மீனாவை ஒழித்துக்கட்ட சிந்தாமணி போட்ட திட்டம், சுருதி சொன்ன வார்த்தையால் உறைந்து போன குடும்பம் - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ரோகினி மொபைலுக்கு வந்த போன் காலை மனோஜ் எடுத்து பேச, வாடகை கட்டவில்லை, ஏன் இப்படி செய்கிறீர்கள் ரோகினி என்று திட்டி இருந்தார். மனோஜ்க்கு ஒண்ணுமே புரியவில்லை. பின் அவர் இதைப் பற்றி ரோகினி இடம் கேட்க, அவர் ஏதேதோ சொல்லி சமாளித்தார். உடனே கோபத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி கோபித்துக் கொண்டு மனோஜ் மொட்டை மாடிக்கு சென்று விட்டார்.
இன்னொரு பக்கம் முத்து, மீனா சொன்னதை மீறி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை அறிந்தவுடன் மீனா கோபப்பட்டு முத்துவிடம் சண்டை போட்டார்.
இன்னொரு பக்கம் ஸ்ருதி போன் செய்தும் ரவி வேலையில் பிஸியாக இருந்ததால் எடுக்கவில்லை. ஏன் போன் எடுக்கவில்லை? என்று கோபத்தில் ஸ்ருதி ரவியிடம் சண்டை போட்டு இருந்தார். கடந்த வாரம், மூன்று ஜோடிகளுமே சண்டையில் கோபத்தில் இருந்தார்கள். கணவன்மார்கள் யாருமே மனைவியிடம் பேசவில்லை. அவர்களுமே தங்களுடைய கணவர்களிடம் பேசாமல் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த மூன்று ஜோடிகளுக்கும் இடையே சண்டை இருக்கிறது என்று அண்ணாமலை தெரிந்து கொண்டார். ஆனால், அவர்களுடைய பஞ்சாயத்தை கேட்கவில்லை.
சிறகடிக்க ஆசை:
விஜயாவும் அண்ணாமலை சொன்னதைப் போலவே அமைதியாக இருந்தார். பின் வீட்டிற்கு வந்த பாட்டி, மூன்று ஜோடிக்குள் சண்டை இருப்பதை தெரிந்து கொண்டார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த ரவியின் ஓனர், பொங்கல் கொண்டாட்டத்திற்கு போட்டிகள் நடப்பதால் எல்லோரையும் இன்வைட் செய்தார். பின் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பிக்கிறார்கள். மூன்று ஜோடியுமே தனித்தனியாக நின்று கொண்டிருந்தார்கள். பின் போட்டியில் ரோகினி, மீனா, சுருதி மூவருமே கலந்து கொள்ள, அதில் சுருதி ஆரம்பத்திலேயே அவுட்டாகி விட்டார்.
கடந்த வாரம் எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் முதல் போட்டியில் மீனா வெற்றி பெறுகிறார். கணவர்களுக்கான போட்டியில் முத்து வெற்றி பெறுகிறார். இதனால் விஜயாவிற்கு பயங்கர கோபம் வருகிறது. அதற்குப்பின் ஜோடியாக நடக்கும் போட்டியில் இருவருமே கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள். மூன்று ஜோடியுமே கோபத்தில் இருப்பதால் போட்டியில் சரியாக விளையாடவே இல்லை. இரண்டு போட்டிகளிலுமே தோற்று விடுகிறார்கள். கடைசி போட்டியில் மனைவிகளை தூக்கிக் கொண்டு கணவன் நிற்க வேண்டும் என்று சொன்னவுடன் மூன்று ஜோடிகளுமே போட்டியில் வெற்றி பெறனும் என்று தங்களின் சண்டைகளை மறந்து பேசிக் கொள்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
இதனால் மூன்று ஜோடியுமே வெற்றியும் பெறுகிறார்கள். ஒருவழியாக அவர்களுக்குள் இருந்த பஞ்சாயத்து முடிந்து விட்டது. பின் பாட்டி, தொட்டிலை வீட்டிற்கு வரவேற்கிறார். இதை பார்க்கும் போது நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரணும் என்று சொல்கிறார். உடனே ஸ்ருதி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் ஐடியா சொன்னவுடன் அண்ணாமலை குடும்பமே ஷாக் ஆகிறது. விஜயா பயங்கரமாக கோபப்படுகிறார். ஆனால், ஸ்ருதி அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பின் பாட்டி, அவள் பயத்தில் இருக்கிறார். போகப் போக எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
மீனா அந்த நடிகரின் வீட்டின் விசேஷத்திற்கு டெக்கரேஷன் வேலை எல்லாம் செய்கிறார். இதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று சிந்தாமணி யோசிக்கிறார். பின் மீனாவின் டெக்கரேஷனை அடித்து நொறுக்குவது போல கனவு கண்டு சிந்தாமணி ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதற்கான ஏற்பாடுகளும் நிஜத்திலும் செய்கிறார். ஆனால், அது நடக்கவில்லை. மீனா தனக்கு சதி வேலை செய்தவர்களை அடித்து துரத்தி விரட்டி விடுகிறார். பின் அந்த நடிகர் மீனாவின் வேலையை பார்த்து பாராட்டி கூடுதலாக சம்பளம் தருகிறார். ஆனால், சிந்தாமணி வேலை சரியாக செய்யவில்லை என்று அவளை திட்டி அவருடைய சம்பளத்தையும் குறைத்து விடுகிறார். இதனால் சிந்தாமணிக்கு மீனாவின் மேல் கோபம் அதிகமாகிறது. இன்னொரு பக்கம் மனோஜ்- ரோகினி இருவரும் போலீஸ் மூலம் கதிர் வீடியோவை எடுக்க கோயிலுக்கு வருகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.