பிஸ்னசுக்காக மனோஜ்- ரோகினி போட்ட புது திட்டம், முத்து ஒத்துக் கொண்டாரா? சிறகடிக்க ஆசை

By subhashini · 22/10/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் சீதாவை பெண்பார்க்க வரும் விசயத்தை மீனா சொல்ல, முத்துவும் ஒத்து கொண்டார். பின் வீட்டில் மனோஜ், முத்துவால் என் கடையில் பிரச்சனை. கடை வியாபாரமே கெட்டுப் போனது என்று ஆர்ப்பாட்டம் செய்தார். அதற்குப்பின் நடந்தை மனோஜ் சொல்ல, விஜயா பயங்கரமாக கோபப்பட்டார். கடைசியில் இந்த மாதம் பணம் கொடுக்க முடியாது என்று மனோஜ் சொல்ல, முத்து வாக்குவாதம் செய்தார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை வீட்டார் சீதாவை பார்த்த உடன் பிடித்திருக்கிறது என்று சொல்ல, சீதா எதுவுமே சொல்லாமல் தயங்கி அமைதியாகவே இருந்தார்.

மீனா குடும்பத்தில் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். அதற்கு பின் சீதாவிடம் முத்து, உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டதற்கு, சில கண்டிஷனை போட்டார். இன்னொரு பக்கம் பிஏ, ரோகினியிடம் பேச வேண்டும் போன் செய்து கொடு என்று வித்யாவை டார்ச்சர் செய்தார். வித்யா போன் செய்தவுடன் ரோகிணி போனை விஜயா எடுத்துப் பேச, உடனே ரோகினி போனை வாங்கி ஏதோ பேசி சமாளித்து விட்டார். விஜயாவும் நம்பி விட்டார். பின் முத்து-மீனா இருவருமே மாப்பிள்ளை பற்றியும் சீதா திருமணத்தை பற்றியும் பேசிக்கொண்டு காரில் வந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

மேலும், ரோகினி- வித்யா இருவருமே சிட்டியை சந்தித்து பி.ஏ டார்ச்சர் செய்வதை பற்றி பேச, நீங்கள் வீடியோ எடுத்து கொடுத்தால் தான் நான் உதவி செய்வேன் என்று கண்டிஷன் போட்டார். ரோகினி எதுவும் பேச முடியாததால் டைம் கொடுங்கள், கூடிய சீக்கிரத்திலேயே எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டார். அதற்குப்பின் சீதாவை பார்க்க வந்த மாப்பிள்ளையை ரெஸ்டாரண்டில் சந்தித்து முத்து - மீனா பேசி இருந்தார்கள். அவர் ரொம்ப எதார்த்தமாக நிறைய விஷயங்கள் பேசி சில கண்டிஷனை போட்டார். நேற்று எபிசோட்டில் மனோஜ், கடையில் வியாபாரமே ஆகவில்லை என்று புலம்பி கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:

அந்த சமயம் பார்த்து வந்த மனோஜ் நண்பர், பெரிய டீலர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் நீங்கள், பெரிய பணக்கார வசதியான குடும்பம் என்று சொன்னால் அந்த ஆர்டர் கிடைக்கும். கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று சொன்னவுடன் மனோஜ் பேராசைப்படுகிறார். ஆனால், ரோகினி வேணாம் என்று சொல்லியும் மனோஜ் கேட்கவில்லை. நம்முடைய கல்யாண நாளை கிராண்டாக செய்து அந்த டிலரை வர வைத்து ஆர்டரை ஓகே பண்ணிடலாம் என்று மனோஜ் சொல்ல, அதற்கு நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன் என்று ரோகினி சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சீதாவும் அவருடைய அம்மாவும் திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த மீனா, மாப்பிள்ளை நன்றாகத்தான் இருக்கிறார். எங்களுக்கு பிடித்திருக்கிறது. சீதா ஒருமுறை பார்த்து பேசி விட்டால் முடிவெடுக்கலாம் என்று சொல்ல சீதாவும் தயங்கி அமைதியாகவே இருக்கிறார். பின் மனோஜ்-ரோகினி இருவருமே வீட்டில் தங்களுடைய கல்யாண நாளை பற்றி பேசுகிறார்கள். வழக்கம்போல் கிண்டலாக முத்து பேசுகிறார். அப்போது மனோஜ், திருமண நாளை கிராண்டாக கொண்டாடுகிறேன்.

சீரியல் ட்ராக்:

காரணம், டீலர் ஒருவர் மூலம் புது பிசினஸ் பண்ண இருக்கிறேன் என்று சொல்ல, விஜயா ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் மனோஜ், முத்து- ரவியை தனியாக அழைத்து பேசுகிறார். அதே போல் ரோகிணி, மீனா- சுருதியை தனியாக அழைத்து பேசுகிறார். அப்போது மனோஜ், அந்த டீலரிடம் என்னுடைய தம்பிகள் எல்லா வசதியான குடும்பம். ஒரு தம்பி சொந்தமாக ரெஸ்டாரண்ட் நடத்துகிறான். இன்னொரு தம்பி 200 கார் வைத்திருக்கிறார் என்று சொல்லி இருக்கிறேன். அதற்கு தகுந்தார் போல் நீங்கள் உடை அணிந்து வர வேண்டும் என்று சொல்ல ஆரம்பத்தில் முத்து- ரவி இருவருமே தயங்கினார்கள். பின் தன் அண்ணனுக்காக ஒத்து கொள்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full