நீத்துவால் சண்டை போட்டு கொண்ட ஸ்ருதி-ரவி, சிட்டி வலையில் சிக்கிய ரோகினி - சிறகடிக்க ஆசை

By subhashini · 20/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் போலீஸ் அதிகாரி வீட்டிற்கு சென்று இருந்தார் மீனா. அங்கு அவர், உன் கணவன் குடித்துவிட்டு அருண் வீட்டின் முன்பு கல் எடுத்து அடித்து தகராறு செய்திருந்தார். இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று முத்துவை திட்டி இருந்தார். பின் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மீனா, அங்கு ஒரு போலீஸ் அதிகாரிக்கு தன் கணவரின் காரை ஓட்டி சென்று தான் அடிபட்டது என்ற உண்மை தெரிந்தது. பின் மீனா, அவரிடம் கெஞ்சி கேட்டு,அழுது புலம்பி உண்மையைக் கேட்டார். ஆனால், அவர் கீழே விழுந்ததாக பொய் சொன்னார். அதற்கு பின் வெளியே மீனா, கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு உதவி செய்தார். இதை அந்த போலீஸ் பார்த்தார்.

அதற்குப்பின் முத்துவை போலீஸ் அழைத்து வந்தார்கள். மீனாவை போலீஸ் ஸ்டேஷனில் முத்து பார்த்தவுடன் கோபப்பட்டார்கள். பின் அந்த அதிகாரி, நீ அருண் வீட்டிலேயே கல் அடித்து பிரச்சனை செய்வாயா? என்று சொல்லி முத்துவை கைது செய்ய சொன்னார்கள். உடனே மீனா, போலீசிடமும் கெஞ்சி கதறி இருந்தார். அப்போது மனம் தாங்காமல் அந்த கையில் அடிபட்ட போலீஸ், உண்மையிலேயே வண்டியில் பிரேக் பிடிக்கவில்லை. அதன் மூலம் தான் எனக்கு அடிபட்டது என்று சொன்னார். அருண் வேண்டாம் என்று கண்ணால் சைகை பண்ணி இருந்தார். ஆனால், அந்த போலீஸ் கேட்காமல் உண்மையை சொல்லி விட்டார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் போலீஸ் அதிகாரி, உண்மையிலேயே அந்த வண்டியில் பிரேக் பிடிக்கவில்லை. மெக்கானிக் ஒருவர் தான் என்னை காப்பாற்றி வண்டியையும் சரி செய்தார். இந்த விஷயத்தை நான் அருணிடம் சொன்னேன். அவர்தான் சொல்ல வேண்டாம் என்றார். இதனால் உயர் அதிகாரி அருண் மீது கோபப்பட்டு ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து விட்டார். அதற்குப்பின் முத்துவை விடுதலை செய்து அறிவுரை சொல்லி அனுப்பி இருந்தார்கள். அதோடு மீனா தனக்காக கஷ்டப்பட்டதை நினைத்து முத்து சந்தோசப்பட்டார். பின் வீட்டிற்கு வந்த முத்து, போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விஷயத்தை எல்லோரிடமும் சொன்னார்.

நேற்று எபிசோட்:

அதற்குப்பின் முத்து தானாக பிரேக் பிடிக்காமல் போகவில்லை. இந்த வீட்டில் இருந்து தான் யாரோ ஒருவர் என்னுடைய வண்டி சாவியை எடுத்துக் கொடுத்திருக்கிறார் என்று மனோஜை பார்த்தார். மனோஜ், நான் எதுவும் செய்ய வில்லை என்று உடன் ரோகினி பக்கம் திரும்புகிறார் முத்து. உடனே ரோகினி, எதற்கு என் மீது வீண் பழி போடுகிறீர்கள். எனக்கே 1008 பிரச்சனை இருக்கிறது. ஆண்டியிடம் தினமும் திட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறேன். இவர் மாட்டி வைத்த சாவியை நான் கொண்டு போய் கொடுத்தேனா? என்று கேட்டார். அதற்கு முத்து, நான் மாட்டி வைத்தேன் என்று சொல்லவே இல்லையே என்பதால் ரோகிணி திருத்திரு என்று விழித்தார். முத்து உடன் சேர்ந்து சுருதியும் ரோகினியை கேள்வி மேல் கேள்வி கேட்டார். அண்ணாமலை, உண்மை தெரியாமல் தேவையில்லாமல் பேச வேண்டாம். அமைதியாக இருங்கள் என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, இந்த வேலையை செய்தது யார் என்று நான் கண்டுபிடிக்கிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் நீத்து, தன்னுடைய ரெஸ்டாரண்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். பின் இதைப்பற்றி இவர் சுருதியிடம் சொல்கிறார், உடனே ஸ்ருதி, இதற்கெல்லாம் ரவியும் தான் காரணம் என்றவுடன் நீத்து ஒத்து கொள்ளவில்லை. என்னுடைய பிரமோஷன் தான் இவ்வளவு பிரபலத்திற்கு காரணம் என்கிறார். இதனால் நீத்து-சுருதி இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. அப்போது வந்த ரவி, இது ஒரு பெரிய விஷயம் இல்லை. இதற்காக எதற்கு சரி வாக்குவாதம் செய்கிறாய் என்று கேட்கிறார். ஆனால், சுருதி கோபப்பட்டு ரவியை தீட்டிவிட்டு இந்த வேலையே தேவையில்லை என்று வந்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் ரோகினி, முருகனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சிட்டி இடம் நகை வாங்கப் போகிறார். அங்கு சிட்டி பணத்தை வாங்கிவிட்டு நகையை கொடுக்கிறார். ரோகினியும் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அதற்கு பின் வந்த மேனேஜரிடம் சிட்டி கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு, சொன்ன உடனே எப்படி பணம் வந்தது பார்த்தியா? என்று நக்கலாக சிரிக்கிறார். இரண்டு பேரும் ரோகினி இடம் இன்னும் பணத்தை வாங்க திட்டம் போடுகிறார்கள். இன்னொரு பக்கம் சுருதி, ரவியை வேலைக்கு போக வேண்டாம் என்று சண்டை போடுகிறார். அப்போது சுருதி, நாம் சொந்தமாக ரெஸ்டாரன்ட் திறக்கலாம் என்றவுடன் ரவி இப்போது முடியாது என்று இருவரும் சண்டை போடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full