முத்துவை தீர்த்துக்கட்ட சிட்டி போட்ட ஸ்கெட்ச், மீனா தப்பித்தாரா? ரோகினி செய்யும் வேலை- சிறகடிக்க ஆசை

By subhashini · 21/9/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் செல்வம் வீட்டு விசேஷம் தடபுடலாக நடக்க, இன்னொரு பக்கம் எல்லோருமே குடித்துக் கொண்டு அமர்க்களம் செய்து இருந்தார்கள். அப்போது செல்வம் உறவினர்களுக்கும் முத்துவுக்கும் இடையே கலவரம் அதிகமாகி இருந்தது. மீனா எவ்வளவு தடுத்துப் பார்த்தும் முடியவில்லை. பின் செல்வத்தின் உறவினர்கள் முத்துவை அடித்து அசிங்கப்படுத்தி வெளியே தள்ளி விட்டார்கள். பின் ரவி வேலை செய்யும் இடத்தில் அவருடைய முதலாளியின் மகள் தான் ஹோட்டலின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் ரவியிடம் பேசுவது ஸ்ருதிக்கு பிடிக்கவே இல்லை.

பின் ரோகினி தன் தோழியுடன் சேந்து பிளாக்மெயில் மேனேஜரை பார்த்து பேசி இருந்தார்கள். அப்போது அவர் 30 லட்சம் வேணும் என்றவுடன் ரோகினி ஷாக்காகி முடியாது என்று மறுத்தார். உடனே அவர் உண்மையை சொல்லி விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் சத்யா செய்யும் வேலை சரி இல்லை என்றவுடன் மீனா சிட்டியை பார்த்து சண்டை போட்டார். அப்போது சண்டையில் சிட்டி, மீனாவை கீழே தள்ளியதால் தலையில் அடிப்பட்டது. அந்த சமயம் வந்த முத்து, சிட்டியை வெளுத்து வாங்கி விட்டு மீனாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார். இதை எல்லாம் தெரிந்த சத்தியா, சிட்டியை பார்த்து சண்டை போட்டு வந்து விட்டார்.

சிறகடிக்க ஆசை:

பின் ஹாஸ்பிடலில் மீனாவிடம் சத்யா மன்னிப்பு கேட்டு, வாக்குறுதி கொடுத்தார். பிறகு வீட்டிற்கு வந்த மீனாவை பார்த்தவுடன் அண்ணாமலை அதிர்ச்சியாகி விசாரிக்க, வண்டியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று முத்து சொல்லி சமாளித்தார். அப்போது விஜயா அக்கறையாக பேசி இருந்தார். ரோகினி, சிட்டியை சந்தித்து அந்த மேனேஜரை ஏதாவது பண்ண சொல்லி கேட்க, சிட்டி முத்து செய்த வேலை நினைத்து பார்த்தார். நேற்று எபிசோட்டில் சிட்டி, உங்கள் மாமியாரின் பணம் திருடு போனதற்கு காரணம் மீனாவின் தம்பி சத்யா தான். அது முத்துவிற்கும் தெரியும். அது தொடர்பான வீடியோ முத்து போனில் இருக்கு.

நேற்று எபிசோட்:

அதை வெளியே விட்டால் நீங்கள் சொல்லும் வேலையை நான் செய்கிறேன் என்று சொன்னவுடன் ரோகினி ஒத்துக் கொள்கிறார். பின் ரோகினி வீட்டிற்கு வந்து, ஜோசியரை பார்த்தேன் என்று சொல்லி, மீனாவை பார்த்து இவர்களுக்கு நேரம் சரியில்லை என்று வன்மத்துடன் பேசி இருந்தார். இதனால் மீனா வருத்தப்பட்டார். மறுநாள் மீனா எல்லா வேலையும் செய்து கொண்டிருப்பதை பார்த்து முத்து கோபப்பட்டு அக்கறையோடு இருந்தார். இதை பார்த்து சுருதி பாராட்டி இருந்தார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, மூத்து இருவருமே பூ விற்க ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த வயதானவர்களை பார்த்து இருவரும் சாப்பாடு கொடுக்க, அவர்களும் மனதார வாழ்த்தி இருந்தார்கள். இன்னொரு பக்கம் சிட்டி, சத்யாவை பார்த்து பேச பார்க்கிறார். ஆனால், சத்யா திட்டி விட்டு சென்று விடுகிறார். இதனால் சிட்டி முத்துவை பழிவாங்க நினைக்கிறார். அப்போது முத்து-மீனா வண்டியில் போவதை பார்த்து சிட்டி திட்டம் போடுகிறார்.

சீரியல் ட்ராக்:

தன் வண்டியால் முத்து-மீனா ஸ்கூட்டி மீது மோத சிட்டி வேகமாக செல்கிறார். ஒரு கட்டத்தில் முத்து வண்டி மீது சிட்டி கார் மோத வருகிறது. அந்த சமயம் பார்த்து குறுக்கே வேறொரு வண்டி வந்ததால் முத்து-மீனா இருவருமே சிட்டியிடம் இருந்து தப்பித்து விட்டார்கள். பின் வீட்டில் முத்து, மீனா இருவரும் இன்று நடந்ததை பற்றி சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரோகிணி, சிட்டி சொன்னதே நினைத்து பார்த்து முத்துவின் போனை எடுக்க முயற்சி செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full