சினிமா மட்டும் இல்ல சீரியலிலும் அட்ஜஸ்ட்மென்ட்? சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை சங்கீதா ஓபன் டாக்
விஜய் ஒளிபரப்பி ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வரிசையில் விஜய் டிவியில் எப்போதுமே டிஆர்பியில் நம்பர் 1 சீரியல் ஆக இருப்பது சிறகடிக்க ஆசை.
இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரை எஸ். குமரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த தொடரில் ஹீரோவாக முத்து என்ற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த், ஹீரோயினியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் கோமதி பிரியாவும் நடிக்கிறார்கள்.
இவர்களை அடுத்து சீரியலில் சுந்தர்ராஜன், அணிலா, சல்மா, ஸ்ரீ தேவா, பிரீத்தி உட்பட பலர் நடிக்கிறர்கள்.
மேலும், சீரியலில் ஹீரோ முத்து படிக்காதவர். தன்னுடைய அப்பாவிற்காக எதையும் செய்யக்கூடியவர். சிறு வயதிலிருந்தே அம்மாவின் பாசத்திற்காக ஏங்கக் கூடியவர். ஆனால், விஜயாவுக்கு தன்னுடைய மற்ற இரண்டு பிள்ளைகளை தான் பிடிக்கும். முத்துவை எதிரி போலவே பார்ப்பார். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை நடத்தி வருகிறார். எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் மீனாவின் அப்பா இறந்து விடுகிறார். இதனால் அண்ணாமலை, மீனாவை முத்துவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
சிறகடிக்க ஆசை குறித்த தகவல்:
மீனா வந்த பிறகு முத்துவின் வாழ்க்கையே மாறுகிறது. அதற்குப்பின் பணக்கார பெண் என நினைத்து ரோகினியை தன்னுடைய மூத்த மகன் மனோஜிக்கு விஜயா திருமணம் மூத்த வைக்கிறார். ஆனால், அவர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயானவர் என்பது தெரியாது. இது தெரியாமல் இருப்பதற்காக பல தில்லாலங்கடி வேலைகளை ரோகினி செய்கிறார். மூன்றாவது மகன் ரவி பணக்கார பெண் சுருதியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். தினமும் இந்த மூன்று ஜோடிகளுக்கு இடையே நடக்கும் கலாட்டா கலவரங்கள் தான் சீரியல்.
சீரியல் கதை:
தற்போது சீரியலில் விஜயா டாக்டர் பட்டம் வாங்குவதற்காக எல்லோரிடமும் அன்பாகவும், பாசமாகவும் இருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், விஜயா ஏன் இதற்கெல்லாம் இப்படி செய்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை. இன்னொரு பக்கம் மேனேஜர், முத்து வீட்டில் உண்மையை சொல்லி விடுவேன் என்று மிரட்டுவதால் அவர் யாருக்கும் தெரியாமல் கடையில் இருக்கும் படத்தை ரோகினி திருடி விடுகிறார்.
கிரிஷ் உடைய பாட்டிற்கு உடம்பு சரியில்லை என்பதால் முத்து தான் அவர்களை கவனித்துக் கொள்கிறார். இதனால் தன்னைப் பற்றிய உண்மை வெளிவந்திடும் விடுமோ என்று ரோகினி பயந்து கொண்டு இருக்கிறார்.
சங்கீதா லியோனிஸ் பேட்டி:
இனி அடுத்து என்ன? என்று விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் கதாநாயகி மீனாவின் தங்கை சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சங்கீதா லியோனிஸ். இந்த சீரியலின் மூலம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவர் வெப் தொடர், ஷார்ட் பிலிம்ஸ் எல்லாம் நடித்து வருகிறார். அதோடு இவர் மருத்துவம் படித்து முடித்து இருக்கிறார். சினிமாவின் மீது இருந்த ஈடுபட்டால் தான் இவர் மீடியாவுக்குள் நுழைந்து இருக்கிறார்.
அட்ஜஸ்மெண்ட் பற்றி சொன்னது:
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி சங்கீதா லியோனிஸ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பெண்கள் மீடியாவிற்கு செல்கிறார்கள் என்றாலே வீட்டில் உள்ளவர்கள் மட்டும் இல்லாமல் உறவினர்கள் எல்லோருமே பயப்படுவார்கள். ஆனால், இதில் திறமையை காட்டி நிரூபித்து விட்டால் அவர்கள் சமாளித்து விடலாம். சினிமா, சின்னத்திரை இரண்டிலுமே அட்ஜஸ்ட்மென்ட் இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் சின்னத்திரை, வெப் தொடர் எல்லாம் நடித்து வருகிறேன். ஆனால், இதுவரை எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. தவறாக எந்த காலுமே வந்ததே கிடையாது என்று கூறியிருக்கிறார்.