சிட்டி விரித்த வலையில் சிக்கிய ரோகினி, முத்துவை அசிங்கப்படுத்தும் விஜயா - சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கோபத்தில் மீனா, என்ன நடந்தது என்று தெரியாமல் உங்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேச தேவையில்லை. அவருடைய கார் பிரேக் பிடிக்கவில்லை. குழந்தைகள் எதிரே வந்தார்கள் வேறு வழி இல்லாமல் தான் அந்த வண்டியின் மீது அவர் மோதினார். அவர் மீது எந்த தவறும் இல்லை. இதே அவருக்கு அடிபட்டிருந்தால் என்ன ஆவது? என்று பேசி இருந்தார். இதைக் கேட்டவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. ஆனாலும் ஸ்ருதியின் அம்மா, மனோஜ் எல்லாமே கிண்டலாக பேசி இருந்தார்கள். உடனே கோபத்தில் அண்ணாமலை, மனோஜை திட்டி விட்டார்.
அதற்குப்பின் மீனா, நீங்கள் ஸ்ருதி- ரவியை இங்கிருந்து பிரித்துக் கூட்டிட்டு போக தான் இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டவுடன் விஜயா கோபப்பட்டார். அதற்குப்பின் சுருதி, நீங்கள் தயவு செய்து எங்கள் வீட்டு விசயத்தில் தலையிடாதீர்கள், இங்கிருந்து கிளம்புங்கள் என்று தன்னுடைய அம்மாவை திட்டி அனுப்பி விட்டார். வீட்டில் உள்ளவர்களுமே முத்துவிற்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்கள் அதற்குப்பின் முத்து-மீனா இருவருமே தங்களுக்கு தெரிந்த போலீசை சந்தித்து நடந்ததை சொன்னார்கள். அவரும் போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்க, முத்து வேண்டும் என்று தான் வண்டியை மோதினார் என்று சொன்னார்கள். பின் அந்த போலீஸ், நான் தீவிரமாக விசாரித்து உங்களுக்கு உண்மையை சொல்கிறேன் என்று சொன்னார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் முத்து- மீனா இருவரும் எப்படி ஆவது லைசன்ஸ் வாங்க வேண்டும் என்று போராடி இருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது விஜயாவிடம் மனோஜ், ரோகினி தன்னை பார்க்க கடைக்கு வந்த விஷயத்தை சொன்னவுடன் விஜயா கோபப்பட்டார். பின் விஜயா, எதற்காக கடைக்கு போனாய்? இனிமேல் அவனை பார்க்க சென்றால் நடப்பதே வேறு என்று ரோகினியை திட்டி விட்டார். பின் ரோகினி, நம்முடைய விஷயத்தை எதற்காக உன் அம்மாவிடம் சொல்கிறாய். நமக்கென்று ஒரு பர்சனல் இருக்காது. எனக்காக சப்போர்ட் செய்ய மாட்டாயா? என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். ஆனால், மனோஜ் அதை பற்றி எல்லாம் கேட்காமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
இதனால் ரோகினி, அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். இன்னொரு பக்கம் முத்து லைசன்ஸ் போனதை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இதனால் அவருடைய நண்பர்கள் சரக்கு வாங்கி கொடுத்து அவரை கட்டுக்கட்டாயமாக குடிக்க வைத்தார்கள். பின் குடித்துவிட்டு முத்துவை அருண் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். அங்கு முத்துவின் நண்பர்கள் கல் எடுத்து அருண் வீட்டின் முன்பு அடித்தார்கள். இதையெல்லாம் பார்த்து அருண் மொபைலில் ரெக்கார்ட் செய்தார். பின் வெளியே வந்த அருண், முத்துவிடம் பேசி இருந்தார். முத்து-அருண் இடையே கோபமாக வாக்குவாதம் நடக்குது. இதையெல்லாமே முத்து வாக்குவாதம் செய்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அருண், இங்கிருந்து கிளம்பவில்லை என்றால் போலீஸ் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள் என்று மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் முத்து தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். இதையெல்லாம் தூரமாக நின்று பார்த்த சத்யா, மீனாவிற்கு போன் செய்து தகவல் சொல்கிறார். பின் முத்து வீட்டுக்கு குடித்து வந்ததை பார்த்த மீனா பயங்கரமாக சண்டை போடுகிறார். பிரச்சனை இருந்தால் குடிப்பது தான் தீர்வா? என்றெல்லாம் கோபப்படுகிறார். ஆனால், முத்து வேதனையில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் முத்து, வீட்டு வேலையெல்லாம் செய்கிறார். இதை பார்த்த விஜயா ரொம்ப சந்தோஷப்பட்டு முத்துவை ஏளனம் செய்கிறார். இதனால் கோபத்தில் மீனா முத்துவைத் திட்டுகிறார்.
இதை பார்த்த விஜயா, ஷாக்காகி அமைதியாகி விடுகிறார். அதற்குப்பின் சிட்டி, ரோகினியை போன் செய்து வரவைக்கிறார். அப்போது சிட்டி, என்னிடம் ரொம்ப பழமையான நகை இருக்கு. இதன் மதிப்பு 3 லட்சம். ஆனால், எனக்கு ஒரு லட்சத்திற்கு தருகிறார்கள். இதை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள். நீங்கள் செய்த உதவிக்கு தான் தருகிறேன். பணம் பொறுமையாக தாருங்கள் என்று சொல்கிறார். ரோகினியும் நம்பி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.