சிட்டி, பிஏ சேர்ந்து விரித்த வலையில் ரோகினி சிக்குவாரா? சத்யாவுக்காக போராடும் முத்து- சிறகடிக்க ஆசை

By subhashini · 9/11/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா வீடியோவால் மீனா வீட்டில் கலவரம் வெடித்து இருக்கிறது. ரோகினி பயங்கர சந்தோஷத்தில் இருக்கிறார். முத்து, உண்மை அறிந்து மீனாவிற்கு ஆதரவாக இருக்கிறார். இதை அறிந்த போலீஸ், சத்யாவை கைது செய்ய பார்த்தது. ஆனால், சத்யா அங்கு இல்லை. பின் எல்லோருமே சத்யாவை தேட, அவர் மாடியில் தற்கொலை செய்ய நின்று இருந்தார். கடைசியில் முத்து அவரை எப்படியோ காப்பாற்றி விட்டார். சத்யா இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என்று தன்னுடைய நண்பர் செல்வம் வீட்டில் தங்க வைத்தார் முத்து.

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மீனாவை உள்ளே விடாமல் பயங்கர கலவரமே செய்தார் விஜயா. முத்து எவ்வளவு சொல்லியும் விஜயா கேட்கவே இல்லை. பின் முத்து, தன்னுடைய அப்பாவிடம் சத்யா பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்லியும், அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. பின் மீனா எல்லோரிடமும் மன்னிப்பு கேட்க, விஜயா இன்னும் அதிகமாக தான் மீனாவை திட்டி இருந்தார். அந்த சமயம் வந்த போலீஸ் இடம் விஜயா கம்பளைண்ட் கொடுத்தார். பின் மீனா வீட்டை விட்டு வெளியே போகணும் என்று விஜயா சொன்னதற்கு அண்ணாமலை முடியாது என்றார்.

சிறகடிக்க ஆசை:

உடனே கோபத்தில் விஜயா வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். பின் பார்வதியிடம் நடந்ததை விஜயா சொல்ல, அவர் மீனாவிற்கு சப்போர்ட்டாக பேசியதால் விஜயா இன்னும் கோபப்பட்டார். நேற்று எபிசோட்டில் பார்வதி எவ்வளவு எடுத்துச் சொல்லியுமே விஜயா ஏற்றுக்கொள்ளவில்லை. மீனா வீட்டை விட்டு போனால் தான் போவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய மாமியார் வீட்டை விட்டு போனதை நினைத்து வருத்தப்பட்டு முத்துவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:

அதற்கு முத்துவும் சமாதானம் செய்தார். அப்போது மீனாவின் அம்மாவை போலீஸ் கைது செய்து விட்டதாக போன் வந்தது. மீனா-முத்து பதறி அடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்கள். அங்கு சத்யா வந்தால் தான் அவருடைய அம்மாவை விடுவேன் என்று போலீஸ் சொல்வதால், என்ன செய்வது என்று புரியாமல் மீனா, சீதா அழுது புலம்புகிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், எப்படியோ கெஞ்சி கூத்தாடி மீனாவின் அம்மாவை முத்து வெளியில் கூட்டிட்டு வருகிறார். ஆனால், சத்யா வரவில்லை என்றால் மீனா அம்மா மீது தான் கேஸ் எழுதுவோம் என்று மிரட்டி அனுப்புகிறார்கள்.

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் சிட்டி, ரோகினிக்கு போன் செய்து அவசரமாக வர சொன்னார். அப்போது சிட்டி, நாங்கள் அடித்த அடியில் இவன் நெஞ்சை பிடித்து விழுந்து விட்டான். செத்துப் போயிட்டானா போலீஸ் கேஸ் ஆகிவிடும். உங்கள் பெயரை தான் சொல்லுவேன். அதெல்லாம் வேண்டாம் என்றால் அவனுக்கு மருத்துவ செலவுக்கு 2 லட்சம் கொடுங்கள் என்று சொல்ல, பிஏ நிலைமையை பார்த்து ரோகினியும் ரெடி பண்ணுகிறேன் என்று கிளம்பி விட்டார். ஆனால், பிஎவிற்கு ஒன்றுமே ஆகவில்லை. இருவருமே சேர்ந்து ரோகினி இடம் பணத்தைப் பறிக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் முத்து, வக்கீலை பார்த்து நடந்ததை சொல்கிறார். அவர், இதற்கு ஒரே வழி கம்ப்ளைன்ட் கொடுத்தவர் வாபஸ் வாங்கிவிட்டால் பிரச்சனை இல்லை. கேஸ் நடத்த நிறைய செலவாகும் என்று சொல்கிறார். பின் மீனா-முத்து இருவருமே வீட்டிற்கு வந்து அண்ணாமலையிடம் நடந்ததை சொல்லி எடுத்து புரிய வைக்கிறார்கள். அண்ணாமலையும் மனமிரங்கி விஜயாவிடம் பேச அவர் இருக்கும் இடத்திற்கு போகிறார். அண்ணாமலையை பார்த்துடன் விஜயா மனதிற்குள் ரொம்ப சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full