கிரிஷை தத்தெடுக்க நினைக்கும் மீனா, விஜயாவை தேடி வரும் புது ப்ரச்சனை- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

By subhashini · 3/8/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மனோஜ், மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று கவரிங் நகையை மாற்றி வைத்து இருந்த பஞ்சாயத்து ஒருவழியாக தீர்ந்தது. ஆனால், அந்த 4 லட்சத்திற்கு ரோகிணி பொறுப்பு ஏற்று 2 லட்ச ரூபாய் முத்துவிடம் கொடுத்து விட்டார். மீதி பணத்தை சீக்கிரம் தருகிறேன் என்று சொல்லி இருந்தார். அதோடு பாட்டி வந்ததும் அண்ணாமலையை அண்ணாமலை-விஜயா பேசாமல் இருந்ததற்கு பாட்டி சமாதானம் செய்து இருந்தார். பின் முத்துவுக்கு, 29 லட்சத்தை மனோஜ் மாதம் மாதம் 50 ஆயிரம் கொடுக்க வேண்டும், அந்த பொறுப்பை விஜயாவிடமே பாட்டி ஒப்படைத்து விட்டு கிளப்பி விடுகிறார்.

கடைசியில் விஜயா ரோகினிடம், உன் அப்பாவிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்து விடு என்று புது வெடியை போட்டு விடுகிறார். ரோகினி என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறார். பின் முத்து புது காரை வாங்கி வீட்டிற்கு வருகிறார். இந்த சமயத்தில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் மொட்டை கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அதைப் பார்த்து பயந்த மனோஜ், சாமியாரை பார்த்து நடந்ததை சொல்ல, அவர் சில பரிகாரங்களை செய்ய சொல்லி இருந்தார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோரும் கேள்வி கேட்க மனோஜ் பதில் சொல்லவில்லை.

சிறகடிக்க ஆசை:

மேலும், மீனா, வித்தியாசமான உணவை சமைத்துக் கொடுக்க, எல்லோருமே சாப்பிட்டு புகழ்ந்து பேசி இருந்தார்கள். ஆனால், முத்து மட்டும் போன் பேசிக்கொண்டு அதை கண்டுகொள்ளாமல் சென்று விட்டதால் மீனா வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம், ரோகினி தன் மகனின் பிறந்த நாளுக்காக துணி வாங்க கடைக்கு போகி இருந்தார். அதே கடைக்கு விஜயா சென்று இருந்தார். பின் ரோகினியை பார்த்த விஜயா, இங்கே என்ன? என்று கேட்க, அப்போது கடைக்காரர், உங்கள் மகனின் துணி பில் போட்டாச்சு என்று சொன்னவுடன் விஜயா, அதிர்ச்சியாகி என் மருமகளுக்கு மகனா? குழந்தையே இல்லையே என்று சொன்னார்.

சீரியல் கதை:

உடனே ரோகினி ஏதோ சொல்லி சமாளித்து அந்த கடைக்காரரை அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம், முத்து புடவை வாங்கி வந்து மீனாவை சமாதானம் செய்து விடுகிறார். நேற்று எபிசோடில், ரோகினி, கிரிஷ் பிறந்த நாளிற்கு அவரை பார்க்க சென்றிருக்கிறார். அங்கு கிரிஷ் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் ரோகினி செய்திருக்கிறார். அந்த சமயம் பார்த்து, முத்து-மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு போனார்கள். அதை பார்த்த உடனே ரோகினி ஒளிந்து கொள்கிறார். பின் புது துணியை கொடுத்து கிரிஷ்க்கு வாழ்த்துக்கள் சொல்லி அவரின் பாட்டியிடம் கிரிஷை பற்றி முத்து பேசுகிறார்.

நேற்று எபிசோட்:

என்ன சொல்வது என்று புரியாமல் கிரிஷ் பாட்டி தவித்தார். இறுதியில் ரோகினி பற்றிய உண்மையை முத்துவிடம் சொல்கிறார். ஆனால், ரோகினி தான் தன் மகள் என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோடில், ரோகினி என்று தெரியாமல் அவருக்கு ஆதரவாகவே முத்து பேசுகிறார். இருந்தாலும் குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களுடைய கடமை என்று அறிவுரை சொல்லி கிரிஷ் பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடி மகிழ்ந்து இருந்தார்கள். அதற்கு பின் முத்து- மீனா கிளம்பியவுடன் ரோகினி வீட்டிற்கு வந்து, நீ அவர்களுடன் பேசாதே. கோபமாக பேசினால் அவர்கள் வரமாட்டார்கள் என்று சென்று விடுகிறார்.

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் கிரிசை தத்தெடுத்துக் கொள்வது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா கோயிலில் சீட்டு குலுக்கி போட அதில் வேண்டாம் என்று வருவதால் கடவுளே சொல்வது போல இருக்கிறது என்று நினைத்து மீனா வருத்தப்படுகிறார். ஆனால், முத்து அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று அவருக்கு ஆறுதலாக பேசுகிறார். இன்னொரு பக்கம் விஜயாவின் நடன வகுப்பிற்கு ஆறு பேர் வந்து சேருவதால் விஜயா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் புதிதாக இரண்டு பேர் என்ட்ரி கொடுக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் இந்த புது நபர்களால் விஜயாவிற்கு பிரச்சனை வருமா? கிரிஷை மீனா தத்தெடுத்துக் கொள்வாரா? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

behindtalkies AMP · Quick view
View full