சீதாவிற்கு ஏற்பட்ட விபரீதம், ஹாஸ்பிடலில் மோதிக்கொள்ளும் அருண்-முத்து, சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருணின் அம்மா, மீனாவிடம் சீதாவை திருமணம் செய்து வைப்பது பற்றி பேசி இருந்தார். மீனா, எவ்வளவு சொல்லியும் என் கணவர் கேட்கவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை என்றார். அருண் அம்மா, என் வீட்டு மருமகள் சீதா தான் என்று ஆணித்தனமாக சொல்லிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் ரோகினி, தன்னுடைய பாய் பிரண்டை சந்திக்க போவதாக பொய் சொல்லி அழகாக மேக்கப் போட்டு தயாராகி மனோஜை வெறுப்பேற்றி இருந்தார். இது எல்லாம் பார்த்த மனோஜ் கவலையாக இருந்தார். இன்னொரு பக்கம் விஜயா, பார்வதி இடம் நீத்துவை பற்றி சொன்னார்.
பின் எப்படியாவது ரோகிணிக்கு டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு மனோஜை நீத்துவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டார். கடைசியில் வீட்டிற்கு வந்த முத்துவிடம் மீனா, திருமணத்தில் சீதாவும், அம்மாவும் உங்களுடைய விருப்பம் தான் முக்கியம் என்று சொன்னார்கள். உங்களை மீறி இந்த திருமணம் நடந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். உடனே முத்து, அப்படியா! திருமணம் நடக்கட்டும். உனக்கும் எனக்கும் உறவு முடிந்துவிடும். உங்கள் குடும்பத்திற்குமான உறவு முடிந்துவிடும். நீ இந்த வீட்டு மருமகள் மட்டும்தான். இந்த முத்துவின் பாசம் கிடைக்காது என்று சொன்னார். மீனாவால் எதுவுமே பேச முடியவில்லை.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ரோகினி, தன் நண்பரை சந்திக்க போவதாக மனோஜ் இடம் சொன்னார். இதனால் அந்த நண்பன் யார் என்று தெரிந்து கொள்ள மனோஜ், ரோகினியை பின்தொடர்ந்தே போனார். ரோகினி ஒரு பேக்கரியில் கேக் வாங்கினார். அதையெல்லாம் பார்த்த மனோஜ், பேக்கரியில் விசாரித்து கொண்டார். இன்னொரு பக்கம் மீனா சொன்ன வார்த்தையால் முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் விஜயாவிடம் ஜாலியாக வம்பு இழுத்துக் கொண்டு இருந்தார். முத்து தன்னுடைய அம்மாவை புகழ்ந்து பாடி ஆட்டமெல்லாம் போட்டார்.
நேற்று எபிசோட்:
அப்போது அண்ணாமலை வெளியே வந்தவுடன் ஒரு கோட்டைக் கிழித்து அம்மாவை தாண்ட சொன்னார் முத்து. உடனே அண்ணாமலை தாண்ட வேண்டாம் என்றவுடன் விஜயாவும் அமைதியாகி விட்டார். முத்து, இதற்கு தான் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். கணவன் சொன்ன ஒரு வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கிறார் என்று மீனாவை குறை சொன்னார். மறுநாள் காலையில் அண்ணாமலை, மீனாவிடம் முத்து குடித்து வந்ததை பற்றி விசாரித்தார். அப்போது மீனா, சீதா காதலிக்கும் விஷயம் பற்றி சொன்னார். உடனே அண்ணாமலை, சீதாவிற்கு பிடித்து இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்று சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை, நான் முத்துவிடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறேன். நல்ல குடும்பமாக இருந்தால் சீதாவிற்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று மீனாவிற்கு ஆறுதல் சொல்கிறார். முத்துவிடம் ரொம்ப மோசமாக மனோஜ் நடந்து கொண்டதால் அவரை அடித்து விடுகிறார். அதனால் அவருக்கு வாய் உடைந்து விடுகிறது.. பின் ஹாஸ்பிடல் கட்டு போட்டுக்கொண்டு வாய் பேச முடியாத அளவிற்கு மனோஜ் இருக்கிறார். வீட்டில் எல்லோருமே என்னானது என்று கேட்கிறார்கள் ஆனால், மனோஜ் சொன்னது யாருக்கும் புரியவில்லை. இன்னொரு பக்கம் சீதா வீட்டில் மயங்கி கிடப்பதால் அவருடைய அம்மா ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று செல்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மீனாவிடம் தகவலை சொல்கிறார்கள். சீதாவின் நிலைமையை அறிந்து ஹாஸ்பிடலுக்கு அருண் வருகிறார். பின் அருண், தேவையான மெடிசனை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார். இதை பார்த்த முத்து கோவப்பட்டு அருணிடம் சண்டைக்கு போகிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. உடனே சீதாவின் அம்மா, அருணையும் அவருடைய அம்மாவையும் கிளம்ப சொல்கிறார். முத்துவும் கோபப்பட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்கு பின் டாக்டர், சீதாவின் ஆழ்மனதில் கவலை இருக்கிறது. அதை கண்டுபிடியுங்கள் இல்லையென்றால் அவருக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார். இதனால் மீனா, அவர் அம்மா இருவருமே ஷாக் ஆகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது