பணத்திற்காக சண்டை போட்ட ரோகினி- மனோஜ், முத்து எடுக்கும் முடிவு- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 13/9/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் மீனாவை சமைத்து பார்வதி வீட்டிற்கு சாப்பாடு எடுத்து வர வேண்டும் என்று விஜயா சொல்ல, முத்துவுக்கு கோபம் வந்து சண்டை போட்டார். அப்போது அண்ணாமலை, நானே சாப்பாடு எடுத்துக் கொண்டுவரேன் என்றவுடன் மீனா, நான் கொண்டு போகிறேன் என்று சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் கடையில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் லெட்டர் கொண்டு வந்து கொடுத்து படிக்கச் சொல்லி மறைந்து விட்டார். அந்த கடிதத்தில் உன் தம்பி கொலையாளி ஆவான், நீ தற்கொலை செய்து கொள்வாய் என்று இருந்ததை பார்த்து மனோஜ் ரொம்ப பயந்து அந்த நம்பரை தேடி போனார். ஆனால், அவர் கிடைக்கவில்லை.

இன்னொரு பக்கம், மீனா தன்னுடைய மாமியாருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் முதியவர்கள் பசியால் இருந்ததால் அவர்களுக்கு போட்டு விட்டு விஜயாவிற்கு பிரியாணி வாங்கி கொண்டு போய் கொடுத்தார். குறை சொல்லி விட்டு விஜயா சாப்பிட்டார். ஆனால், விஜயாவிற்கு பிரியாணி சாப்பிட்டது ஜீரணம் ஆகாமல் ரொம்ப அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க, அண்ணாமலை, உனக்கு சமைத்து தானே எடுத்துக் கொண்டு மீனா போனார் என்று சொன்னதற்கு, விஜயா திட்டி இருந்தார். பின் மீனா, முதியவர்களுக்கு சாப்பாடு கொடுத்த விசயத்தை சொல்ல, முத்து- அண்ணாமலை இருவருமே பாராட்டி இருந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

பின் எல்லாரும் தூங்கிய பிறகு மனோஜ் தனக்கு வந்த கடிதத்தை தன் அம்மாவிடம் காண்பிக்க இருவருமே பயந்து கொண்டிருந்தார்கள். அந்த சமயம் வந்த ரோகினி, இதெல்லாம் ஒன்றுமில்லை விளையாட்டிற்காக யாரோ செய்த வேலை என்று சொல்லி சமாதானம் செய்தார். மறுநாள் மீனா, அந்த முதியவர்களுக்கு சாப்பாடு கொண்டு போய் தர, அதற்கு முன்பே முத்து அவர்களுக்கு வேலை கொடுத்து சம்பளமும் தந்தார். இன்னொரு பக்கம் ரோகினி, தன் மகன் அம்மாவிற்காக வீடு தேடிக் கொண்டிருந்தார். கடைசியில் செல்வம், பண கஷ்டத்தில் குடித்துவிட்டு புலம்பிக் கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோடில் அப்போது தன்னுடைய அப்பாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று செல்வம் கேட்க, நான் எப்படியாவது ரெடி பண்ணி தருகிறேன் என்று முத்து வாக்கு கொடுத்தார். பின் வீட்டில் முத்து, தனக்கு கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை செல்வத்திடம் கொடுப்பது பற்றி மீனாவிடம் கேட்க, அவர் முடியாது. நமக்கு வீடு கட்ட வேண்டும் என்று அறிவுரை சொன்னார். இருந்துமே முத்து கேட்காமல் பணத்தை கேட்க, கோபத்தில் மீனா முடியாது என்று மறுத்து விட்டார். முத்து என்ன செய்வது என்று புரியாமல் வருத்தத்தில் இருக்கிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில், ரோகினி தனக்கு ஒரு லட்சம் பணம் வேண்டும் என்று மனோஜ் இடம் கேட்கிறார். உடனே அவர் ஷாக் ஆகி ஏன்? எதற்கு? என்று கேட்க, என்னுடைய தோழிக்கு ரொம்ப அவசர தேவை என்று ரோகினி சொன்னார். ஆனால், மனோஜ் முடியாது என்று மறுக்க, இதனால் ரோகினி- மனோஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்தது. இன்னொரு பக்கம் செல்வதற்கு பணம் கேட்டு முத்து- மீனா இடையே சண்டை வந்தது. இதனால் இரண்டு ஜோடிகளும் தனித் தனியாக இருக்கிறார்கள். ரோகினி- ஸ்ருதி- மீனா மூவரும் கிச்சனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

மாடியில் ரவி, முத்து, மனோஜ் மூவரும் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரோகினி, ஸ்ருதியிடம் பணம் கேட்க உடனே மீனா, என்ன எதற்கு? என்று விசாரித்து கொடுப்பது தான் நல்லது என்று சொல்ல வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் ஸ்ருதி, ரோகினி சொல்வதும் சரி, மீனா சொல்வதும் யோசிக்க வேண்டியது தான் என்று சொல்கிறார். பின் எங்களுக்கு இப்போது ஒரு ஐடியா கிடைத்திருக்கிறது என்று செல்கிறார்கள். இன்னொரு பக்கம் பணத்தைப் பற்றி மனோஜ், முத்து இடம் விவாதம் செய்ய, ரவி ஒரு ஐடியா சொல்கிறார். ஆனால், முத்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full