சத்யாவிற்காக அருண் செய்த சம்பவம், ரோகினியின் நாரதர் வேலை - சிறகடிக்க ஆசை

By subhashini · 18/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ராணி சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு காரம் தாங்க முடியாமல் மொத்த குடும்பமே கதறுகிறது. விஜயா, சுருதி இருவருமே கத்தினார்கள். ஆனால், ரோகினி சமாளித்துக் கொண்டு அமைதியாக இருந்தார். பின் கோபப்பட்ட விஜயா, இனிமேல் இவளை கிச்சன் பக்கமே அனுப்பாதே. உன்னுடைய ஷோரூமில் வைத்துக் கொள்ளு என்று திட்டி விட்டார். அப்போது முத்து, இப்போதாவது மீனாவின் அருமை தெரிகிறதா? என்று கேட்டார். உடனே அண்ணாமலை, ஒருவர் இல்லாத போது தான் அவர்களுடைய அருமை தெரியும். அது உனக்கும் உன்னுடைய அம்மாவிற்கும் தான் சொல்கிறேன் என்றார்.

அதற்குப்பின் செல்வம் தனக்கு தெரிந்தவருடைய கார் டெக்கரேஷன் செய்வதற்காக மீனாவை அழைத்திருந்தார். மீனாவும் அவருடைய தோழிகளும் கார் டெக்கரேஷன் செய்த இடத்திற்கு முத்து வந்தார். முத்துவை பார்த்தவுடன் ஜாடமாடையாக மீனா விசாரித்தார். முத்துவுமே தன்னுடைய நண்பர்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா ரோகினியின் ஷோரூமுக்கு வந்து கொடுத்த பணத்தை எப்ப தரப்போகிறார்? என்று கேட்க, ரோகினி டைம் கேட்டார். பின் ஸ்ருதி அம்மா, ரவி வேலை செய்யும் இடத்திற்கு சென்று நீத்துவை பற்றி விசாரிக்க சொல்ல, ரோகினி முடியாது என்றார். இதனால் ஸ்ருதியின் அம்மா மிரட்டினார்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் முத்து வீட்டுக்கு வருகிறார். அங்கு இருக்கும் சாப்பாட்டை சாப்பிட்டு பார்த்து மீனாதான் சமைத்தார் என்று தெரிந்து கொண்டு மீனா பெயரை கூப்பிட்டார். மீனாவும் ரூமில் இருந்து வெளியே வந்துவிட்டார். பின் முத்து, மீனா இருவருமே சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சுருதி-ரவி இருவரும் மீனா- முத்து இணைந்ததை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். அடுத்த நாள் மீனாவிற்கு போன் செய்த சீதா, என் மாமியார் வீட்டில் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். நீயும் மாமாவும் வந்துவிட வேண்டும். அருண் சொல்ல சொன்னார் என்றார்.

நேற்று எபிசோட்:

பின் இதைப் பற்றி மீனா, முத்துவிடம் சொன்னார். அதற்கு முத்து, நான் அங்கு வந்தால் தேவையில்லாமல் பிரச்சனையாகும். நீ நல்லபடியாக போயிட்டு வா என்று சொல்லி அனுப்பினார். அதற்குப்பின் அருண் வீட்டிற்கு வந்த மீனாவிடம் முத்து வராததை பற்றி விசாரிக்க, மீனாவும் ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். அதற்குப்பின் சீதா, மாமியார் இருவருமே சந்தோஷமாக பரிமாறிக் கொண்டு பேசி கொண்டார்கள். இதை பார்த்து அங்கிருந்தவர்கள், மாமியார் மருமகள் போல் தெரியவில்லை என்றெல்லாம் சொன்னார்கள். உடனே சீதா தன் மாமியாருக்கு சுத்தி போட்டார். இதை எல்லாம் பார்த்து மீனாவிற்கு தன் மாமியார் நடத்தும் விதத்தை நினைத்து வருத்தப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அருண் வீட்டில் சத்யாவின் வேலையை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சத்யா, வேலைக்கு தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நல்ல வேலை கிடைத்தால் சேர்ந்து விடுவேன் என்கிறார். உடனே அருண், தனக்கு தெரிந்தவரின் மூலம் சத்யாவிற்கு ஒரு நல்ல வேலை வாங்கித் தருகிறார். இதனால் மீனாவின் அம்மா ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின் மீனாவின் அம்மா, சத்யா, மீனா எல்லோருக்குமே அருண் துணி கொடுக்கிறார். இதை பார்த்து மீனாவின் அம்மாவிற்கு சந்தோசமாக இருக்கிறது. சீதாவிற்கு நல்ல வாழ்க்கை கிடைத்தது நினைத்து மீனா சந்தோஷப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் ரோகினி, நீத்துவின் ஹோட்டலுக்கு போகிறார். அப்போது ரவியிடம் ரோகினி சமையல் ஆடர் விஷயமாக பேச வந்தேன் என்று சொல்கிறார். ரவி சென்ற பிறகு ரோகினி, நீத்துவிடம் கல்யாணம் பற்றி பேசுகிறார். அதற்கு நீத்து, ரவி போல் மாப்பிள்ளை கிடைத்தால் பண்ணுவேன் என்று ரவியை பற்றி ரொம்ப புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் ரோகினி, சுருதி அம்மாவிற்கு ஃபோன் செய்து பேசுகிறார். இதனால் ஸ்ருதி அம்மாவிற்கு இன்னும் கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த மீனா, அருண் வீட்டில் நடந்ததை எல்லாம் முத்துவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். அதற்கு பின் தன் மாமியார் சரியில்லை என்று மீனா வருத்தப்பட, முத்து ஆறுதல் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full