மனோஜ் செய்த வேலையால் கொந்தளித்த அண்ணாமலை, மீனாவை அசிங்கப்படுத்திய விஜயா - சிறகடிக்க ஆசை

By subhashini · 20/11/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிட்டி, ரோகினிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்ட, அவர் பார்வதி வீட்டில் விஜயா வைத்து இருந்த பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடி விட்டார். இன்னொரு பக்கம், முத்து செய்த வேலையை பார்த்த விஜயா, அந்த பொண்ணு யார்? மீனா எங்கே போயிட்டாள்? என்று அவளுக்கு சப்போர்ட் செய்து பேச, மீனா ரொம்ப சந்தோஷப்பட்டார். அதற்குப் பின் ரோகினி, சிட்டி கேட்ட பணத்தை கொடுத்து விட்டு பிஏவை எதாவது செய்ய சொன்னார். பின் மனோஜ்- ரோகினி இருவரும் காரில் வந்து கொண்டிருக்கும் போது புது டீலர், போன் செய்து பாராட்டி இருந்தார்.

உங்களுடைய பிசினஸ் நல்லா இருக்கிறது. இன்னும் ப்ரொமோட் செய்ய வேண்டும் என்றால் விளம்பரம் எடுக்க வேண்டும். அதற்கு உங்களுடைய குடும்ப ஆட்களை வைத்தே பண்ணுங்கள் என்று சொன்னவுடன் மனோஜ், வேண்டாம் என்றார். உடனே அவர், நாலு ஜோடிக்கு இரண்டு லட்சம் தருகிறேன் என்று சொன்னவுடன் மனோஜ் ஒத்துக் கொண்டார். ஆனால், இந்த பணம் விஷயத்தை வீட்டில் சொல்லாமல் நடிக்க வைக்கலாம் என்று மனோஜ் திட்டம் போட, ரோகினி சரி என்றார்.

சிறகடிக்க ஆசை:

பின் வீட்டில் மனோஜ், டீலர் சொன்ன விஷயத்தை சொல்ல, முதலில் எல்லோருமே மறுத்தாலும் கடைசியில் கடையின் டெவெலப்புக்காக ஒத்துக் கொண்டார்கள். நேற்று எபிசோட்டில் எல்லோருமே விளம்பரத்தில் நடிக்க பணம் கேட்டார்கள். அதற்கு மனோஜ், குடும்பம் ஒற்றுமை என்று டயலாக் பேச, எல்லோரும் சரி என்று ஒத்துக்கொண்டதால் ரோகினி ரொம்ப சந்தோசப்பட்டார். பின் தன்னுடைய அம்மாவிற்கு மட்டும் தனியாக சந்தித்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை மனோஜ் கொடுத்தார். மறுநாள் காலையில் சூட்டிங் நடந்தது. டைரக்டர் ஒவ்வொருவருக்கும் டயலாக் கொடுத்து பேச, எல்லோருமே ஆரம்பத்தில் தப்பு தப்பாக பேசியதால் அவர் பயங்கரமாக திட்டி இருந்தார்.

நேற்று எபிசோட்:

குறிப்பாக அண்ணாமலையை திட்டுவது முத்துவிற்கு பிடிக்கவே இல்லை. இதனால் முத்து, அவரிடம் சண்டைக்கு போனார். உடனே இயக்குனர் கோபப்பட்டு, யாரும் ஓசியில் நடிக்கவில்லை. காசு வாங்கி தானே நடிக்க வந்தீர்கள் என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக்கில் மனோஜை பார்த்தார்கள். பின் வீட்டில் இதை பற்றி எல்லோரும் கேட்க, சூட்டிங் முடிந்து தரலாம் என்று இருந்தேன் என்றார் மனோஜ். ஏன் முன்னாடியே சொல்லவில்லை? என்பதற்கும் அதையே திருப்பி திருப்பி மனோஜ் சொல்ல, முத்து- ரவி இருவருமே மனோஜை அடிக்க போனார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் எல்லோரும் இதை பற்றி ரோகினி இடம் கேட்க, அவரும் மனோஜ் சொன்ன பதிலை சொன்னவுடன் பயங்கரமாக கொந்தளித்து கத்துகிறார்கள். பின் அண்ணாமலை, இதை பற்றி பொறுமையாக மனோஜ்- ரோகினி இடம் கேட்க, அவர்கள் திருப்பி திருப்பி வாழைப்பழ கதையை சொன்னதால் அண்ணாமலைக்கே பயங்கர கோபம் வந்துவிட்டது. ஓரு வழியாக பணத்தை ரோகினி எல்லோருக்கும் அனுப்பி விடுகிறார். ஆனால், விஜயாவிற்கு மட்டும் குறைவாக அனுப்புகிறார். உடனே ஏன்? என்று அண்ணாமலை கேட்டதற்கு, நான் ஏற்கனவே அம்மாவிடம் பணத்தை கொடுத்து விட்டேன் என்று மனோஜ் சொன்னவுடன் அவருக்கு பயங்கர கோபம் வந்தது.

சீரியல் ட்ராக்:

பின் அந்த பணத்தை மீனா, முத்து வண்டி தவணை கட்டி விடுகிறார். இன்னொரு பக்கம் பார்வதி பூ கேட்டதால் மீனா கொண்டு போய் தருகிறார். மீனா வந்தவுடன் அவரை எல்லோர் முன்னாடியும் கேவலமாக பேசி விஜயா அவமானப்படுத்துகிறார். பின் விஜயா, பார்வதி வீட்டு வேலையை செய்ய சொன்னவுடன் மீனாவும் எதுவும் பேசாமல் செய்கிறார். அந்த சமயம் பார்த்து தன்னுடைய வகுப்பில் நடனமாடும் ரதியின் அம்மா புடவை எடுத்துக்கொண்டு வந்து விஜயாவிற்கு தந்தார். அப்போது மீனா, வேலை எல்லாம் முடிந்து விட்டது என்று அங்கிருந்து செல்கிறார். பார்வதியும் பணத்தை எடுக்க மேலே போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full