அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு, போன் எடுக்க ரோகினி செய்த வேலை- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் தன்னுடைய கல்யாண நாளை கிராண்டாக கொண்டாடி அந்த டிலர் ஆர்டரை வாங்குவது பற்றி வீட்டில் பேச, எல்லோரும் ஒத்து கொண்டார்கள். ரோகினி, எப்படியாவது இந்த பங்க்ஷனில் முத்து மொபைல் எடுக்க வேண்டும் என்று தன்னுடைய தோழியிடம் சேர்ந்து திட்டம் போட்டார். டீலர் ஓனர் வந்தவுடன் அவரை மனோஜ் வரவேற்று தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது முத்து, 50 கார் வைத்து ரன் பண்ணி இருப்பதாக மனோஜ் சொல்ல, முத்துவும் ஏதேதோ சொல்லி சமாளித்து இருந்தார். பின் நல்லபடியாக கேக் வெட்டி தங்களுடைய திருமண நாளை மனோஜ்-ரோகினி கொண்டாடி இருந்தார்கள். அதற்குப்பின் தன்னுடைய ஆர்டரை மனோஜிற்கு தருவதாக அந்த ஓனரும் சொன்னதால் மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது. பின் முத்துவை வீட்டுக்கு மீனா அழைத்து சொல்ல பார்த்தார். ஆனால், ரோகினி அவர்களை தடுத்தார்.
சிறகடிக்க ஆசை:
முத்துவை குடிக்க வைத்து மொபைலை எடுக்க வேண்டும் என்று ரோகினி திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் பார்ட்டியில் ஆண்கள் எல்லோருமே குடித்துக்கொண்டு ஜாலியாக இருக்க, முத்து மட்டும் குடிக்காமல் அமைதியாக இருந்தார். பின் எல்லோருமே அவரை உஸ்பேத்தி விட, வேறு வழி இல்லாமல் முத்து குடித்து விட்டார். இதனால் ரோகினி ரொம்ப சந்தோஷப்பட்டு போனை எடுக்க திட்டம் போட்டார். நேற்று எபிசோட்டில் எல்லோருமே குடித்துவிட்டு ஆட்டம் பாட்டம் என்று சந்தோஷமாக இருந்தார்கள்.
நேற்று எபிசோட்:
எப்படியாவது முத்து போனை வாங்க வேண்டும் என்று ரோகினி முயற்சி செய்தார். ஆனால், முடியவில்லை. போதையில் முத்து, தாங்கள் பணக்கார குடும்பம் இல்லை என்று ஓனரிடம் சொன்னவுடன் அவர் ஷாக் ஆனார். பின் அவர், முத்துவின் நேர்மையை பாராட்டி இந்த டீலங்கை மனோஜூக்கு கொடுத்தார். அதற்குப்பின் எல்லோருமே வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், வரும் வழியிலேயே முத்துவின் போனை ரோகினி எடுத்து மனோஜ் பாக்கெட்டில் போட்டு விட்டார்.
இன்றைய எபிசோட்:
பின் இவர்கள் மூவரும் குடித்து இருப்பதை அறிந்த அண்ணாமலை கோபப்பட்டு திட்டி வெளியிலேயே தூங்க சொன்னார். பெண்களை மட்டும் வீட்டிற்குள் வர சொன்னார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மருமகள்கள் மூவருமே மன்னிப்பு கேட்டும் அண்ணாமலை ஏற்றுக்கொள்ளவில்லை. முத்து- மனோஜ்-ரவி மூவருமே மன்னிப்பு கேட்டு புலம்புகிறார்கள். ஆனால், அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் ரோகினி எப்படியாவது போனை எடுத்துவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து முத்து தண்ணீர் குடிக்க உள்ளே வருகிறார். இதை பார்த்த மீனா, அவரை வெளியே கூட்டிட்டு போயி பேசுகிறார். முத்துவும் பார்ட்டியில் நடந்ததையும், மீனாவையும் புகழ்ந்து பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். மீனாவும் அவருடன் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரோகினி, போனை எப்படி எடுப்பது என்று யோசித்து கொண்டு இருக்கிறார். பின் தன்னுடைய தோழிக்கு போன் செய்து நடந்ததை பற்றி ரோகினி பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.