முத்துவை பழிவாங்க சிட்டி செய்யும் சதி வேலை, இதில் மீனா சிக்கினாரா? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 20/9/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் செல்வத்திற்கு பணம் வேண்டும் என்று முத்து, மீனாவிடம் கேட்க, அவர் முடியாது என்று மறுத்தார். பின் மீனா, செல்வத்தை சந்தித்து சூழ்நிலையை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். இதை அறிந்த முத்து கோபப்பட்டு மீனாவிடம் கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி சண்டை வந்தது. இந்த வாரம் எபிசோடில், செல்வம் வீட்டு விசேஷத்திற்கு முத்து, மீனா போனார்கள். அங்கு தடபுடலாக விசேஷம் நடக்க, இன்னொரு பக்கம் எல்லோருமே குடித்துக் கொண்டு அமர்க்களம் செய்து இருந்தார்கள்.

அப்போது செல்வம் உறவினர்களுக்கும் முத்துவுக்கும் இடையே கலவரம் அதிகமாகி இருந்தது. மீனா எவ்வளவு தடுத்துப் பார்த்தும் முடியவில்லை. பின் செல்வத்தின் உறவினர்கள் முத்துவை அடித்து அசிங்கப்படுத்தி வெளியே தள்ளி விட்டார்கள். பின் ரவி வேலை செய்யும் இடத்தில் அவருடைய முதலாளியின் மகள் தான் ஹோட்டலின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர் ரவியிடம் பேசுவது ஸ்ருதிக்கு பிடிக்கவே இல்லை. பின் ரோகினி தன் தோழியுடன் சேந்து பிளாக்மெயில் மேனேஜரை பார்த்து பேசி இருந்தார்கள். அப்போது அவர் 30 லட்சம் வேணும் என்றவுடன் ரோகினி ஷாக்காகி முடியாது என்று மறுத்தார்.

சிறகடிக்க ஆசை:

உடனே அவர் உண்மையை சொல்லி விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் சத்யா செய்யும் வேலை சரி இல்லை என்றவுடன் மீனா சிட்டியை பார்த்து சண்டை போட்டார். அப்போது சண்டையில் சிட்டி, மீனாவை கீழே தள்ளியதால் தலையில் அடிப்பட்டது. அந்த சமயம் வந்த முத்து, சிட்டியை வெளுத்து வாங்கி விட்டு மீனாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார். பின் நடந்த விவரத்தை மீனா அம்மாவிடம் முத்து சொல்ல, அவர் ரொம்பவே பயந்தார். நேற்று எபிசோட்டில், இதை எல்லாம் தெரிந்த சத்தியா, சிட்டியை பார்த்து சண்டை போட்டு வந்து விட்டார்.

சீரியல் கதை:

பின் ஹாஸ்பிடலில் மீனாவிடம் சத்யா மன்னிப்பு கேட்டு, வாக்குறுதி கொடுத்தார். பிறகு வீட்டிற்கு வந்த முத்து, மீனாவை பார்த்தவுடன் அண்ணாமலை அதிர்ச்சியாகி விசாரிக்க, வண்டியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று முத்து சொல்லி சமாளித்தார். உடனே விஜயா அக்கறையாக பேசி இருந்தார். பின் ரோகினி, சிட்டியை சந்தித்து அந்த மேனேஜரை ஏதாவது பண்ண சொல்லி கேட்க, சிட்டி முத்து செய்த வேலை நினைத்து பார்த்தார். இன்றைய எபிசோட்டில் சிட்டி, உங்கள் மாமியாரின் பணம் திருடு போனதற்கு காரணம் மீனாவின் தம்பி சத்யா தான். அது முத்துவிற்கும் தெரியும். அது தொடர்பான வீடியோ முத்து போனில் இருக்கிறது.

இன்றைய எபிசோட்:

அதை நீங்கள் வெளியே விட்டால் நீங்கள் சொல்லும் வேலையை நான் செய்கிறேன் என்று சொன்னவுடன் ரோகினி ஒத்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம் ரோகினி வீட்டிற்கு வந்து, ஜோசியரை பார்த்தேன் என்று சொல்கிறார். பின் அவர், உங்களுக்கு நல்ல நேரமாக இருக்கிறது என்று விஜயாவை புகழ்ந்து விட்டு, மீனாவை பார்த்து இவர்களுக்கு நேரம் சரியில்லை என்று வன்மத்துடன் பேசுகிறார். உடனே முத்து, ரோகிணியை கிண்டல் அடிக்கிறார். இருந்தும் ரோகினி சொன்னத நினைத்து மீனா வருத்தப்படுகிறார். மறுநாள் மீனா எல்லா வேலையும் செய்து கொண்டிருப்பதை பார்த்து முத்து கோபப்பட்டு அக்கறையோடு இருக்கிறார். இதை பார்த்து சுருதி பாராட்டுகிறார்.

https://www.youtube.com/watch?v=zeTcmTA7-9E

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், முத்து தன்னை அவமானப்படுத்தியதால் எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று சிட்டி திட்டம் போடுகிறார். அந்த சமயம் பார்த்து மீனாவுடன் வியாபாரத்திற்கு முத்து ஸ்கூட்டியில் போகிறார். இதை பார்த்த சிட்டி, அவன் கை கால்களை உடைக்க வேண்டும் என்று முத்துவின் வண்டியின் மீது கார் ஏற்ற சொல்கிறார். பின் சிட்டியின் கார் முத்துவின் உடைய ஸ்கூட்டியை பின்தொடர்ந்து வேகமாக வருகிறது. கடைசியில் ஸ்கூட்டி மீது வண்டி மோதியது போல் காண்பிக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full