முத்து- மீனாவை அசிங்கப்படுத்திய கிரிஷ் பாட்டி, சந்தோஷத்தில் ரோகினி- சிறகடிக்க ஆசை

By subhashini · 5/10/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து வீட்டில் கொலு வைக்கும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. ரோகினியும் அவருடைய தோழியும், எப்படியாவது இந்த விழா முடிவதற்குள் முத்து மொபைலை எடுத்து விட வேண்டும் என்று பிளான் போட்டார்கள். பின் விழாவில் விஜயா பாட்டை கேட்டவுடன் நாய் எல்லாம் குறைத்தது. ஆனால், அண்ணாமலை மட்டும் ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று பாட சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் பயங்கரமாக திட்டி விட்டதால் விஜயா பாடுவதை நிறுத்திவிட்டார். அதற்குப்பின் மீனா பாடியதை கேட்டு எல்லோருமே பாராட்டி கைதட்டி இருந்தார்கள்.

பின் ரோகினி தன்னுடைய மாமியாருக்கு ஐஸ் வைக்க புது புடவை வாங்கி வந்து தர, சந்தோஷத்தில் ரோகினி- மனோஜை புகழ்ந்து விஜயா பேசி இருந்தார். அதற்குப்பின் மீனாவின் நண்பர்கள் வீட்டிற்கு வந்தார்கள். இதை பார்த்த விஜயா அவர்களை கிண்டல் நக்கலுமாக பேசி இருந்தார். அதற்கு பின் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுப்பதாக சொல்லி ரோகினி ஒரு விளம்பர அட்டையை விஜயாவிடம் கொடுத்து திறக்க சொன்னார். அதற்குப்பின் வயதான தாத்தா, பாட்டிக்கு சாப்பாடு, துணி எல்லாம் கொண்டு போய் முத்து-மீனா கொடுதார்கள்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில், முத்து வீட்டிற்கு ஸ்ருதிவின் அம்மா வந்தார். வழக்கம் போல் அவர் வந்த உடனே முத்து அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்குப்பின் ரோகினியின் தோழி குச்சி ஆட்டத்திற்கு தேவையான பொருள்கள் எல்லாம் வாங்கி வந்து எல்லோரையும் நடனமாட வைத்தார். வீட்டில் உள்ள எல்லோருமே நடனம் ஆடினார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று முத்து போனை எடுக்க ரோகினி, அவருடைய தோழியும் திட்டம் போட்டு எடுத்தார். உடனே இருவருமே அந்த வீடியோவை பார்த்து தங்களின் மொபைலுக்கு மாற்ற பார்த்தார்கள்.

நேற்று எபிசோட்:

அந்த சமயம் பார்த்து முத்து-மீனா அவர்கள் மீது விழ போன் கீழே தவறி விழுந்து விட்டது. இதனால் முத்து கோபப்பட்டு கத்தி போனை வாங்கி வந்து விட்டார். கடைசி வரை அந்த வீடியோவை எடுக்க முடியவில்லை என்று ரோகினி வருத்தப்பட்டார். பின் கிரிஷ் வீட்டிற்கு சென்ற முத்து-மீனா அவர் பாட்டியை விசேஷத்திற்கு அழைத்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், கிரிஷ் பாட்டி வர முடியாது என்று மறுத்துமே முத்து கட்டாயப்படுத்துகிறார்.

இன்றைய எபிசோட்:

இதை ரோகினி இடம் அவருடைய அம்மா சொல்ல, அவர் கோபப்பட்டு திட்டுகிறார். இன்னொரு பக்கம் ரோகினி, தன்னுடைய தோழியிடம் இன்னைக்கு முத்து அவமானப்படுவது உறுதி, அதை நீ பார்ப்பாய் என்று சொல்கிறார். மேலும், கிருஷ்ணர் வேடம் போட்டு கிரிஷை வீட்டிற்கு முத்து-மீனா அழைத்து வருகிறார்கள். இதை பார்த்து எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், விஜயா மட்டும் கோபப்படுகிறார். பின் மீனா, கிருஷ்ணர் பாட்டை பாட, கிர்ஷை முத்து கொஞ்சுகிறார். இதையெல்லாம் பார்த்து ரோஹினிக்கு கோபம் வருகிறது.

சீரியல் ட்ராக்:

உடனே ரோகினி அம்மா, நீங்கள் எதற்கு என் பேரனுக்கு தேவையில்லாமல் நம்பிக்கை கொடுக்கிறீர்கள். ஏன் அவன் மனதை கெடுக்கிறீர்கள். அவனுக்கு பாட்டி, அம்மா எல்லோருமே இருக்கிறார்கள். இன்னொரு முறை தத்தெடுப்பதை பற்றி பேசாதீர்கள். எங்கள் வீட்டிற்கும் வராதீர்கள் என்று கோபமாக சொல்கிறார். முத்து-மீனா அவரை சமாதானம் செய்ய பார்க்கிறார்கள். ஆனால், ரோகினி அம்மா எதையும் கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இதை பார்த்து விஜயா-ரோகினி சந்தோஷப்படுகிறார்கள். முத்து-மீனா ரொம்ப வருத்தப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full