ஸ்ருதி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான ரவி, விஜயா மீதே சந்தேகப்படும் மனோஜ் - விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் 'சிறகடிக்க ஆசை'. சீரியலில் மனோஜ் பணத்தை ஏமாந்ததால் மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று கவரிங் நகையை மாற்றி வைத்து விடுகிறார். இதனால் வீட்டில் பெரிய கலவரம் வெடித்தது. பின் எப்படியாவது மனோஜ் வாயால் உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து சில பிளான்களை போடுகிறார். கடைசியில் முத்துவின் பிளான் படி மனோஜ் மற்றும் விஜயா மாட்டிக் கொள்கிறார்கள்.
இதனால் கோபமடைந்த அண்ணாமலை மனோஜை அடிக்கிறார். பின் அண்ணாமலை விஜயாவிடம், இனி என்னிடம் பேசாதே, ஜென்மத்துக்கும் உன் கையில் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன் என்று கூறிவிடுகிறார். அதோடு மனோஜ் மற்றும் அம்மா இருவருமே மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முத்து சொல்ல, அதை ரோகிணி மறுக்கிறார். உடனே விஜயா தான் போட்டு இருந்தா தங்க வளையலை கழட்டி மீனா மேலே தூக்கி எறிந்து பொறுக்கிக் கொள் என்று கேவலமாக பேசி இருந்தார். உடனே முத்து பழைய பாக்கியோடு சேர்த்து இந்த 4 லட்சத்தையும் கொடுத்தே தீர வேண்டும் என்று சொல்ல, அதற்கு ரோகிணி பொறுப்பு இருக்கிறார்.
சீரியல் கதை:
பின்பு, ரோகிணி-மனோஜ் இருவரும் வீட்டில் உள்ள எல்லாரையும் அழைத்து 2 லட்ச ரூபாய் முத்துவிடம் கொடுக்கிறார்கள். மீதி பணத்தை சீக்கிரம் தருகிறேன் என்று சொல்கிறார்கள். மேலும், விஜயா எல்லாத்திற்கும் காரணம் மீனா தான் என்று திட்டுகிறார். இதை பார்த்த சுருதி, விஜயாவை வெளுத்து வாங்குகிறார். இதனால் விஜயாவிற்கு சுருதி மேல் பயங்கர கோபம் வருகிறது. பின் இந்த பிரச்சனையை முடிக்க முத்து பாட்டியை வரவழைத்து விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
பாட்டி வந்ததும் அண்ணாமலையை சமாதானப்படுத்தி விஜயாவிடம் பேச வைக்கிறார். விஜயாவும் அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்கிறார். கடைசியில் முத்து, 29 லட்சத்தை மனோஜ் மாதம் மாதம் கொடுத்தால் போதும் என்று சொல்கிறார். பின் பாட்டியும் இது நல்ல யோசனை, நீ மாதம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடு என்று மனோஜிடம் கூறுகிறார். மேலும் மனோஜியிடமிருந்து பணத்தை வாங்கிக் கொடுப்பது விஜயாவின் பொறுப்பு என்றும் சொல்லிவிடுகிறார்.
நேற்று எபிசோட்:
கடைசியில் விஜயா ரோகினிடம், உன் அப்பாவிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்து விடு என்று கூறுகிறார். இந்நிலையில் முத்து புது காரை வாங்கி வீட்டிற்கு வருகிறார். அதைப் பார்த்து வழக்கம் போல் விஜயா நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார். பின் விஜயா மற்றும் அண்ணாமலையை காரில் ஏற்றி கோயிலுக்கு முத்து அழைத்துச் செல்கிறார். எப்படியாவது அப்பா அம்மாவை சேர்த்து வைக்க வேண்டும் என்று முத்து நினைக்கிறார். இன்னொரு பக்கம் மனோஜ்க்கு யாரோ ஒருவர் மொட்டை கடிதம் எழுதி அனுப்புகிறார்கள். அதைப் பார்த்து பயந்த மனோஜிடம், இது யாரோ பிராங்க் பண்றாங்க நீ பயப்படாதே என்று ரோகிணி ஆறுதல் கூறுகிறார்.
இன்றைய எபிசொட் :
இந்நிலையில், கோவிலுக்கு போன அனைவரும் வீட்டிற்கு வருகிறார்கள். கணவன் மனைவிக்குள் சண்டை வந்தா பேசாம இருக்க கூடாது என்று பாட்டி சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்புகிறார். சுருதி நான் குழந்தை பெத்துக்க மாட்டேன், வாடகை தாய் மூலமாக குழந்தை பெத்துக்கலாம் என்று சொல்ல, அதைக் கேட்டு ரவி அதிர்ச்சி ஆகிறார். மறுபக்கம் தனக்கு வந்த மொட்டை கடுதாசி, விஜயா தான் அனுப்பி இருப்பார் என்று மனோஜ் சந்தேகப்படுகிறார். அதைக் கேட்ட விஜயா, உனக்கு போய் சப்போர்ட் பண்ணேன் பாரு என்று திட்டுகிறார். கடைசியில் முத்து வாங்கிய புதிய காரை ஓட்டுவதற்காக முத்துவின் நண்பர் வீட்டுக்கு வருகிறார். அண்ணாமலை கார் சாவியை ஆசிர்வாதம் பண்ணி அந்த பையனிடம் கொடுக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.