சீதாவின் காதலுக்கு துணை நிற்கும் மீனா, கோபத்தின் உச்சத்தில் முத்து - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 25/5/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகிணி எவ்வளவு சொல்லியுமே மனோஜ் கேட்கவில்லை. இன்னொரு பக்கம் சுருதி சொந்தமாக restaurant திறப்பதை பற்றி ரவியிடம் பேசினார். ஆனால், அவர் கேட்கவே இல்லை. அதற்கு ரவி, என் சுயமரியாதையை விட்டு செய்ய முடியாது என்று சொன்னார். சுருதி எவ்வளவு எடுத்து சொல்லியுமே ரவி ஏற்றுக்கொள்ளவே இல்லை. மறுநாள் முத்து-மீனா இருவருமே சீதா காதலிக்கும் நபரை சந்திக்க போனார்கள். கோவிலில் சீதா, அருண் இருவருமே முத்து-மீனா வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

கோவிலில் முதலில் முத்து-அருண் இருவருமே யார் என்று தெரியாமல் சந்தித்துக் கொண்டார்கள். இதனால் கோபப்பட்டு இருவருமே முறைத்துக்கொண்டார்கள். பின் முத்து- மீனா இருவரும் சீதாவை பார்த்தார்கள். அப்போது சீதா, அருணை அறிமுகம் செய்கிறார். அருணை பார்த்தவுடன் மீனா-முத்து இருவருமே ஷாக் ஆனார்கள். அப்போது முத்துவிற்கு பயங்கர கோபம் வந்து மீனாவிடம் இந்த கல்யாணம் நடக்காது என்று அங்கிருந்து சொல்லிவிட்டு சென்று விட்டார். அருண், நான் இந்த வேலை சஸ்பெண்ட் ஆனதற்கு காரணம் உன் மாமா தான் என்று சொன்னார்.

சிறகடிக்க ஆசை:

பின் மீனாவின் அம்மாவை பார்க்க சென்ற முத்து, சீதா ஒருவரை காதலித்தார். அவன் நல்லவனே கிடையாது. அவனால் சீதாவை நன்றாக பார்த்துக்கொள்ள மாட்டான். நான் நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொன்னார். மீனாவின் அம்மாவால் எதுவுமே பேச முடியவில்லை, அமைதியாக இருந்தார். அதற்குப்பின் வீட்டிற்கு மீனா, சீதா வந்தார்கள். அப்போது சீதா காதலிக்கும் விஷயம் தெரிந்ததால் மீனாவின் அம்மா கோபப்பட்டு அவரை அடித்தார். மீனா, நான் அவரிடம் எடுத்து சொல்லி புரிய வைக்கிறேன். தயவுசெய்து அமைதியாக இருங்கள் என்று தன் அம்மாவை சமாதானம் செய்தார். சீதாவிற்கு சப்போர்ட்டாக மீனா இருந்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் ரோகினி, மனோஜிற்காக சாப்பாடு ஆர்டர் செய்து அனுப்பி வைத்தார். அதை பார்த்தவுடன் மனோஜ் நண்பர், உன் மீது இவ்வளவு பாசமாக இருக்கிறாய். ஏன் நீ இப்படி செய்கிறாய்? என் நண்பர் ஒருவர், அவர் மனைவியிடம் பேசவில்லை. அதனால் அவர் மனைவி வேறு ஒருவர் தொடர்பில் இருந்தார் என்று சொன்னார். இதை கேட்டவுடன் மனோஜ்க்கு பயம் வந்தது. பின் வீட்டில் ரோகினி, இல்லாததை பார்த்து மனோஜ் பயப்பட்டார். ஆனால், ரோகினி எங்கும் போகவில்லை. இருந்தாலும் மனோஜ் தன் நண்பன் சொன்னதை நினைத்து பார்த்தார். அதற்குப்பின் முத்துவிடம் மீனா, சீதாவின் காதல் விஷயமாக பேசி இருந்தார்.

சீரியல் ட்ராக்:

அப்போது முத்து, முடியாது. நான் வேறொரு பையனை பார்க்கிறேன். அவன் வேணாம் என்று வாக்குவாதம் செய்தார். இருவரும் இடையே வாக்குவாதம் நடக்கும்போது கோபத்தில் முத்து, மீனாவை அடிக்க வந்தார். இதனால் மீனா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, புது ரெஸ்டாரன்ட் திறப்பதற்கான இடத்தை புரோக்கர் இடம் சொல்லி வைத்தார். ரவி இடமும் சொல்லி புரிய வைத்தார்.
ஆனால், ரவிக்கு புது ரெஸ்டாரண்ட் ஆரம்பிப்பதில் விருப்பமே இல்லை. பின் முத்து, ரவி, மனோஜ் மூவருமே மொட்டை மாடியில் சரக்கு சாப்பிட்டு தங்களுடைய மனைவிகளை பற்றி புலம்பி கொண்டிருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=7AW7gB-8yao

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சீதாவின் வீட்டிற்கு வந்த அருணின் அம்மா, அருண் நல்ல பையன். அவனைப் பற்றி எதுவும் தப்பாக நினைக்காதீர்கள். உங்கள் மகளை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று பேசுகிறார். உடனே சீதாவின் அம்மா, என் மாப்பிள்ளைக்கு பிடிக்கவில்லை என்றால் எங்களுக்கும் விருப்பம் இல்லை. அவருடைய முடிவு தான் எங்களுடைய முடிவு என்கிறார். இன்னொரு பக்கம் மீனாவை சந்தித்து அருண் பேசுகிறார். அப்போது அருண், நான் சீதாவை காதலிக்கிறேன். நீங்கள் நல்ல முடிவு எடுப்பீர்கள் என தெரியும் என்று பேசுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த மீனா, முத்துவிடம் அருண் தன்னை சந்தித்து பேசிய விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டவுடன் சீதா-அருண் கல்யாணம் நடக்கவே நடக்காது என்று கோபப்படுகிறார்.

behindtalkies AMP · Quick view
View full