போலீசிடம் மீண்டும் சிக்கிய முத்து, மீனாவுக்கு கிடைத்த ஜாக்பாட் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் முத்து-மீனா இருவரும் சுருதியை தேடி போனார்கள். மண்டபத்திற்கு வந்த அனைவரும் ஸ்ருதியை தான் விசாரித்தார்கள். ரவிக்கு என்ன சொல்வது என்று புரியாமல் சமாளித்தார். இதையெல்லாம் பார்த்த ஸ்ருதியின் அப்பா, அம்மாவிற்கு சந்தேகம் வந்தது. ஒரு வழியாக முத்து-மீனா இருவரும் சுருதி இருக்கும் இடத்திற்கு சென்று விட்டார்கள். அப்போது அவரிடம் விசாரிக்க சுருதி, இனிமேல் அவனுடன் வாழ முடியாது. நான் வக்கீலை பார்த்து விவாகரத்து கொடுக்கப் போகிறேன் என்று சொன்னவுடன் இருவருமே ஷாக் ஆனார்கள்.
ஸ்ருதி, வக்கீலை பார்த்து விவாகரத்து வாங்க போகிறேன் என்று சொன்னவுடன் முத்துவிற்கு பயங்கர கோபம் வந்தது. பின், மீனா ரவியின் ஹோட்டலில் நடந்த விபரத்தை சொன்னவுடன் ஸ்ருதி, தான் செய்த தவறை உணர்ந்தார். மூவருமே மண்டபத்திற்கு கிளம்பி போனார்கள். இன்னொரு பக்கம் மண்டபத்தில் எல்லோருமே ரவியை சூழ்ந்து கொண்டு ஸ்ருதி எங்கே? என்ன பிரச்சனை? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, எந்த பதிலும் சொல்ல முடியாமல் ரவி திணறி இருந்தார். அந்த சமயம் பார்த்து ஸ்ருதி மண்டபத்திற்குள் வந்தார். பின் நல்லபடியாக தங்களுடைய திருமண நாளை ரவி- சுருதி இருவருமே கொண்டாடி இருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
பின் அவர்கள், தங்களுக்கு துணையாக இருந்த முத்து,மினாவை பற்றி ரொம்ப பெருமையாகவும் பேசி இருந்தார்கள். அதற்கு பின் பாடல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று எபிசோட்டில் ரவி- சுருதி இருவருக்கும் எல்லோரும் பரிசு கொடுத்தார்கள். நல்லபடியாக தங்களுடைய திருமண நாளை கொண்டாடி முடித்தார்கள். பின் வீட்டில் உள்ள எல்லோருமே அதை பற்றி சந்தோஷமாக பேசி இருந்தார்கள். அப்போது ஸ்ருதி, மீனாவிற்கு பரிசு கொடுக்க, ரோகினி, மனோஜ்க்கு இருவரும் வயிறு எரிந்தது. இன்னொரு பக்கம் ட்ராபிக் போலீஸ் ஹாஸ்பிடலில் தன்னுடைய அம்மாவை அழைத்துக் கொண்டு வந்தார்.
நேற்று எபிசோட்:
அவர் அம்மாவின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அட்மிட் பண்ண சொன்னார்கள். ஆனால், அவருக்கு நேரம் இல்லாததால் தயங்கினார். உடனே சீதா, நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வேலையை முடித்துவிட்டு அம்மாவை அழைத்து செல்லுங்கள் என்று சொன்னவுடன் அந்த போலீஸ் ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் ரோகினி- சிட்டி இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது ரோகினி, சத்யா வீடியோ பற்றி முத்து தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார். நீதான் என்று தெரிந்தால் பிரச்சனையாகும் என்று சொல்ல, அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார் சிட்டி.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து தன்னுடைய நண்பர் செல்வத்துடன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதே ஹோட்டலுக்கு அந்த ட்ராபிக் போலீஸ் வருகிறார். அவரை பார்த்தவுடன் முத்து, தன்னுடைய நண்பன் செந்தில் இடம் நக்கலாக அந்த போலீசை வெறுப்பேற்றும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே கோபத்தில் அந்த போலீஸ் முத்துவின் சட்டையை பிடித்து சண்டைக்கு போகிறார். செல்வம் சண்டையை விலக்கி விலக்கி விட்டார். இருந்தாலும் அந்த போலீசுக்கு முத்துவின் மீது கோபம் குறையவே இல்லை.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சீதா, ஹாஸ்பிடலில் அந்த போலீஸின் அம்மாவிற்கு உதவி செய்வது பற்றி வீட்டில் சொன்னவுடன் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். பின் சத்யா, தன்னுடைய அக்காவிற்காக பெரிய ஆர்டரை வாங்கிக் கொண்டு வருகிறார். இதை கேட்டவுடன் மீனா, அவருடைய அம்மாவும் சந்தோஷப்படுகிறார்கள். பின் இதைப்பற்றி மீனா, முத்துவிடம் சொல்கிறார். பின் மீனா, அதற்காக காசு செலவாகும். ஐம்பதாயிரம் வரை தேவை என்று சொன்னவுடன் முத்து பார்த்துக்கொள்ளலாம் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.