மீனாவுக்கு வில்லியான்னு என்னை திட்டுறாங்க - சிறகடிக்க ஆசை அனுபவத்தை பகிர்ந்த சிந்தாமணி சுஜாதா

By subhashini · 8/3/2025

சிறகடிக்க ஆசை சீரியல் அனுபவம் பற்றி நடிகை சிந்தாமணி சுஜாதா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜில்லா விட்டு ஜில்லா வந்து என்ற பாடலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் ஈசன் சுஜாதா. இந்த ஒரே பாடலின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் நடன இயக்குனராக பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இவர் சின்ன சின்ன வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதைதான் சிறகடிக்க ஆசை.

சுஜாதா பேட்டி:

இந்த சீரியலில் வில்லி சிந்தாமணியாக சுஜாதா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சுஜாதா, சிறகடிக்க ஆசை சீரியலில் நான் இப்போது தான் சில எபிசோடுகளாக வந்து கொண்டிருக்கிறேன். இப்பவே மக்களிடம் நல்ல பிரபலம் கிடைத்திருக்கிறது. இந்த சீரியலுக்கு பிறகு என்னுடைய பழைய நண்பர்கள் எல்லோருமே போன் செய்து என்னிடம் பேசுகிறார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிறது.

சீரியல் அனுபவம்:

மேலும், சமீபத்தில் நான் ஒருத்தரோட மறைவுக்கு போயிருந்தேன். அங்கு இறந்தவரின் பையன் சின்ன வயது தான். அந்தப் பையன் என்னை பார்த்து, நீங்க தானே சிந்தாமணி. நீங்க ஏன் மீனாவுக்கு எதிராக தொல்லை கொடுக்கிறீர்கள் என்று கேட்டான். இந்த அளவுக்கு நமக்கு மக்கள் மத்தியில் பரிட்சயமாக இருக்கிறேன் என்று நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் என்னை சிலர் திட்டவும் செய்கிறார்கள்.
இதெல்லாம் எனக்கு பிளஸ் பாயிண்ட் தான்.

https://www.youtube.com/watch?v=onRPNa_Agmg

சீரியல் பற்றி சொன்னது:

இதற்கெல்லாம் முக்கிய காரணம் இயக்குனர் குமரன் சார் தான். எனக்கு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தயக்கமெல்லாம் கிடையாது. காரணம், என்னை திட்டுவதற்காகவாவது தினமும் சீரியல் பார்ப்பார்கள் என்று நினைத்து தான் நடிக்க ஒத்துக் கொண்டேன். ஹீரோ ஹீரோயினிக்கு பிறகு மக்களிடம் அதிகமாக போய் சேர்வது வில்லன் ரோல் தான். அதே மாதிரி தியேட்டரை தாண்டி இப்போது வீட்டிலேயே என்டர்டைன்மென்ட் வந்து விட்டது. டிவி பக்கம் வரலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது தான் வானத்தைப்போல சீரியல் ஓட வாய்ப்பு கிடைத்தது.

சினிமா பற்றி சொன்னது:

அந்த சீரியலில் கோமதி கதாபாத்திரம் என் மனதுக்கு ரொம்பவே நெருக்கமாக இருந்தது. அதேபோல் எனக்கு பாடல்களை கேட்டாலே எனர்ஜி வந்துவிடும். உடனே நடனம் ஆடுவேன். அப்படித்தான் என்னுடைய டான்ஸ் கேரியர் தொடங்கியது. பள்ளி பருவத்திலேயே நான் டான்ஸை தொடங்கி விட்டேன். அப்போது டான்ஸ் மூலமாக படங்களுக்குள் வருவதற்கு சில வழிமுறைகள் இருக்கும். இப்போது நடன இயக்குனராக இருக்கிற சோபி மாஸ்டர் தந்தை பவுல்ராஜ் தான் எங்களுக்கு குருநாதர். அவருடைய குழுவில் இருந்தாலே பலருக்கும் நம்பிக்கை வரும் என பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full