காசு கொடுத்தாங்க பாடினேன், வம்பு வழக்கெல்லாம் எனக்கு எதுக்கு? வேல்முருகன் சொன்ன விஷயம்
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய படைப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். வருகிற 2026 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் விஜய் அறிவித்திருந்தார். இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள்.
இதை அடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கட்சி தொண்டர்கள், உறுப்பினர்கள் எல்லோருமே கொண்டாடி இருந்தார்கள்.
பின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட அளவில் கழக செயல்வீரர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த விழாவில் விஜய், நம்ம சின்னம் விசில், உங்க சின்னம் விசில், வெற்றி சின்னம் விசில், கப்பு முக்கியம் பிகிலு என்று கூறி விசில் அடித்து தன்னுடைய கட்சி சின்னத்தை அறிவித்திருந்தார்.
விஜய் அரசியல்:
மேலும், சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றிருந்தது. விழாவில் விஜய் பேசி இருந்த விஷயங்கள் எல்லாம் ரசிகர்கள் முதலில் வரவேற்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் விழா மேடையில் பாடகர் வேல்முருகன் பாடல்கள் எல்லாம் பாடி இருந்தார். அதோடு பாடகர் வேல்முருகன் பாடிய பாடலுக்கு விஜயையும் நடனமாடி இருந்தார். அதோடு பாடகர் வேல்முருகன் அவர்கள் முருகன் பாடலை பாடியிருந்ததார்.
https://www.youtube.com/watch?v=mGvCJQKO1wk
இந்து முன்னணியினர் புகார்:
இது இந்து கடவுளை கொச்சைப்படுத்தி இருந்தது என்று விமர்சனங்களும் எழுந்தது. அரசியல் நோக்கத்துக்காக முருக கடவுளை வைத்து பாடியிருப்பது இந்துக்களின் மனதை புண்படுத்தி விட்டிருக்கிறது என்று இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்கள். மேலும், வேல்முருகன் பாடிய பாடலில் கொள்ளை அடித்த கூட்டம் போன்ற வார்த்தைகள் எல்லாம் வந்திருந்தது. இது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருந்தது.
வேல்முருகன் பேட்டி:
இந்நிலையில் இதற்கு இது தொடர்பாக அளித்த பேட்டியில் வேல்முருகன், நான் எல்லோருக்கும் பொதுவான ஆள். பிரதமர் மோடி ஒரு மேடையில் என்னை கட்டிப்பிடித்தார். உதயநிதிக்கு வேணா மச்சான் பாட்டு
பாடியிருக்கிறேன். அதனால் வம்பு வழக்கெல்லாம் எனக்கு எதற்கு? மூன்றாவது வருட தொடக்க விழாவில் கச்சேரிக்கு கூப்பிட்டு இருந்தார்கள். என்னை நம்பி என் கூட இருக்கிறவர்களுக்காக பாட, நாலு காசும் கிடைத்தது. நல்லா இருந்தது என்று சொன்னார்கள். மத்தபடி இது குறித்து பேசுவதற்கு எதுவுமே இல்லை என்று முடித்துக் கொண்டார்.