மலேசியா மாமா சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியான ரோகினி, உண்மையை அறிந்தாரா மீனா? சிறகடிக்க ஆசை

By subhashini · 1/12/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவுக்கு மண்டபத்தில் டெக்கரேஷன் செய்வதற்கு புதிய ஆர்டர் கிடைத்தது. அந்த இடத்திற்கு வந்த மீனாவை காதலிக்கும் நபர், முத்து சொல்லி தந்தது போல எதார்த்தமாக பேசினார். ஆனால், மீனா பெரிதாக அவரிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை. அதை பின் மனோஜ் கடையில் மந்திரித்த முட்டை வைத்திருந்தார்கள். இதை பார்த்து மனோஜ் ரொம்ப பயந்து விட்டார். பின் மனோஜ், ரோகினி இருவரும் மந்திரம் தந்திரம் செய்பவரை சந்தித்து பேசி இருந்தார்கள். அவர் பணத்தை பறிக்க இன்னும் பயமுறுத்தி பரிகாரம் செய்ய சொன்னார்.

மீனாவை காதலிக்கும் நபர், முத்துவை சந்தித்து நடந்ததை சொல்ல, வேறு ஒரு ஐடியா முத்து தந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ், கடையில் மந்திரத்தை முட்டை இருந்ததைப் பற்றி விஜயாவிடம் சொல்ல, அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் உங்களுக்கும் தான் பிரச்சனை இருக்கு, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தான் பரிகாரம் பண்ணனும் என்றார் மனோஜ். ஆனால், விஜயா முடியாது என்று மறுத்தார். அப்போது வெளியே வரும்போது பேன் கீழே விழ, விஜயா பயந்து விட்டார்.

சிறகடிக்க ஆசை:

மறுநாள் காலையில் மோட்டர் வேலை செய்யாததால் தண்ணீர் இல்லை. இதனால் மொத்த குடும்பமே குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தார்கள். அப்போது பிளம்பர், ஸ்விட்ச்சை ஆன் பண்ணாதீர்கள் என்றார். ஆனால், மனோஜ் இதை கவனிக்காமல் ஸ்விட்ச்சை போட்டு விட்டார். அந்த சமயம் பார்த்து விஜயா ஸ்விட்ச்சில் கை வைத்ததால் ஷாக் அடித்தது. ஒவ்வொருவருமே விஜயாவை தொடத்தொட எல்லோருக்குமே ஷாக் அடித்தது. இதை பார்த்து மீனா ஷாக்கில் நின்று விட்டார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் எல்லோருக்குமே கரண்ட் ஷாக் அடித்துக் கொண்டிருப்பதால் மீனா பூரிக்கட்டை வைத்து அடிக்க, எல்லோருமே கீழே விழுந்தார்கள். அந்த சமயம் வந்து முத்து, என்ன ஆச்சு? என்று கேட்டதற்கு, நடந்ததை மீனா சொன்னார். உடனே விஜயா, என்னை பழி வாங்க தான் இப்படி எல்லாம் நீ அடித்தாய் என்று சொல்ல, மீனா செய்தது தான் சரி. நீங்கள் அவள் மீது பழிப்போடாதீர்கள் என்றார் முத்து. பின் யாரு ஸ்விட்ச்சை ஆன் செய்தது என்று கேட்க, நான் தான் என்று மனோஜ் சொன்னவுடன் எல்லோருமே அவரை முறைத்தார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் மீனாவிற்கு மண்டபத்தில் டெக்ரேசன் செய்ய புதிய ஆர்டர் கிடைத்தது. இதை வீட்டில் எல்லோரிடமும் மீனா சொல்லி சந்தோஷப்பட்டார். ஆனால், வழக்கம் போல் விஜயா கிண்டல் அடிக்க, அண்ணாமலை திட்டி இருந்தார். இந்த சந்தோஷத்தில் எல்லோருக்குமே பிரியாணி சமைப்பதற்காக தன்னுடைய தோழியிடம் உதவி கேட்டார் மீனா. அவரும் கறி வாங்க ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போனார். ஆனால், அங்கு மலேசியா மாமா தான் கறி வெட்டி இருந்தார். மீனாவை பார்த்தவுடன் அவர் முகத்தில் துணியை போட்டு மறைத்துக் கொண்டார்.

https://youtu.be/gN7EwzbXZJk?si=fc8amok8UrMvBwST

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் மலேசியா மாமா, மீனா கறி வாங்க கடைக்கு வந்த விஷயத்தை ரோகினி- வித்யாவிடம் சொல்கிறார். இப்போது ரோகினி அதிர்ச்சியாகி, மீனா பார்த்து விட்டாளா? என்று கேட்கிறார். அதற்கு மலேசியா மாமா, அவள் என்னை பார்க்கவில்லை. இதே போல் என்னால் நடிக்க முடியாது. உங்களுக்காக பாவம் என்று தான் நான் நடிக்க வந்தேன். உங்களால் நான் மாட்டிக் கொள்ளும் நிலைமை வந்தால் உண்மையை சொல்லி விடுவேன் என்கிறார். இதைக் கேட்டவுடன் ரோகினி அதிர்ச்சியாகிறார்.

behindtalkies AMP · Quick view
View full