழ் நட்டு, ஆந்திர, ஒடிசா, குஜராத் போன்ற மாநில அரசின் சிறந்த பின்னணி பாடகிக்காக விருது வழங்கப்பட்டது, அதோடு கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தின் போது கூட இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒரூ பாடலை பாடி நன்றி சொல்லியிருந்தார். மேலும் இவர் கடந்த அரை நூற்றாண்டாக 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

மறைவு :

இப்படி பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி வாணி ஜெயராம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயத்துடன் இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு இருந்தார். இவரது மரணம் குறித்து வாணி ஜெயராம் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் பேசிய போது ‘அவர் வீட்டில் தனியாகத்தான் வசித்து வந்தார். கடந்த 10 வருடமாக அவரின் வீட்டு வேலைகளை நான் தான் செய்து வந்தேன்.

Advertisement

வழக்கம்போல 10:45 மணிக்கு வீட்டிற்கு வந்தேன். நான் வீட்டில் காலிங் பெல்லை பல முறை அடித்தபோதும் அவர் கதவை திறக்கவே இல்லை. இதனால் போன் செய்தும் பார்த்தேன், அப்போதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் ஏற்பட்டு கீழ் வீட்டில் இறந்தவர்களிடம் விசயத்தை சொன்னேன். பின்னர் அனைவரும் சேர்ந்து போலீசுக்கு தகவல் சொன்னோம் அவர் நன்றாகத்தான் இருந்தார்.

Advertisement

போலீசார் வழக்கு பதிவு :

அவர் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் கூறியிருந்தார். மேலும், இது குறித்து போலீசார் தெரிவித்த போது அவர் கீழே தவறி விழுந்து இடித்துக் கொண்டிருக்கலாம் என்றுதான் கருதினோம். ஆனால், அவருடைய முன் தலையில் காயம் இருந்தது எனவே இந்த மரணத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியிருந்தார்கள். இதனை தொடர்ந்து அவர் தவறி விழுந்து நெற்றியில் காயம் ஏற்பட்டு தான் இறந்தார் என்று முடிவிற்கு வந்தனர்.

Advertisement